- திர்மிதிக்காக இஸ்லாமிய கல்விச் சங்கத்திடம் ஒரு லட்சரூபாய் ராயல்டி வாங்கியது உண்மையா? இல்லையா?
- ஜக்கரியாவிடம் 5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] வாங்கியது உண்மையா? இல்லையா?
- இந்த தொகை யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்ற வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?
- ஹாமித் பக்ரி வழங்கிய ஷேர் ஹோல்டர்கள் பட்டியலை வெளியிட்டு, இன்னினாருக்கு நாங்கள் பணத்தை வழங்கிவிட்டோம்; இன்னின்னாரை ஹாமித்பக்ரி ஏமாற்றி விட்டார் என்று வெளியிடவேண்டும்.
- திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி நீக்கப்பட்டார் என்பதற்கு திர்மிதி வெளியான நாளையும், ஹாமித்பக்ரி நீக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து நிரூபிக்கத் தயாரா?
- ஹாமித் பக்ரியிடம் அபூதாவூதுக்காக லுஹாவும், திர்மிதிக்காக பீஜேயும் வாங்கிய தொகையையும், திர்மிதி விற்று ஜக்கரியா தந்த தொகையையும் மறைத்த நோக்கம் என்ன?
ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [திருத்தப்பட்டது][part 7]
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6]
ஞாயிறு, 15 ஏப்ரல், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 5]
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 4]
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயை நோக்கி,
- இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு தலைவராக வீற்றிருக்கும் சம்சுல்லுஹா ரஹ்மானி.
- இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு உறுப்பினராக வீற்றிருக்கும் எம்.எஸ்.ஸுலைமான்.
- இன்று பீஜேயின் தணிக்கைக் குழு தலைவராகவும், வருங்கால செயல் தலைவராகவும் அரியணை ஏறவுள்ள எம்.ஐ.ஸுலைமான்.
வியாழன், 29 மார்ச், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 3]
- வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற பைலாவையுடைய, பீஜேயும் அங்கம் வகிக்கும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மவ்லவி ஹாமித்பக்ரி, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் மவ்லவி சைபுல்லாஹ் ஹாஜா ஆகிய இருவர், வெளிநாட்டு நிதி பெறும் நோக்கில் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- இருவரும் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
- அதற்காக மவ்லவி இஸ்மாயில் ஸலபி தங்கியிருந்த அறையில் திட்டங்கள் தீட்டியுள்ளனர்.
- தனக்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் சம்மந்தமில்லாத இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில், அதன் அங்கத்தவர்களான ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் வெளிநாட்டி நிதி பெறும் நோக்கில் ஆலோசனை செய்ததையும், அதற்காக இலங்கையில் பரிந்துரைக் கடிதம் பெற்றதையும், வெளிநாட்டிற்கு நிதி பெறும் நோக்கில் கடிதங்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டுள்ள பீஜே, இந்த மூன்று விஷயங்கள் பீஜேவுக்கு தெரிந்தே நடந்ததா? அல்லது பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டரா? என்று சொல்லவேண்டும்.
- [வெளிநாட்டு நிதி பெற முயற்சிக்கும்] இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொல்வது உண்மையானால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்று பீஜே சொல்வாரா?
- ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், தவ்ஹீத் ஜமாஅத் முடிவை ஏற்று அவர்கள் வெளிநாட்டு நிதி பெறும் முடிவை கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொன்னது பொய்யா?
- நிர்வாகக்குழு முடிவுக்குப் பின்னரும் ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், நிர்வாக்குழு முடிவை மீறிய அவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன?
- ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய்யாகி விடுகிறது. அப்படியானால், அபூதாவூத் மொழியாக்கம் ஷேர் பிடிப்பதற்காக இவர்கள் தனிப்பயணம் மேற்கொண்டார்கள் என்று பீஜே சொல்வாரா?
- ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்றால், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குவைத் சென்ற அந்த இரு தாயிகள் பெயரை சொல்லத் தயக்கம் ஏன்?
வெள்ளி, 23 மார்ச், 2012
அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 2]
ஞாயிறு, 18 மார்ச், 2012
அயல்நாட்டு நிதியும்; அப்பட்டமாக பொய் சொல்லும் பீஜேயும்!
சனி, 17 மார்ச், 2012
சொந்த செலவில் கட்டிய பள்ளிவாசல்கள்; பீஜே அன்றும் இன்றும்!
சனி, 10 மார்ச், 2012
வெளிநாட்டு நிதி; பீஜே அன்றும்-இன்றும்!
- மக்களுக்கும் ஜமாத்திற்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்.
- மக்களுக்கு கணக்கு காட்ட மறுக்கும் நிலை ஏற்படும்.
- கணக்கற்ற பொருளாதாரம் காரணமாக ஆடம்பர ஜமாஅத்தாக மாறிவிடும்.
- தாவா பணிகளை விட எப்படி வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் சேர்க்கலாம் என்பதே குறிக்கோளாகப் போய்விடும்.
