கேள்வி; பெண்கள் ஆட்சி செய்வது குறித்து இஸ்லாம் கூறுவதென்ன?
-டி.என்.இமாஜான்,நாகூர்.
பீஜே பதில்; எந்த சமுதாயத்தின் ஆட்சிக்கு பெண் பொறுப்பேற்கிறாளோ அந்த சமுதாயம் வெற்றி பெறாது என்பது நபிமொழி.
(புகாரி,நஸாயி,திர்மிதி,அஹ்மத்)
பெண்கள் ஆட்சி செய்தால் அந்த சமுதாயம் உருப்படாது என்பது இஸ்லாத்தின் தெளிவான தீர்ப்பாகும். இதற்குரிய காரணங்களை இஸ்லாம் கூறாவிட்டாலும் நாம் அதன் விளைவுகளை இன்று அறிந்து வருகிறோம்.
பெண்கள் ஆட்சியை குடும்பமாகவே கருதி வருவதை அனுபவத்தில் கண்டு வருகிறோம். யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்படாமல் வேண்டியவர்களுக்கு சலுகை செய்வது அவர்களின் இயல்பு. சொந்த விசயத்தில் அப்படி நடந்தால் தவறில்லை. ஆட்சியில் அப்படி நடந்தால் அதை மன்னிக்க முடியாது.
இலங்கையில் மகள் ஜனாதிபதி என்றால் தாயையே அந்த மகள் பிரதமராக்குகிறாள். பாகிஸ்தானில் மகள் பிரதமர் என்றால் தாயாருக்கும் மந்திரி சபையில் இடம் கிடைக்கிறது. இந்திராவும் வலுக்கட்டாயமாக இரண்டு புதல்வர்களை திணித்தார். இங்கே ஜெயலலிதாவும் எல்லா மரபுகளையும் மீறி தன் தோழியை ஆட்சி செய்ய அனுமதிக்கிறார். அந்த தோழி தன் குடும்பத்தினர் கையில் ஆட்சியையே ஒப்படைத்து விட்டார். இவை சில சாம்பிள்கள்.
இவற்றை ஒளிவு மறைவாக, படிப்படியாக செய்வோம் என்று கூட எண்ணுவதில்லை. தன்னை சேர்ந்த அனைவருக்கும் உடனே நல்லது செய்யவேண்டும்; எவன் வீட்டு சொத்தாக இருந்தாலும் கவலையில்லை என்று நடப்பது பெண்களின் இயல்பு. ஆண்களில் மிகச் சிலர் அவ்வாறு நடக்கலாம்.(அதுவும் மனைவியரின் நச்சரிப்பினால்) பெண்கள் அனைவருமே அப்படித்தான் நடக்கின்றனர்.
இதுபோக பெண் ஆட்சியாளரிடம் ஆணவமும், அகங்காரமும் கர்வமும் மமதையும் திமிரும் ஆண் ஆட்சியாளர்களை விட அதிகமாகவே உள்ளது கண்கூடு. இதுபோல் இன்னும் பலவீனங்கள் உள்ளன. இவை ஆட்சி செலுத்துவதில் குளறுபடிகளை உருவாக்கும்.
(அல் ஜன்னத் ஏப்ரல் 95)
அன்பானவர்களே! இன்று ஜெயலலிதாவுக்காக வரிஞ்சு கட்டி நிற்கும் பீஜே, அன்று அதே ஜெயலலிதா குறித்து கூறியதை படித்தீர்களா? பெண்களிடம் உள்ள பண்புகளை பட்டியலிட்டு பெண்கள் ஆட்சி செய்ய தகுதியற்றவர்கள் என்று கூறும் பீஜே, பெண்கள் ஆட்சி செய்தால் அந்த சமுதாயம் உருப்படாது என்பது இஸ்லாத்தின் தெளிவான தீர்ப்பாகும்' என்றும் ஃபத்வா வழங்குகிறார். இவர் நேரத்துக்கு தக்கவாறு மார்க்கத்தை வளைப்பவர் என்று தெரிகிறதா?
இப்போது பெண்கள் ஆட்சி குறித்த இஸ்லாமிய சட்டம் என்பது இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பகுதிக்குத்தான் என்று புது பத்வா வழங்கி வருகிறார். மேற்கண்ட கேள்வியே காபிர்கள் ஆளும் பகுதியில் பெண்கள் ஆள்வது பற்றியல்ல...மாறாக, பொதுவாக பெண்கள் ஆள்வது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு பற்றியதே! அதற்குத்தான் பீஜே, இலங்கை பாகிஸ்தான் முதல் ஜெயலலிதாவரைக்கும் உதாரணம் காட்டி அன்று எழுதினார். முஸ்லிமல்லாத நாட்டில் பெண் ஆட்சிக்கு வருவதை ஆதரிக்கலாம் என்று ஒரு இடத்தில் கூட அன்று குறிப்பிடாத பீஜே, இன்று தனது அரசியல் பல்டிகளுக்கு ஏற்ப மார்க்கத்தை வளைத்து புதுமை பத்வா வழங்கி தடுமாறுகிறார்.
நாம் பீஜெயிடம் கேட்பது, பெண்கள் ஆட்சி தொடர்பான மேற்கண்ட நபிமொழி, முஸ்லிம் பகுதியில் ஆள்வது பற்றியதுதான் என்று ஆதாரப்பூர்வமாக பதிலளிக்கத் தயாரா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக