வியாழன், 26 ஜூலை, 2012

நோன்பு திறக்கும் போது துவா கேட்பது கூடாது! என அண்ணன் ஃபத்வா வழங்கியுள்ளாரே? -மங்கோலியன் பதில்!



  
மங்கோலியன் பதில் :  கடந்த முறை குடும்ப லேகியம் விற்ற அண்ணன்  இந்த ஆண்டு குடும்பத்தில் பிரச்சனையா? மனதில் குழப்பமா? என்று மாந்திரிகர் ரேஞ்சில் தாயத்து விற்க ஆரம்பித்த முதல் நாளில் பிறைக் குழப்பத்தால் அவரே மனக் குழப்பமாகி ரமலானைப் பற்றி சொல்கிறேன்  என ஆரம்பித்து ஏகத்துவ வாதிகளை ஏகத்துக்கும் குழப்ப ஆரம்பித்தார்.

ஏற்கனவே நோன்பு திறக்கும் துவா  'அல்லாஹும்ம லகசும்து'  இல்லை என்று 'தஹபள்ளமவு' துவா கேட்க வேண்டும் என்றார. பின்னர் அது இல்லை 'பிஸ்மில்லாஹ்' சொன்னால் போதும் என்றார்.தற்போது நோன்பு திறப்பதற்கு முன்னாலும் துவா கேட்கக் கூடாது என்கிறார்.சரி அப்படியானால்  துவா ஏற்கப்படக் கூடிய நேரங்களில் ஒன்று நோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் துவா!  என இத்தனை காலம் நாம் கேட்டது எல்லாம்  என்ன ஆனது? அந்த ஹதிஸ் என்ன பலவீனமானதா? அல்லது தொடர்பு  அறுந்ததா? இப்படி ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் அண்ணனின் அறிவுக்கு பொருந்த வில்லையாம்! 

ஏன் என்றால் நபி ஸல் சொல்லியிருக்கிறார்கள்  இரவு உணவு முன்னால்  இருக்கையில் நீங்கள் இஷாவைத் தொழ வேண்டாம்! என நபி ஸல் சொல்லியிருக்கிறார்கள்! ஆகையால் பசியோடு  இருக்கும் போது   தொழுகையே கூடாது என்பதால் துவா கேட்பது எப்படி அறிவுக்கு பொருத்தமாக இருக்குமா? கஞ்சிக்கு முன்னால உட்கார்ந்து துவா கேட்டால் அது நடிககிறதாதான் இருக்கும்! என தன்னுடைய அறிவைக் கொண்டு மார்க்கத்தை அளந்தார். 

ஒரு காலத்தில் 'வேலையை முடிச்சுட்டு கூலியை கேட்கற நேரம்மா' என்று சொன்னவர் தன்னுடைய 'இறைவனிடம் கை ஏந்துவோம்' எனும் புத்தகத்தின் 22 ம பக்கத்தில்  ஏற்கப்படக்  கூடிய துவாக்களில்   ஒன்றாக 'நோன்பாளியின் துவாவை' குறிப்பிட்டு 'இந்த வாய்ப்புகளை பயன் படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படுவதில் எந்த சந்தேகமும் இல்லை'   என்று எழுதியவர்    இன்று பசியோடு இருக்கும் போது கேட்கும் துவா பாசாங்காகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.   

முதலாவதாக அது சாதாரண காலங்களில்  இரவு உணவுக்கு சொன்ன விஷயத்தை எப்போதும் பசியோடு இருக்கும் ரமளானுக்கு பொருத்தலாமா?  இரண்டாவதாக  அப்படி பொருத்தினால் பசியோடு இருக்கும் போது துவா கேட்பது அறிவுக்கு பொருத்தமில்லை என்றால் ரமலானில் லுஹர் அசர் தொழுகைகளும் கூடாதே?  ஏன் எனில் அப்பவும் பசிக்குமே ?    அது மட்டுமில்லாமல் 'பிஸ்மில்லாஹ்' என்பதும துவா தானே! அது உங்களுடைய துவாக்களின்  தொகுப்பு மற்றும் எம்.ஐ.சுலைமானுடைய துவாக்கள்   புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதே! உங்கள் வாதப்படி அதையும் சொல்லக் கூடாதா?  என நாம் கேட்க வேண்டியுள்ளது! 

இப்படி    அண்ணன் பத்வா கொடுத்ததுமே அதை அப்படியே ஏற்று நடக்கும் தக்ளிதுகள்  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இவர்களின் இப்தாருக்கு  சென்ற   நசிர் எனும் சகோதரை துவா கேட்க தூக்கிய கையை இறக்கி விட்டு துவா கேட்க கூடாது என சொல்ல, இவர் ஏன் இவ்வளவு நாளும் கேட்டோமே என கேட்க, அண்ணன் சொல்லிட்டார் உங்களுக்கு தெரியாதா? எனக் கேட்க, அந்த சகோதரர் நம்மிடம் வந்து கொதித்து போய் சொன்னார்.  இவர்கள் பின்பற்றுவது அண்ணல் நபி வழியா? அண்ணன் வழியா என்பது தெரியவில்லை! 