- அரசாங்கத்தின் தேவையற்ற கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
- பண உதவி செய்யும் நிறுவனங்களின் கொள்கைக்கு எதிராக வாய்திறக்கக் கூடாது என்ற புதுப் பாலிசி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வெள்ளி, 2 மார்ச், 2012
குர்'ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்; பீஜே அன்றும்-இன்றும்!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
மார்க்கத்தை தூய வடிவில் சொல்லக் கிளம்பிய அறிஞர் பீஜே அவர்கள், தனது ஆய்வின் உச்சகட்டமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் சிலவற்றை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனுடன் மோதுகின்றன என்றும், வேறு சில காரணங்கள் மற்றும் உவமானங்களை கூறி நிராகரிப்பதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்'ஆனோடு ஒரு போதும் மோதாது என்பதும், குர்'ஆனோடு முரண்படுவது போல் தோற்றமளித்தாலும் அந்த ஹதீஸை சரியான வகையில் விளங்க வேண்டுமே தவிர, ஹதீஸை ஒருபோதும் நிராகரிக்கக் கூடாது என்பதுதான் அறிஞர் பீஜேயின் முந்தைய நிலைப்பாடக இருந்தது. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பீஜெயிக்கு அன்று இருந்த உறுதியை அறிய பல ஆதாரங்கள் இருந்தாலும் குறிப்பாக ஒன்றைத் தருகிறோம்.
பிப்ரவரி 95அல்ஜன்னத் மாத இதழில், ''இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அறிஞர் பீஜே எடுத்து வைத்த ஹதீஸில் 'ஏனெனில் இமாம் உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் மத்தியில் தொடர்பாளர்களாக உள்ளனர்'' என்ற வரியும் உள்ளது. இதையொட்டி, முஹம்மது கஸ்ஸாலி என்ற சகோதரர் ஏப்ரல் 95 அல்ஜன்னத் இதழில் கேள்வி எழுப்புகிறார். அவர் தனது கேள்வியில், 'இமாம் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பாளராக உள்ளார் என்ற ஹதீஸை வெளியிட்டுள்ளீர்களே! இது புரோகிதத்தை காட்டவில்லையா? என்று கேட்க, அவருக்கு பதிலளித்த பீஜே, ''புரோகிதத்தைக் காட்டுகிறது என்று அந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும் என்கிறீர்களா? புரோகிதத்தை காட்டாத வகையில் விளங்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு அடுத்து பீஜே சொல்வதை கவனியுங்கள். ''ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமனதாக இருக்கும் போது அதை நிராகரிக்க காரணங்களை தேடவேண்டாம்' என நேத்திய்யடியாக சொல்லி, ஹதீஸை குர்'ஆனுக்கு முரண்படாமல் விளங்க வேண்டுமே தவிர நிராகரிக்க கூடாது என்று ஆணித்தரமாக கூறுகிறார் அறிஞர் பீஜே.
பீஜேயின் இன்றைய நிலை என்ன? ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று அவரே ஒருபுறம் ஒப்புக்கொள்கிறார். மறுபுறம் அதை நிராகரிக்க அவரே காரணங்களை தேடுகிறாரா இல்லையா? இறைவனுக்கும்-மனிதர்களுக்கும் இடைத்தரகர்களாக இமாம்கள் திகழ்கிறார்கள் என்ற பாரதூரமான அர்த்தம் தரும் ஹதீஸை கூட, புறக்கணிக்காமல் பக்குவமாக விளங்கவேண்டும் என்று அன்று சொன்ன பீஜே, இன்று எடுத்தேன் கவிழ்த்தேன் என ஹதீஸ்களை படுகுழியில் தள்ளுகிறாரா இல்லையா? குர்'ஆனுக்கு முரண்படுகிறது என்று இவராலும் இவரது தரப்பு அறிஞர்களாலும் கடும் ஆய்வுக்கு[!] பின் எழுதப்பட்ட ''ஹதீஸ்கள் குர்'ஆனுக்கு முரண்படுமா? என்ற நூலில் சில ஹதீஸ்களை பட்டியலிட்டு இவைகள் குர்'ஆனோடு மணிக்கு பல்லாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதுவதால் குர்'ஆன் சேதமடையக் கூடும். எனவே இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அதை நிராக்ரிகக்வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தாரே! இதிலாவது பீஜெயால் உறுதியாக நிலைத்து நிற்க முடிந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
மேற்கண்ட நூலில், குர்'ஆனுடன் மோதுவதாக மேற்கோள் காட்டப்பட்ட, பீஜெயாலும் அவர் தரப்பு அறிஞர்களாலும் பல மேடைகளில் முழங்கப்பட்ட ஹதீஸ் இன்று சரியான ஹதீஸாக 'ஞானஸ்தானம்' பெற்றுள்ளதை கீழே படியுங்கள்;
மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.
10. பயணத்தொழுகை
அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (350)
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயாணத்தொழுகை எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு ரக்அத்தாகவே இருந்தது என்றக் கருத்தைத் தருகிறது. ஆனால் திருக்குர்ஆன் பயணத்தொழுகையைப் பற்றி பேசும்போது நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டு ரக்அத்துகளாக பயணத்தொழுகை சுருக்கப்பட்டது என்று கூறுகிறது.
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
அல்குர்ஆன் (4 : 101)
முழுமையான ஒன்றிலிருந்து தான் சுருக்கமுடியும். பயணத்தில் தொழுகையை சுருக்குவதாக இருந்தால் முதலில் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று சட்டம் இருந்திருக்க வேண்டும். இந்த நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டாக பயணத்தில் தொழுகை குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தொழுகையை குறிப்பிடும் போது நான்கிலிருந்து சுருக்கப்பட்டது என்று கூறாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்தே பயணத்தொழுகை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இரண்டுரக்அத்துகளாகவே இருப்பதைப் போன்று கூறியுள்ளார்கள். எனவே இவர்கள் கூறும் கருத்து குர்ஆனிற்கு முரண்பாடாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறினோம்.
இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் இதற்கு கூறிய விளக்கத்தையும் நாம் ஆராய்ந்ததன் மூலம் கிடைத்த விளக்கத்தையும் வைத்துப் பார்த்தால் இந்த ஹதீஸை முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் கூறும் விளக்கத்திற்கு முறையான ஆதாரங்கள் இருப்பதால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.
சத்தியத்தை தெரிவது தான் நம்முடைய நோக்கமே தவிர நாம் கூறிய கருத்துக்களை எப்படியாவது சரிகாண வேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கமாட்டோம். எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை பின்வரும் முறையில் முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும் போது கடமையானத் தொழுகை இரண்டு ரக்அத்துகளாக இருந்தது. மதீனாவிற்கு அவர்கள் வந்தவுடன் நான்கு ரக்அத்துகளாக மாற்றப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(மக்காவில்) தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. மேலும் பிரயாணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று) விட்டுவிடப்பட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (3935)
மதீனாவிற்கு வருவதற்கு முன்பு மக்காவில் இரண்டு ரக்அத்துதான் கடமையாக்கப்பட்டிருந்தது என்றக் கருத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் சொல்லவில்லை. அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்களும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை லுஹர் தொழுகையை இரண்டு இரண்டாகத் தான் தொழுதுவந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 6 பக்கம் : 143
தொழுகையை இரண்டாக சுருக்கிக் கொள்ளுவதற்கு அனுமதியளிக்கும் வசனம் மதீனாவில் இறங்கியது என்றக் கருத்தை இப்னுல் அசீர் தவ்லாபீ மற்றும் சுஹைலீ போன்ற அறிஞர்கள் பதிவுசெய்துள்ளார்கள் .
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் தொழுகை நான்காக மாற்றப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் இரண்டு ரக்அத்தை சுருக்கிக்கொள்ளலாம் என்று வசனம் இறங்கியது. இதனால் ஊரில் நான்கு ரக்அத்துகளாகவும் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் தொழுகவும் கடமையாக்கப்பட்டது. இறுதியில் முடிவாக்கப்பட்ட இந்த நிலையைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் முரண்பாடு வராது.
தொழுகை நான்கு ரக்அத்துகளாக மாற்றப்ட்டது. பின்பு வசனம் இறங்கியதால் இரண்டாக குறைக்கப்பட்டது என்ற விளக்கம் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இல்லாததால் அது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறினோம். ஆனால் இந்த விளக்கம் வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிவிட்டதால் முரண்பாடு எதுவும் இல்லாமல் இதை விளங்கிக்கொள்ள முடியும்.
முதலில் இரண்டு ரக்அத் கடமையாக இருந்தது. மதீனாவிற்கு வந்த உடன் நான்காக மாற்றப்பட்டதால் முன்பிருந்த தொழுகையை விட இரண்டு ரக்அத் அதிகமாக்கப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் குறைத்துக்கொள்ளும் படி வசனம் இறங்கியதால் மதீனாவில் இருக்கும் போது பயணத்தில் இரண்டு ரக்அத் தொழவேண்டும் என்ற பழைய சட்டம் இறுதியாக அப்படியே வைக்கப்பட்டுவிட்டது என்பதே ஆயிஷா (ரலி) அவர்களுடைய கூற்றின் விளக்கம்.
முரண்பாடு நீங்கிவிட்டதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளலாம்.சனி, 25 பிப்ரவரி, 2012
சுவனத்தில் ஆதம்[அலை]-ஹவ்வா[அலை] ஆடை அவிழ்ந்ததா? பீஜே அன்றும்-இன்றும்!
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான். அல்-குர்'ஆன் 7 ;22
பரிமாணம்;1 இந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று திருக்குர்ஆன் 2:35, 7:19,20,22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் திருகுர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென் பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம்(அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். திருகுர்ஆனிலும், நபிமொழியிலும் கூறப்படாததைக் கூறுவோர் இறைவன் பெயரில் இட்டுக் கட்டிய குற்றத்தைச் சுமப்பவர்களாவர்.
பரிமாணம்;2 இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்கவில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர்களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது சரியாகும்.
பரிமாணம்;3 ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.''