நபி [ஸல்] அவர்களின் வாக்கு, அதை அறிவித்த நபித்தோழர்கள், மிகப் பெரிய தியாகங்களை செய்து ஹதிஸ்களை சேகரித்து, இந்த ஹதிஸ்களின் தரத்தை ஆய்வு செய்த ஹதிஸ் கலை வல்லுனர்கள், இதை ஸஹிஹ் ஆன கிரந்தங்களில் பதிவு செய்த இமாம்கள் எல்லோருடைய அறிவையும் புறந்தள்ளி விட்டு    அண்ணனின் அறிவைக் கொண்டு மார்க்கத்தை அளக்க ஆரம்பித்தால் அது மிகப் பெரிய வழி கேட்டை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.அல்லாஹ்வே அறிந்தவன்.

திங்கள், 25 ஜூன், 2012

பீஜே அவர்களுக்கு ஒரு அப்பாவி சகோதரனின் கடிதம்.

அஸ்ஸலாமு அலைக்கும் ,,,
வல்ல ரஹமானை போற்றி புகழ்ந்தவனாக ...

அன்புள்ள அண்ணன் pj அவர்களுக்கு நலம், நலம் பல சூழட்டும் ...

நிற்க ; உங்களின் மார்க்க பிரசாரத்தினால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன் ,,நீங்கள் பேசிய எந்த 
தலைப்புள்ள குறுந்தகடுகள் வெளி ஆனாலும் முதலில் அதை வாங்கி பார்த்துவிட்டுத்தான் அடுத்த 
வேலை பார்ப்பேன் ,,அந்த அளவிற்கு உங்களின் பேச்சாற்றலையும், மார்க்க விளக்கங்களையும் 
பின்பற்றகூடியவன். உங்களை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்களிடம் மல்லுக்கு நிற்பவனில் 
முதலாமானவன் என்றுகூட சொல்லலாம், 
ஒரு முறை எங்கள் ஊருக்கு பயணம் சென்று இருந்தேன் [காரைக்கால்] அப்பொழுது ஜாக் கில் இருக்கும் 
எனது பால்ய சிநேகிதரிடம் மார்க்க சம்மந்தமாக விவாதிக்க நேரிட்டது, அப்பொழுது என் நண்பர் ஒரு 
குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு ,[,49:6முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.,,] கடந்த இரு வருடங்களாக உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை   பற்றியும் நீங்கள் மற்றவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பற்றியும் செய்திகளை  குறிபிட்டார் ,,,அந்த நொடிப்பொழுது அவரிடம் பேசாமல் வீடு திரும்பி விட்டேன் அன்றைக்கு முழுதும் என்னுள் எதோ உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது ,,அதற்க்கு இரண்டு நாட்கள் கழித்து நான் பள்ளிக்கு தொழ சென்ற நேரம் . சஹாபாக்களை 
பின்பற்றுவது குறித்த குறுந்தகடை சில சகோதரர்கள் விநியோகம் செய்தார்கள் ,,அதை அங்கு உள்ள நம் tntj சகோதர்கள்  கொடுக்க கூடாது என்று தடை செய்தார்கள் ,,,மார்க்க விஷயங்களில் உள்ள கருத்து முரண்பாடுகளை 
மற்றவர்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது அதை என் நம் சகோதரர்கள் தடுக்கிறார்கள் என்று 
நான் சில சகோதரர்களிடம் முனங்கி கொண்டே வீடு திரும்பி விட்டேன் ,,,பிறகு உணர்வில் வந்த செய்தியை கண்டு 
அதிர்ச்சி யுற்றேன் ,அதில் அந்த குறுந்தகடை பெண்கள் மூலம் விநியோகித்தார்கள் என்றும் அது தவ்ஹீத் ஜமாஅத் 
பெயரை சொல்லி விநியோகித்தார்கள் எனவும் விநியோகித்தவர்கள் பச்சிளம் பாலகர் எனவும் குறிப்பிட்டு இருந்தது 
இவை அத்தனையும் பொய் என்பது நான் நேரில் கண்டது ...அதை கொடுத்தவர்கள் இளைன்னர்கள் ,அவர்கள் பெண்களின் பக்கம் செல்லவே இல்லை ,இதுதான் எனக்கு உங்களை பற்றிய முதல் நெருடலை கொடுத்தது ,,
அடுத்து,மருத்துவ கவுன்சிலிங் சம்மந்தமாக நீங்கள் ஆர்பாட்டம் நடத்திய பிறகு. ம ம க அந்த அரசாணையை வெளி