முதல் பரிமாணத்தில் அது எந்த மரமாக இருந்தால் நமக்கென்ன என்கிறார். இரண்டாவது பரிமாணத்தில் அது பாலுணர்வை தூண்டிய மரம் என்கிறார். மூன்றாவது பரிமாணத்தில் அது அவர்களின் வெட்கத்தலங்களின் தனித்தன்மையை உணர்த்திய மரம் என்கிறார். இப்போதைய தனது பரிமாணங்களுக்கு பீஜே ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். அது இதுதான்;
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.(20:118)
பார்த்தீர்களா! இந்த வசனத்தில் அல்லாஹ் சுவனத்தில் நிர்வாணமாக இருக்கமாட்டீர் என்று சொல்கிறான். பிறகு எப்படி ஆதம்-ஹவ்வா நிர்வானமகியிருப்பார்கள் என்று கூறுகிறார். அறிஞர் பீஜேயின் வேலையே முன்னால் உள்ள வசனங்களையும், பின்னால் உள்ள வசனங்களையும் விட்டுவிட்டு தனக்கு தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டுவதுதான். மேற்கண்ட வசனத்திற்கான விளக்கம் பெற எங்கும் போக வேண்டியதில்லை. பீஜே விட்டுவிட்ட இதையொட்டிய வசனங்களை சேர்த்து பார்த்தாலே விளங்கிக் கொள்ள முடியும்.
அப்பொழுது "ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர். (20:117 |
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர். (20:118) |
"இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிளில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்). (20:119) |
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான். (20:120) |
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (20:121) |
பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான். (20:122) |
பீஜே சொல்வது போல் வெறுமனே இறைவன் நிர்வாணமாக இருக்க மாட்டீர் என்று மட்டும் சொல்லவில்லை. ஆதம் தம்பதிகளே! இந்த சுவனத்தில் நீங்கள் பசியுடனோ, தாகத்துடனோ, வெளியில் கஷ்டப்பட்டுக் கொண்டோ இருக்கவேண்டியதில்லை என்றும் சொல்லும் இறைவன் நிர்வாணமாகவும் இருக்கமாட்டீர்கள் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? ஆதம் தம்பதிகளுக்கு சுவனத்தில் செய்து கொடுத்துள்ள வசதி வாய்ப்புகளை கூறுகின்றான். அந்த வசதி வாய்ப்புகளை அனுபவித்த நிலையில், ஆதம் ஹவ்வா தம்பதிகள் மாறு செய்ததால் அங்கே நிர்வாணமாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் அறிஞர் பீஜே குழம்புவதும்-குழப்புவதும் ஏன்? பீஜேயின் கூற்றுப்படி ஆதம் அலை, ஹவ்வா அலை ஆகியோருக்கு சுவனத்தில் நிர்வாணமே இருக்ககூடாது என்றால் அவர்கள் தாம்பத்தியத்திலும் கூட நிர்வாணம் இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுமே! அதற்கு என்ன பதில் சொல்வார்? அவ்விருவருக்கும் தாம்பத்தியம் தடை செய்யப்பட்டது என்று கூறுவரா?
இதுபோக, ஆதம்-ஹவ்வா ஆடை அவிழ்ந்தது என்ற அறிஞர்களின் கருத்து தவறு என்று இன்று சொல்கிறாரே! அதே பீஜே அவர்கள், அல்ஜன்னத் டிசம்பர் 94 இதழில், 'நிர்வாணமாக குளிக்கலாமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது,
''ஆதம் ஹவ்வா இருவரும் தடையை மீறி விலக்கப்பட்டதை உண்டவுடன் அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. நிர்வாணிகளாயினர்.உடனே சொர்க்கத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலானார்கள் என்ற விபரம் 7 ;22 20;121 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது. மனிதர்கள் குறிப்பாக நபிமார்கள் தம் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளும் இயல்பினராகவே உள்ளனர் என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். கணவன் மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்த நிலையில், வேறு எவரும் இல்லாத நிலையில் இறைவன் முன்னிலையில் வெட்கப்பட்டுக்கொண்டே ஆதமும் ஹவ்வாவும் தங்களை மறைந்துக் கொண்டனர்.'' என்று பதிலளித்துள்ளார்.
அதாவது இந்த பதிலில் ஏற்கனவே உறுப்பும் இருந்து, உணர்ச்சியும் இருந்து, உறுப்பின் தனித்தன்மைகளையும் உணர்ந்துள்ள மனிதன் ஒருவர் தான் கேட்கின்றார். நான் ஆடையின்றி குளிக்கலாமா என்று? உடனே அறிஞர் பீஜே, ஆதம்-ஹவ்வா அலை தம்பதியைப் பார்த்தீர்களா? அவர்கள் யாருமே இல்லாமல் தனித்திருந்த போதும், நிர்வாணமானவுடன் தங்களை மறைத்துக் கொண்டார்கள். இதுதான் மனித இயல்பு என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கோ அல்ஜன்னத்தில் கூறியதற்கு மாற்றமாக, மனமுரண்டாக அடுத்தடுத்த மூன்று பரிமாணங்களைக் கண்டிருக்கிறார். இன்னும் எத்தனையோ?
சனி, 19 நவம்பர், 2011
அழைப்பு பணி: அத்துமீறும் அழைப்பாளர்கள்
தஃவா (அழைப்பு)ப்பணி மகத்தான பணியாகும். மரணத்தின் பின்னர் ஸதகா ஜாரியாவை – நிலையான தர்மத்தைப்- பெற்றுத்தரும் இப்பணியை அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்ட நபிமார்கள், இறைத்தூதர்கள், அவர்களின் வழியை அறிந்த நன்மக்கள் செய்தார்கள்.