இட்ட பொழுது  நீங்கள் அறியாமையிலோ அல்லது தெரியாமலோ ஆர்பாட்டம் நடத்தி இருப்பீர்கள் என்று எண்ணினேன்,, எம் சமூகத்தாரை அலைகழிக்க வைத்த அந்த ஆர்ப்பாட்டம். அதற்க்கு எம் சகோதர சகோதரிகளுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று நீங்கள் வருத்தம் தெரிவிப்பீர்கள் என்றும் நினைத்தேன்  ஆனால் நடந்தது வேறு 
ம ம க வின் சமுதாய துரோகம் என்றும்  மருத்துவ  கவுன்சலின்[பணி நியமனம்] சம்மந்தமாக நீங்கள் விளக்கம் 
அளிப்பீர்கள் என்று எதிர்பார்த்து என் உறவினர் மூலமாக மண்ணடிக்கு வந்து உங்களின் பொதுகூட்ட விளக்க உரையை கேட்க ஆவலாக இருந்தேன் ,,,கடைசி வரை நீங்கள் மருத்துவ பனி நியமனம் சம்மந்தமாக எதுவுமே பேசவில்லை ...அந்த விஷயத்தில் அரசாங்கம் மக்களுக்கு துரோகம் செய்ததாக சொல்லும் நீங்கள் அதற்க்கு ஆதாரம் கொடுக்காமலும் அது சம்மந்தமாக விளக்கம் கொடுக்காமலும், ம ம க என்ற கட்சியையும். சகோ ஜவாஹிருல்லாவையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தீர்களே தவிர நீங்கள் எதற்காக அந்த பொதுக்கூட்டம் கூட்டி நீர்களோ அதை பற்றி சற்றும் பேசாமல்  லேசாக அரசாங்கத்தையும்  . காட்டமாக ம ம க வையும் விமர்சித்ததை தவிர  நாம் எதிர்பார்த்த அளவிற்கு வேறு ஒன்றும் விளாகம் கொடுக்கவில்லை ,,,அதற்க்கு பிறகுதான் நான் முன்பு உங்களுக்கு ஆதராவாக செய்த செயலை கண்டு வருந்தினேன்..[அல்ஹம்துலில்லாஹ் ]அல்லாஹ் எனக்கு இப்பொழுதுதான் உங்கள் விசயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவை கொடுக்கின்றான் ...உங்களை நம்பி 
இருக்கும் எம்மை போன்ற த த ஜ சகோதரர்களுக்கு நீங்கள் காட்டும் நேர் வழி இதுதானா? உங்களின் வார்த்தைகளை 
நம்பி இத்தனை காலாம் நான் பின்பற்றி வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இபொழுது உணருகிறேன் ..
மார்க்கத்தை சொல்லும் உங்களுக்கு ஏன் இந்த போக்கு, மனம் வலிக்கிறது அண்ணன் அவர்களே. உங்களின் சுய கவுரவம், காப்பாற்றிக்கொள்ள எங்களை[த த ஜ ] போன்றவர்களை பகடைக்காயாக  மாற்றிகொல்வதினால்  உங்களுக்கு என்ன கிடைத்துவிடும் மறுமையில்?...இப்படிப்பட்ட ஒரு அமைப்பில்[அபிமானியாக]  இருந்ததை 
எண்ணினால் உள்ளம் உள்ளபடியே குமுறுகிறது.உறக்கமில்லாமல் கண்கள் கலங்குகிறது. அல்லாஹ்விற்காக 
உங்களின் இந்த த த ஜ  சமுதாயத்தை அடிமையாக்கும் போக்கை மாற்றிகொள்ளுங்கள் அண்ணன், இல்லை 
என்றால் அல்லாஹ் நாடினால் அந்த அப்பாவி  த த ஜ சகோதரர்கள் என்னைப்போல் தெளிவடையலாம்..
இல்லாவிட்டால் அவர்களின் நிலை என்ன? அவர்களை வழிகெடுக்கும் பாவத்திற்காக மறுமையில் உங்களின் 
நிலை என்ன ...அல்லாஹ்விடம் உங்களுக்காக பிரார்த்தனை புரிவதை தவிர வேறு வழி உண்டோ........?

என்றும் அன்புடம் 
அபு சாஜித் ...காரைக்கால் [ முன்பு உங்கள் சார்பு கொண்டு இருந்த என நிலையை கண்டு நானே வேட்கபடுவதால் 
என்னுடைய முழு பெயர் வெளியிட மனம் வரவில்லை...

அஸ்ஸலாமு அலைக்கும்.. 
 
குறிப்பு ; எத்தனையோ விஷயத்தில் எங்களை முட்டாள் ஆக்கிய நீங்கள் இந்த கடிதத்தை கூட ஒருகால்  உங்களின் எதிரிகளால் எழுதப்பட்டது என்று கூறி உங்கள் நாவான்மையால் மீதமிருக்கும் அப்பாவி த த ஜ சகோதரர்களை நம்பவைக்கலாம் ,,,ஆனால் மறுமை என்று ஒன்று இருக்கிறதை நீங்கள் மறந்தாலும் நாம் மறவோம் ,,,அங்கே 
உண்மை மட்டுமே பேசும். 