அல்லாஹ்தான் வானவர்களிலும், மனிதர்களிலும் இருந்து தூதர்கைளத் தெரிவு செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனும், பார்ப்பவனும் (அல்ஹஜ். வச: 75) என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
இந்த மகத்தான பணி செய்யும் தாயிக்கள் தஃவாக் களத்தை கொலைக் களமாக, விமர்சனக் களமாக, பிற சகோதர முஸ்லிமின் மானத்தை போக்கும் களமாக, பித்அத் களமாக, இரு கருத்திற்கும் சாதானகமான மஸாயில்களைக் கூறி பிளவுக்களமாக மாற்றி அமைக்கின்றனர் என்பதை சம கால நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றது.
காடையர்கள் மயமாகிப் போன தஃவாக் களம்
நபிமார்கள் தமது சமூகத்திற்குப் பிரச்சாரம் செய்கின்ற போது அவர்கள் சார்ந்த சமூகத்தவர்களால் நோவிக்கப்பட்டார்கள். நையப்புடைக்கப்பட்டார்கள். அதுமாத்திர மின்ற அவர்கள் கொலையும் செய்யப்பட்டனர். இது பற்றி இஸ்லாமிய அழைப்பாளர்கள் நன்கு அறிவார்கள்.
இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்கும் பல அமைப்புக்கள் நவீன காலத்தில் களத்தில் இறங்கி இருக்கின்றன. இவற்றில் உள்ள சில அழைப்பாளர்கள் தம்மை முன்மாதிரி அமைப்பாக, பேணுதல் உள்ள அமைப்பாக, தக்வாவின் சின்னமாக சித்தரித்துக் கொண்டாலும் காடையர்களாக மாறி மற்றொரு சகோதர அமைப்பினைத் தாக்குவோராக, அவர்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவோராக, இருக்கின்றனர். இதன் காரணமாக பலர் போலிஸ் நிலையங்களுக்கும், நீதி மன்றங்களுக்கும் சென்றுவருவேராக இருக்கின்றனர். இது தான் நபிமார்கள் செய்த தியாகமோ தெரியவில்லை.
தக்லீத் (தனிமனித துதி) மயமாகிப் போன தஃவாக்களம்
மத்ஹபுவாதிகளை மதம்மாறியோர் போன்று விமர்சித்தவர்கள் தமக்கென ஒரு கூட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவதைப் பார்க்கின்றோம். எல்லா மத்ஹபும் வழிகேடு, எனது மத்ஹப் மாத்திரம் சரி, நானே அறிஞன், நானே பொது முஃப்தி, எனது கூற்றே நூறுவீதம் சரியானது என்ற நிலையில் செயற்படும் ஒருவரின் பின்னால் ஆராய்ச்சி இல்லாத, கண்ணை மூடிக்கொண்டு செல்கின்ற குருட்டு பக்தர் கள் கூட்டம் ஒன்று குர்ஆன், சுன்னாவின் பெயரில் தக்லீத்வாதிகளாக மாறி, சிந்திக்கும் திறனற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்;.
தக்லீத்வாதிகளை விமர்சிக்கும் பல தவ்ஹீத் முகல்லித்கள் சீடி தாயிக்களாக, பிறரின் நாவில் பேசுபவர்களாக, கேள்விப்பட்டதை எல்லாம் நம்பும், பிரச்சாரம் செய்யும் தாயிக்களாக இருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தவ்ஹீத் தாயி ஒருவர் அல்குர்ஆன் குறிப்பிடும் ‘லஹ்முல் கின்ஸீர்” ‘பன்றியின் மாமிசம்” என்ற பொருளை வைத்துக் கொண்டு புதிய விளக்கம் சொன்னார். பன்றியின் மாமிசம் என்றுதான் குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதன் பாகங்கள் பற்றிக் கூறவில்லை, அல்லாஹ் ஏன் அப்படிச் சொன்னான் தெரியுமா? விஞ்ஞானிகள் மனிதனுக்கு பன்றியின் இதயம் மாத்திரம் பொருந்திப் போவதாக கண்டு பிடுத்துள்ளனர்.
பன்றியின் இதயத்தை வருங்காலத்தில் மனிதனுக்குப் பொருத்திக் கொள்ளலாம் என்பதை உணர்த்தவே பன்றியின் மாமிசம் என்று கூறப்பட்டுள்ளது என்றார். அத்துடன், இப்படி ஒரு செய்தியை பிற்காலத்தில் உலகுக்குச் சொல்லத்தான் என்றார். அதனுடன் நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை பன்றியின் ஏனைய பாகங்களைப் பேணுதல் அடிப்படையில் நாம் விட்டுவிட வேண்டும் என்றும் தொடர்ந்தார். இவரின் ஆச்சரியமிக்க ஆய்வுதான், அவரது மத்ஹப்வாதிகளுக்கு பூரிப்பை உண்டு பண்ணியது.