புதன், 13 ஜூன், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [இறுதிப்பகுதி]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

மவ்லவி ஹாமித்பக்ரி மன்பஈ அவர்கள் பத்துக்கும் மேற்ப்பட்ட பெயரில் லெட்டர் பேடு தயாரித்து வசூல் வேட்டை நடத்தினார் என்று பீஜே குற்றம் சாட்டினார். அதற்கான ஆவணங்களை அவர் பதிவு செய்யவில்லை. அது போகட்டும். இவரது மேலான்மைக்குழுத் தலைவர் சம்சுல்லுஹா அவர்கள், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முகவரியான 
11 A ராவுத்தர் கிழக்குத்தெரு என்றே ஒரே முகவரியில்,

  1. தவ்ஹீது ஜமாஅத்.
  2. மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி.
  3. மேலப்பாளையம் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்.
இவ்வாறான லெட்டர் பேடுகள் தயாரித்து அரபியில் பல கடிதங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளாரே! இதற்கு பீஜே என்ன சொல்லப்போகிறார்? மேற்கண்ட அனைத்தும் ஒரே இடத்தில் இயங்குகிறது எனவே ஒரே முகவரியில் லெட்டர் பேடு தயாரித்தார்கள் என்று பீஜே சொல்லலாம். தவ்ஹீத் ஜமாஅத் சரி, மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி சரி. அதென்ன மேலப்பாளையம் ஜாக் என்ற அமைப்பு?

ஜாக் வழிகேடு இயக்கம் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு அந்த ஜாக்கை உல்டா பண்ணி மேலப்பாளையம் ஜாக் என்று ஒரு அமைப்பு துவங்கியது அதுவும் 2004 ல் ததஜ உருவான பின்னால் 2005 ல் மேலப்பாளையம் ஜாக் என்ற பெயரில் ஒரு குட்டி அமைப்பு உருவாக்கியதன் காரணம் என்னவென்று பீஜே சொல்வாரா? ஊரில் உள்ள சொத்துக்களை எல்லாம் ததஜ பெயரில் எழுத வேண்டும் என்று சொல்லும் பீஜே, மேலப்பாளையம் பள்ளிவாசலை ததஜ பெயரில் எழுதி வைக்கச் சொல்ல முடியுமா? மேலப்பாளையம் ஜாக் என்ற லுஹாவின் குட்டி அமைப்பை கலைக்கச் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் இந்த குட்டி அமைப்பு உருவாக்கப்பட்டதே உண்மையான ஜாக் பெயரில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானை அமுக்குவதற்காகத் தானே!

சரி போகட்டும்., வெளிநாட்டிற்கு பிழைக்கப்போன தமிழனிடம் மட்டுமே நாங்கள் காசு வாங்குவோம். வெளிநாட்டுக்காரன் கைமடக்கு தந்தால் வாங்கமாட்டோம் என்று மார்தட்டும் பீஜே, அஹ்லே ஹதீஸ் வழிகேடு என்று சொல்லிவிட்டு அந்த அமைப்பிடம் அரபியில் வாங்கிய இந்த பரிந்துரைக் கடிதம் எதற்காக என்று பதில் சொல்லட்டும். 

ததஜவுக்கு சொந்தமான, சம்சுல்லுஹா மற்றும் எம்.எஸ்.ஸுலைமான் போன்றோரின் மேற்பார்வையில் இயங்கும் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்லூரிக்காக ஒரு அரபி நிறுவனத்திற்கு சம்ஷுல்லுஹா அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய வெவ்வேறு இரு கடிதம் சாம்பிளுக்காக.


இந்த கடிதங்கள் எல்லாம் எந்த தமிழனுக்கு எழுதப்பட்டவை என்று சொல்லட்டும். இதுபோன்று இன்னும் ஏராளம் உண்டு.

அன்பான சகோதரர்களே!
வெளிநாட்டு நிதி விசயத்தில் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஹாமித்பக்ரி மற்றும் சைபுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் மீது பழிபோட்டு விட்டு தன்னை பரிசுத்தவனாக காட்டிய பீஜேயின் வெளிநாட்டு நிதி தொடர்பான விசயங்களையும், அவரோடு இன்றும் இருக்கும் சகாக்களின் வெளிநாட்டு நிதி தொடர்பான விசயங்களையும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் 13 தொடர்களாக பதிவு செய்திருக்கிறோம். பல மாதங்களாக நாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியும் பீஜே மவுனம் காப்பதில் இருந்து அவரது உண்மைநிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். பீஜேயின் அவரது சகாக்களின், அவரது ஜமாஅத்தின் வெளிநாட்டு நிதி தொடர்பான நேரடி சாட்சிகள் மற்றும் இன்னும் சில ஆவணங்கள் நம்மிடம் உள்ளன. இதுவரை எழுப்பிய வினாக்களுக்கு பீஜே பதிலளித்தால் மீதமுள்ள ஆவணங்களும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்களே இவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோளாகும்.

பீஜேயின் இரட்டை வேடத்தை தோலுரிக்கும் எனது இந்த முயற்சிக்கு, ஆவணங்கள் தந்துதவிய சகோதரர்கள் ஆலோசனைகள் வழங்கிய சகோதரர்கள் அனைவருக்கும், என்னை தனி மெயிலில் தரக்குறைவாக திட்டிக் குவித்த பீஜேயின் அபிமானிகளுக்கும் நன்றி. 
இந்த தொடர் முற்றுப்பெருகிறது. பீஜேயின் அன்றும்-இன்றும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன் 
இஸ்லாமிய சகோதரன்.,
முகவைஅப்பாஸ்.

செவ்வாய், 29 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 12]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். சலபுக் கொள்கை வழிகேடு என விமர்சித்துவிட்டு, அரபு நாட்டுச் சலிக்காக 'நாங்களும் சலபுகள் தான்' என்று அரபியில் கடிதம் அனுப்பியதை அம்பலப்படுத்தினோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் ததஜ ஜமாஅத்திற்கு எழுதித்தரப்படுகிறது. அதனால் அந்த பள்ளிக்கு ததஜ உரிமை கொண்டாடி இப்போது வென்றெடுத்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்த பள்ளிவாசல் பிரச்சினை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், தொண்டியைச் சேர்ந்த சகோதரர் அப்துர்ரஹ்மான் மன்பஈ அவர்கள் இஸ்லாம் கல்வி டாட்.காமில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதில், ''எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் தங்கள் ஜமாஅத்தின் பெயரால் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கே அந்த பள்ளி சொந்தம் என்று ததஜவினர் உரிமை கொண்டாடுகின்றனர். அது நியாயம்தான். இதே நியாயத்தின் அடிப்படையில் ஜாக் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள கடயநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், திருச்சி தவ்ஹீத் பள்ளிவாசல் ஆகியவற்றை ததஜவினர் ஜாக்கிடம் ஒப்பைடைக்கத்தயாரா? என்று எழுதியிருந்தார்.

இதற்கு தனது அதிகராப்பூர்வ இணையதளத்தில் பதிலளித்த அறிஞர் பீஜே, ''எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் ஒரு தனிநபரின் சொந்த பணத்தில் கட்டப்பட்டு, அவராலேயே நிர்வாகமும் செய்யப்பட்டது. இதில் எஸ்.பி.பட்டினம் ஜமாத்தினரின் சல்லிக்காசும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கும், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானும் இந்த நிலையில் உள்ளதா? இப்பள்ளிகளின் நிலம் வாங்குவதற்காகவும், பள்ளிவாசல் கட்டுவதற்காகவும் உடலாலும் பொருளாலும் உழைத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள். சுன்னத் ஜமாத்தினரின் கடும் எதிர்ப்புகள் வந்தபோதெல்லாம் பள்ளியைக் காத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள். எனவே இந்த பள்ளிகளையும் எஸ்.பி.பட்டினம் பள்ளியையும் ஒப்பிடுபவர் மூளை குழம்பியவராகத் தான் இருக்கவேண்டும்'' என்று அதில் சாடியிருந்தார். பார்க்க இணைப்பு;

இதில் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கும், மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானும் முழுக்க முழுக்க தவ்ஹீத் சகோதரர்களின் பணத்தாலும், உடல் உழைப்பாலும் தான் கட்டப்பட்டது. எனவே அதற்கு தவ்ஹீத் சகோதர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று அறிஞர் பீஜே சொன்னது உண்மையா? உண்மையில் இப்பள்ளிகளை காட்டித்தந்தது யார்? முதலில் மேலப்பாளையம் விசயத்தைப் பார்ப்போம். அந்த பள்ளி அஹ்மத் அல் அஹ்மத் என்ற அரபி காட்டித்தந்தது என்று பீஜேயும்-லுஹாவும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்த வீடியோவில் காணுங்கள்;

இந்த வீடியோவில் அஹ்மத் அல் அஹ்மத் என்ற அரபிதான் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியைக் கட்டித்தந்தவர் என்பதை பீஜேயும் லுஹாவும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். அப்படியானால் தவ்ஹீத் சகோதரர்களின் பொருளாதாரத்தால் தான் இப்பள்ளி கட்டப்பட்டது என்று பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பீஜே சொல்வது போன்று தவ்ஹீத் சகோதரர்கள் பணத்தில் கட்டப்பட்டது என்றால், சில அரபிக் கடிதங்களை இங்கே வைக்கிறோம். இதுபோன்று சம்சுல்லுஹா அவர்களால் அரபியில் எழுதப்பட்ட எராளமான கடிதங்கள் நம்மிடம் உண்டு. தேவைப்பட்டால் அனைத்தையும் வெளியிடுவோம். 