இதையும் சரி என்று நம்பி பிரச்சாரம் செய்த, அவரது கருத்துக்கு வக்காலத்து வாங்கிய அவரின் பக்தர்கள் இன்றும் உயிருடன் இருக்கின்றனர்.
ஆனால் அவர் இலங்கை காலியில் ஒரு பயான் நிகழ்ச்சியில் அதை மழுப்பிப் பேசி, வாபஸ் ஆகாமல் வெளியேறினார். அதற்கு முன்னர் இதை நாம் தவறு என்று சொன்னபோனது இந்த மாபெரும் அறிஞனா தவறாகச் சொல்லுவார் என்றனர் அவரின் வாய்வழி நடப்போர்.
இதைத்தான் ஒரு தக்லீதில் இருந்து மற்றொரு தக்லீதுக்கு மாறுவது என்பார்கள். இந்த தக்லீத்வாதிகள் இவர் ஒரு பத்வாவைச் சொல்லும் வரை பார்த்திருந்து அவர் சொன்ன பின்னால் முஜ்தஹித்களாக மாறி சமுதாயத்தில் சக்கைப்போடு போடுவார்கள்.
அவசியமற்றதை அவசியமாக்கும் தாயிக்கள்
தாயிக்கள் எனப்படுவோர் சமூகத்திற்குத் தேவையான அதி முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை இனம் கண்டு முன் வைக்க வேண்டும். இதையே இறைத் தூதர்கள் செய்தார்கள். அதுவும் முஸ்லிம்கள் மத்தியில் தஃவாச் செய்யப்படுகின்ற காரணத்தால் ஒரு சமூகத்தில் உள்ள மக்களின் நிலை பற்றியும், அங்கு நடை பெறும் பாவங்கள் பற்றியும், அவற்றின் தராதரம் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும்.
அதே போன்று மத்ஹபு நூலில் இவ்வாறு உள்ளது. சர்வதேசப் பிறைதான் சரி, லோகல் தவறு, ஸகாத் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை, தங்க வளையல்கள் அணிவது ஹராம், குத்பா மிம்பர் படிகள் இரண்டுதான் இருக்க வேண்டும், காஃப் அத்தியாயம் ஓதாமல் ஜும்ஆச் செல்லுபடி அற்றது, இரண்டாவது ஜமாஅத் ஒரு பித்அத், ஜனாஸாத் தொழுகையில் இருகைகளையும் உயர்த்துவது பச்சை பித்அத், பெண்கள் முகத்தை மூடுவது ஹராம், இப்படி பல விசயங்களை பொதுமக்கள் மன்றத்தில் பேசி பொது மக்களை சீரழிக்கும் தாயிக்களையும் பார்ப்பீர்கள்.
அல்லாஹ்வை சரியாக வணங்காத மக்கள் நூஹ் நபி (அலை) அவர்களின் காலம் முதல் நபி (ஸல்) அவர்கள் காலம் வரை வாழ்ந்த மக்களில் இருந்தார்கள். அது பற்றி அழுத்தம் பிரயோகித்த நபிமார்கள், அந்த சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட கொடிய பாவங்களில் இருந்து மக்களை தடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
இதற்கு ஷுஐப் நபியின் வரலாற்றையோ, லூத் நபியின் வரலாற்றையோ பார்க்க முடியும். அளவு நிறுவையில் செய்யப்பட்ட அநீதியை ஷுஐப் (அலை) அவர்கள் கண்டித்தார்கள், ஓரினச் சேர்க்கையில் மூழ்கி இருந்த தனது சமுதாயத்தவரை நபி லூத்(அலை) அவர்கள் கண்டித்ததைப் பார்க்கின்றோம். அதே போன்று அனைத்து நபிமார்களின் வரலாறுகளையும் பாருங்கள்.
முஆதே! நீ வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (அதிகமாக வாழும்) எமன் தேசம் செல்கின்றாய். அவர்களை முதல் முதலாக லாயிலாஹ இல்லல்லாஹ், நான் அல்லாஹ் தூதர் என்ற கோட்பாட்டின் பக்கம் அழைக்க வேண்டும் என்று நபி(ஸல்) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களுக்கு கூறியதைப் பார்த்தாலும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததையே பிரச்சாரத்தின் அடிப்படையாகக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.
பண்புகள் பாழடிக்கப்படும் பணிக்களம்
இஸ்லாமிய அழைப்புப் பணி அல்லாஹ்வின் நேசர்களான நபிமார்கள் அவனது வழிகாட்டலின் பேரில் செய்த உன்னதமான பணியாகும். இப்பணி அழகிய பண்புகளைக் கொண்டதாக இருக்கின்ற போது தான் தராதரமும், மேன்மையும் அடைகின்றது. இல்லை எனில் களத்தில் இருந்து மக்கள் வெருண்டோடுவதையும், தாயிக்கள் மக்களால் விமர்சிக்கப்படுவதையும் முடிவில் காண முடியும்.