இந்த அரபிக்கடிதங்கள் தொண்டியிலிருந்தும், மேலப்பாலயத்திளிருந்தும் பிழைக்கப்போன தமிழனுக்கு எழுதிய கடிதங்கள் என்று பீஜே சொல்வாரா? அரபு நாட்டு சல்லியை வெறுக்கும் பீஜே, அந்த அரபு நாட்டில் பிறந்த ஒருவரால், அரபு நாட்டு சல்லியால் கட்டப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மானை விட்டு வெளியேறி தனது ஜமாஅத் தூய்மையானது என்று காட்டுவாரா?

மேலும், மேலப்பாளையம் பள்ளிவாசலைக் கட்டிக் கொடுத்த அஹ்மத் அல் அஹ்மத் என்றும் அரபி, லுஹாவுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளார் என்பதை மேற்கண்ட வீடியோவில் லுஹா வார்த்தயிலேயே கேட்டீர்கள். மதீனா பல்கலைக் கழகத்தில் பயின்ற சில மதனிகள், சம்பளம் பெறுவதை விமர்சிக்கும் பீஜே, அஹ்மத் அல் அஹ்மத் எனும் அரபியிடம் சம்பளம் பெற்றுவந்த தனது சுப்ரீம்லீடர் லுஹா அவர்களை மட்டும் கண்டுகொள்ளாதது ஏன்? 

மேலும், பள்ளிவாசல் வகைக்காக அஹ்மத் அல் அஹ்மத் தந்த தொகையில் லுஹா மீது பொருளாதாரக் குற்றச்சாட்டு கிளம்பி, அதை லுஹாவுக்கான சம்பளமாக போட்டு பீஜே நேர் செய்து, லுஹாவை காப்பாற்றிய கதையையும் மேற்கண்ட வீடியோவில் கண்டீர்கள். அஹ்மத் அல் அஹ்மத் தனக்கு சில மாதங்கள் சம்பளம் தராததால் பள்ளிவாசல் பணத்தில் கை வைத்தேன் என்று லுஹா சொல்வது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், அவரது சம்பளப் பாக்கி அளவுக்கு அல்லலவா எடுத்திருக்க வேண்டும்? மேலதிகமாக ஒன்றரை லட்சம் பள்ளிவாசல் பணத்தை எடுத்ததற்கு பெயர் என்னவோ? அதுவும் ரிபாயி போன்றவர்கள் இந்த பிரச்சினையைக் கிளப்பும்வரை இதற்கு தீர்வு காண லுஹா முயற்சிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் லுஹா அவர்களுக்கு ஊதியம் வழங்கிவந்த அஹ்மத் அல் அஹ்மத் எனும் அரபி, மஸ்ஜிதுர் ரஹ்மான் மட்டுமல்ல; தமிழகத்தில் அனைத்து பள்ளிகளையும் உன் மூலமாக நான் நிர்மாணிக்கிறேன். ஆனால் நீ, அஷ்ஷைக் கமாலுத்தீன் மதனியுடன் இருக்கவேண்டும் என்று சொன்னதாகவும், அதை தான் ஏற்கவில்லை என்றும் லுஹா சொல்கிறார். லுஹாவை கொண்டு தமிழகத்தில் நலப்பணிகள் செய்ய முன்வரும் அளவுக்கு அரபியுடன் இணக்கம் கட்டியுள்ள லுஹாவை சுப்ரீம்லீடராக கொண்ட பீஜே, வெளிநாட்டு நிதி பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாமா? 

அயல்நாட்டு நிதியில் பீஜேயின் வேஷங்கள் இன்னும் வெளிப்படும் அருளாளன் நாடினால்.


வெள்ளி, 25 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 11]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

சலபுக் கொள்கை வழிகேடு என்று விமர்சித்து வரும் பீஜேயும் அவரது தரப்பினரும், அயல்நாட்டுப் பணம் என்றால் சலபுக் கொள்கை எங்களுக்கு ஒரு பிரச்சினையில்லை என்று சொல்லும் வகையில், ''நாங்களும் சலபுகள் தான்'' என்று வெளிநாட்டிற்கு அரபியில் கடிதம் அனுப்பிய அவலத்தை இந்த கடிதத்தில் காணுங்கள்;


சல்லி கிடைக்கும் போது, அதைப் பார்க்காமல் கொள்கை பேசிக்கொண்டிருக்க நாங்க என்ன வெவரம் தெரியாதவர்களா என்ன? --பீஜே&லுஹா.

அயல்நாட்டு நிதியில் அண்ணனின் வேஷங்கள் இன்னும் வெளிப்படும் அருளாளன் நாடினால்.

சனி, 12 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 10]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

தமிழகத்தில் ஜாக், வெளிநாட்டில் நிதி உதவி பெற்று பள்ளிவாசல்கள் எழுப்பி வருகின்றது. அதே போல் இலங்கையில் சில நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற்று, பள்ளிவாசல்கள், மற்றும் நலப்பணிகளை செய்துவருகிறார்கள். இத்தகையோரை பீஜே, அரபுநாட்டு சல்லிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிக்கிறார். உண்மையில் இவ்வாறு விமர்சிக்கும் அருகதை பீஜே அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் சேலம் நகரில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்காக பீஜே, இலங்கையைச் சேர்ந்த ஒரு தனவந்தரிடம் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் பெற்று அதை அந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு வழங்கினார். இந்த தொகையை வழங்கிய அந்த இலங்கை தனவந்தருக்கு பீஜே நன்றி தெரிவித்து கடிதமும் எழுதினார். இதை பீஜே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கத் தயாரா? 

வெளிநாடுகளில் நிதியை வாங்கி, பையில் பணத்தைப் போட்டுக்கொண்டு 'பள்ளிவாசல் வேண்டுமா? என்று ஜாக்கினர் அலைவதாகவும், அதில் அவர்களுக்கு 'பாயிதா'[வருமானம்] கிடைப்பதாகவும், ஜாக்கை விமர்சிக்கும் பீஜே, தனது கொள்கைக்கு மாற்றமாக, இலங்கை தனவந்தரிடம் பள்ளிவாசல் கட்ட பணம் வாங்கியது முரணில்லையா? இல்லையென்றால், அரபுநாட்டு சல்லி அடிக்க மாட்டோம். ஆனால் அண்டை நாட்டு சல்லி அடிப்போம் என்பதுதான் கொள்கையா? தமிழத்தில் இவர் அமைப்பின் சார்பாக எழுப்பப்படுள்ள மர்கஸ்கள், இவரது ஜமாஅத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசல்கள், முழுக்க முழுக்க பிழைக்கப் போனவர்களிடம் மட்டுமே வசூலித்து கட்டப்பட்டது என்று காட்டும் வகையில் ஒரு வெள்ளையறிக்கை வெளிடுவாரா பீஜே?

சரி., இலங்கையில் மட்டும் தான் இவர் பணம் வாங்கினாரா என்றால் அரபு நாட்டிலும் வாங்கினார். எந்த வெளிநாட்டிடமிருந்தும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் உதவி பெறமாட்டோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் பீஜே, துபையை சேர்ந்த ஒரு சகோதரர் [பெயர் தேவைப்பட்டால் வெளியிடுவோம்] முயற்சியின் பெயரில் ஒரு அரபியிடமிருந்து இப்தார் செலவுக்காக கடந்த 2005 அல்லது 2006 ஆம் ஆண்டு ஒன்றரை லட்ச ரூபாய்கள் ஜமாஅத் பெறவில்லையா? இதை பீஜே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கத் தயாரா? 

இதில் இன்னொரு துரோகமும் உள்ளது. அதாவது ஒரு நாள் இப்தார் செலவு 5000 வீதம் ஒரு மாத இப்தார் செலவுக்கான 1 ,50 ,000 ரூபாய்களை அந்த அரபி வழங்கிய பின்னும், அதை மறைத்து நோன்புக் கஞ்சி இன்னும் முழுமையடையவில்லை. எனவே காசு குடுங்கம்மா என்று பாக்கர் மூலமாக ஒவ்வொரு ரமலான் சிறப்பு பயானுக்குப் பின்னும் அறிவிப்புச் செய்ய வைத்தார் பீஜே. இதுபற்றி ஒரு பிரச்சினையில் பீஜே பேசும்போது, ''இப்ப வசூலாகுற காசை வச்சுத்தான் நான் ஒரு வருஷம் ஜமாஅத்தை ஓட்டனும்'ன்னு சொன்னாரே! மறுக்கமுடியுமா? இப்தார் நோக்கத்திற்காக அரபி தந்த தொகையை இப்தாருக்கு செலவு செய்து விட்டு, உள்ளூரில் இப்தார் என்ற பெயரில் வசூலித்த பணத்தைக் கொண்டு ஜமாஅத் நடத்தினார் என்றால், ''நாங்கள் எந்த வகைக்கு என்று வசூலித்தோமா அந்த வகைக்கு மட்டுமே செலவு செய்வோம்'' என்று சொல்லிக் கொள்வது பொய்யில்லையா? நோன்புக்கஞ்சிக்காக தந்த பணத்தை ஜமாஅத் செலவிற்கு பயன்படுத்துவது துரோகமில்லையா?