ஹிர்கல் மன்னர் அபூ சுப்யான் அவர்களிடம் அந்த முஹம்மத் எதை ஏவுகின்றார் எனக் கேட்ட போது உங்கள் மூதாயதையர் கூறுவதை விட்டு விடும்படியும், நல்ல பண்பாடுகளைக் கொண்டும், உறவினர்களுடன் இணைந்து வாழும்படியும் கட்டளை இடுகின்றார் என அபூ சுப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னர் கூறினார் (புகாரி).
அகீதா (அடிப்படை நம்பிக்கை), அக்லாக் (பண்பாடுகள்) ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் மக்களை அழைத்தார்கள் என்பதை ஏட்டுச் சுரக்காயாக அறிந்து வைத்துள்ள பல தாயிக்களையே தஃவாக்களத்தில் பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் தூதரின் அமைப்பில் அடையாளம் காணப்பட்ட முனாபிக்கள், அடையாளம் காணப்படாத முனாபிக்கள் என இரு சாராரும் இருந்துள்ளனர். பெயருக்கு தோழர்கள் என இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அப்துல்லாஹ் பின் உபை என்ற முனாபிக்களின் தலைவன் மரணித்த போது அவனது இறுதிக் கடமையில் நபி (ஸல்) அவர்கள் கலந்திருக்கின்றார்கள். தொழுகை நடத்த முயற்சியும் செய்தார்கள். அல்லாஹ் முனாபிக்களுக்கு தொழுகை நடத்துவதோ, பிரார்த்திப்பதோ கூடாது என்று கட்டளையிட்டதும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். (புகாரி).
இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்த அறிஞர்கள் பலர் கலந்து கொள்ளும் கருத்தரங்குகளில் தவ்ஹீத் மௌலவி கலந்து கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் தென்னிந்திய இஸ்லாத்தில் அது ஹராமாக்கப்பட்டிருக்கின்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற புதிய அமைப்பில் உள்ளவர்கள் தாங்கள் ஏற்கனெவே இருந்த அமைப்பைப்பற்றி பொதுக்குழு கூட்டத்தில் இவ்வாறு கூறினர். இவர்கள் பிரபலமான தாயி, இடம் இருந்து பிரிந்தே புதிய அமைப்பை தோற்றுவித்தனர் என்பதை அனைவரும் அறிவர்.
வணக்கங்களில் குறை செய்யும் தஃவாக் களம்.
தஃவாக்களத்தின் சோதனை மிகுந்தது என்று இதை வர்ணிக்க முடியும். நபி(ஸல்) அவர்கள் இரவு வணக்கம் செய்யுமாறு ஆரம்பத்தில் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். ஒரு வருடம் அதை அவர்களும், அவர்களின் தோழர்களும் கடைப்பிடித்தார்கள் (நூல் : முஸ்லிம்).
தாயிக்கள் எனப்படுவோர் தமது பண்பாடுகளை அல் குர்ஆனில் இருந்தும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இருந்தும் படிக்கின்ற போதுதான் இரவு வணக்கத்தில் இன்பம் காண்பார்கள். ஒரு பெரியார் ஒரு இரவில் பல முறை குர்ஆனை ஓதினார் என்பதையும், பல ரகஅத்துக்களைத் தொழுதார் என்பதையும், தஸ்பீஹ் தொழுகையையும் இன்னும் ஆதரமற்ற செயற்பாடுகளையும் இவ்வாறு செய்யலாமா என நியாயமாக விமர்சிக்கும் தாயிக்கள் நான் எத்தனை வசனங்களை, அத்தியாயங்களை ஓதி இருக்கின்றேன். நபிலான வணக்கங்களான ழுஹா, இரவு வணக்கமாகக் கொள்ளப்படும் தஹஜ்ஜுத், மற்றும் வித்ர், தொழுகின்றேனா என தம்மைப் பற்றி ஒரு போதும் கேள்வி எழுப்பி இருப்பார்களோ தெரியவில்லை.
குறைகளைத் தேடும் தாயிக்கள்
ஒரு மனிதனின் மானம், மரியாதை, அந்தஸ்து யாவற்றையும் புனிதமானது என இஸ்லாம் கூறி இருக்கின்றது. கலிமாவை இறை திருப்தியை நாடிக்கூறிய அனைவரின் மானம் மரியாதை என்பது இதன் விளக்கமே தவிர தவ்ஹீத் அடிப்படையைக் கொண்ட தாயிக்களின் மானம், மரியாதை என்பது பொருள் அல்ல.
சகோதர முஸ்லிமின் மானத்தை காற்றில் பறக்கவிடுவதையும், சீடிக்களாக, நோட்டீஸ்களாக வெளியிடுவதையும் தஃவாப் பாதையில் ஒரு மைல் கல்லாக நினைத்து செயற்படும் தாயிக்கள். இருக்கின்றார்கள். எல்லை மீறிச் (சிந்திப்பவர்கள், செயற்படுபவர்கள்) அழிவார்கள் (முஸ்லிம்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதை உண்மைப்படுத்தும் குர்ஆன் சுன்னாவைப் போதிப்பதாகக் கூறுவோரின் களம் மாற்றம் பெற்றுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
வளவளப்பவர்கள் (பெரும் பேச்சு பேசுவார்கள்) அழிவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது இவர்களைத்தான் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
சத்தியத்தை அசத்தியமாக்கும் தாயிக்கள்
சத்தியத்தை உரைப்பது ஆலிம்களின் கடமை. சத்தியம் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒரு ஆலிமின் இரத்தத்தில் ஊறிப்போன பண்பாக இருக்க வேண்டும். அறிவை மறைப்பவனுக்கு மறுமையில் அல்லாஹ் நரக நெருப்பினால் கடிவாளம் இடுவான் (இப்னு மாஜா). என நபி (ஸல்) அவர்கள் கூறி இருப்பதை ஆலிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டில் ஷாஃபி மத்ஹபை பாதுகப்பது கடமை என்பது போலவும், சத்தியம் எக்கேடு கெட்டாலும் சரி என்ற நிலையிலும் வாழும் பல ஆலிம்களை சமூகத்தில் காண முடிகின்றது. மற்றொரு புறத்தில் தென்னிந்தியாவின் பிரதமப் பேச்சாளர் ஒருவரின் கருத்தில் குறை கண்டு ஆதராத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டினால் சீ, சீ இதை நாம் நமக்குள்தான் பேசிக் கொள்ள வேண்டும், மற்றவர்கள் என்ன சொல்வார்கள், இவர்களுக்குள்ளும் பிளவா என்று அவரின் பிரியர்கள் கூறுவதையும் காண்கின்றோம்.
அந்த தாயீ, ஒரு ஜமாத்தைப் பல கூறுகளாக்கி பத்து பேரை வைத்துக் கொண்டு நமது கிளை என்று பத்திரிகையில் பூதாகரமாக விளம்பரம் போடுவதைப் பொறுத்துக் கொள்வார்கள். இதுதான் தக்லீதின் உச்சகட்டம் என்பதை இனியாவது இவர்கள் உணரட்டும்.
பித்அத்தை நியாயப்படுத்தும் தாயிக்கள்
அனைத்து பித்அத்களும் (புதிய வழிமுறைகளும்) வழிகேடு என்றும், யார் நமது மார்க்கத்தில் இல்லாததைச் செய்கின்றாரோ அவரது செயல் நிராகரிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி)
ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என இமாம்கள் அடித்துக் கூறி இருந்தும் ஊரில் செய்கின்றார்கள், உலகத்தில் செய்கிறார்கள், நல்லது தானே என்றெல்லாம் காலத்தை கடத்தும் ஆலிம்கள் கூட்டம் மக்களுக்கு பித்அத்தையே அரங்கேற்றும் நிலையைப் பார்க்கின்றோம். கத்தம், பாத்திஹா, மௌலித், தாயத்து. தகடு என்று மக்களை ஏமாற்றி சீரழிப்பதைப் காண்கின்றோம்.
உலக விவகாரத்தை மார்க்கமாக்கும் தாயிக்கள்
முஸ்லிம்கள் மார்க்கமாக இல்லாமல் ஒரு பழக்கமாகக் கொள்ளும், மார்க்கம் தடை செய்யாத நடைமுறைகள் பலதை நாம் அறிவோம். ஜும்ஆவுக்காக ஜுப்பா அணிவது, தொப்பி போடுவது போன்ற அம்சங்களைக் குறிப்பிட முடியும்.
இது விஷயத்தில் தாயிக்கள் பித்னாக்களமாக மாற்றி அமைப்பதைப் பார்க்கின்றோம். காபிர் ளுக்கு இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து கடிதங்கள் எழுதுகின்ற நேரம் முத்திரை பதிக்கப்படாத கடிதங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை எனக் கருத்துக் கூறப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அதை அங்கீகரித்தார்கள். (நூல்: புகாரி)
இந்த சாதாராண விஷயத்தைக் கூட தஃவாக்களத்தில் பிரயோகிக்கத் தெரியாத தாயிக்களால் தஃவாக்களம் துவம்சம் செய்யப்படுமா? அல்லது முன்னேற்றம் அடையுமா என்று சிந்தித்துப் பாருங்கள்.
இயக்கத்தை இஸ்லாமாக்கும் தாயிக்கள்
தனிமனிதன் புகழ்பாடி அழியும் ஒரு கூட்டம், தான் இருக்கும் இயக்கமும் அதன் சித்தாந்தமுமே சரி என வாதிடும் மற்றொரு கூட்டம், எனது அமீர் சொல்வதை அப்படியே பின்பற்றுவேன், எனது மர்கஸில் சொல்லப்பட்டதை அப்படியே நம்புவேன் என்று வாதிடும் மற்றொரு கூட்டம், சேகு நாயகம், வாப்பா நாயகம் ஆகியோரின் கூற்றே வேதவாக்கு என்று நம்பும் பிறிதொரு கூட்டம். எகிப்தின் ஆலிம்களை அச்சாணிகள் போல் நம்புகின்ற மற்றொரு கூட்டம், இவ்வாறு தஃவாக்களத்தை துவம்சம் செய்யும் பல கூட்டங்களை களத்தில் இனம் காண முடிகின்றது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதை நம்பினேன், அதன்படி நடப்பேன் என்ற கூட்டத்தில் இணையாத அனைத்துக் கூட்டமும் வழிகேட்டின், பித்அத்தின் மறுவடிவங்களாகவே இருக்கும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