அடுத்து, இன்னொரு அரபுநாட்டு அரபியிடம் பணம் பெற்ற பீஜே, அந்த பணத்தில் ஒரு தொகையை தர்மபுரியில் உள்ள ததஜ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் போர் [ஆழ்துளைக் கிணறு] அமைக்க பணம் தந்தார். அவ்வாறு போர் அமைத்து அந்த தர்மபுரி நிர்வாகிகள் போட்டோ எடுத்து அனுப்பினார்கள். அந்த போட்டோ சரியில்லை என்று அரபியிடம் பணம் வாங்கித்தந்த வளைகுடா நிர்வாகிகள் சொன்னதையடுத்து, அன்றைய துணைப்பொதுச்செயலர் இக்பால் அவர்களை நேரடியாக தர்மபுரிக்கு அனுப்பி, ''பிர் அஹ்மத்' என்ற என்ற பதாகை வைக்கப்பட்டு, அந்த நீர்நிலை படம்பிடிக்கப்பட்டு, பணம் தந்த அரபிக்கு அனுப்பினார் பீஜே. இதை மறுக்க முடியுமா? அடுத்த இயக்கம் அரபியிடம் முறையாக பணம் பெற்று நலப்பணிகள் செய்தால், அவனை சல்லிக்கு மாரடிப்பவன் என்று விமரிக்கும் பீஜே, இந்த அரபியை தொண்டியிலிருந்து பிழைக்கப் போனவன் என்று சொல்லப்போகிறாரா? 

இதுபோன்று அரபிகளுடன் த த ஜமாத்திற்கு உள்ள தொடர்பு பற்றிய விபரங்கள் ஒரு பட்டியலே உண்டு. விரிவஞ்சி தவிர்க்கிறோம்.

அடுத்து வருவது;
வழிகெட்ட கொள்கை என்று பீஜெயால் வர்ணிக்கப்படும் சலபிக் கொள்கை, அரபு நாட்டு சல்லிக்காக புனிதமான கொள்கையாக பரிணாமம் பெற்ற அதிசயம்.
அருளாளன் நாடினால் அதிவிரைவில்.

சனி, 5 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 9]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அயல்நாட்டு நிதி விசயத்தில் மார்க்கத்திற்கு முரணனான அவரது மனோஇச்சை முடிவையும், அவரது இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தி வருகிறோம். இப்போது அவரது மற்றொரு இரட்டை வேடம் ஒன்றைப்பார்ப்போம்.

2002 ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு தனவந்தர், பீஜெயாகிய தனக்கு நியாஸ் ஹாஜியார் என்பவர் மூலமாக ஐந்து லட்சம் தர முன் வந்ததாகவும், அந்த தனவந்தரை எனக்குத் தெரியாது. எனவே நான் மறுத்து விட்டதாக சொல்லி விடுங்கள் என்று நியாஸ் ஹாஜியாரிடம் சொன்னதாகவும், ''ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும்' என்ற தொடரில் பீஜே கூறியுள்ளார். 

இதில் கவனிக்க வேண்டியது, ஐந்து லட்சத்தை தான் ஏற்க மறுப்பதற்கு காரணம் வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற எனது கொள்கைதான் என்று பீஜே சொல்லவில்லை. தனக்கு ஐந்து லட்சம் தர முன் வந்த அந்த தனவந்தர் யாரென்று எனக்குத் தெரியாது. எனவே எனக்கு வேண்டாம் என்றுதான் பீஜே காரணம் சொல்கிறார். அப்படியானால் அந்த தனவந்தர் தெரிந்தவராக இருந்திருந்தால் வாங்கியிருப்பார்தானே? 

சரி. வெளிநாட்டு நிதி கூடாது என்ற கொள்கை இவர் ஜாக்கில் இருந்து கழன்ற காலத்திலேயே, அதாவது தவ்ஹீத் பிரச்சாரக்குழு உருவான காலத்திலேயே இவர் உருவாக்கிக் கொண்டதாகும். அப்படியானால் தான் மட்டும் வெளிநாட்டு நிதி வாங்காமல் இருந்தால் மட்டும் போதாது. வேறு யாருக்கும் வாங்கிக் கொடுக்கவோ, பரிந்துரை செய்யவோ கூடாது. அப்போதுதான் இவர் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்று அர்த்தம். இந்த அடிப்படையில் இலங்கையிலிருந்து வந்த அந்த ஐந்து லட்சத்தை இவர் திருப்பி அனுப்பியிருந்தால், உண்மையில் இவர் கொண்ட கொள்கையில் உறுதியானவர் என்று அர்த்தம். ஆனால் இவரோ கடையநல்லூரில் இயங்கும் ததஜ  சார்பு நிறுவனமான இஸ்லாமிய கல்லூரிக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்கிறார். இதிலிருந்து இவரது வெளிநாட்டு நிதிக் கொள்கையின் லட்சணம் தெரியவில்லையா? 

இப்போது பீஜே சொல்லலாம். இஸ்லாமியக் கல்லூரி என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவைப் பெற்றது தானே தவிர, தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமானதல்ல என்று. ஏற்கனவே காயல்பட்டினம் இஸ்லாமியக் கல்விச் சங்கம் விசயத்தில் இப்படி இவர் சொன்னவர்தான். பின்பு நாம், இஸ்லாமிய கல்விச் சங்கம் ஹாமித்பக்ரிக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவரது இன்றைய ஜமாஅத் நிர்வாகிகள் பலர் அந்த சங்கத்தின் அங்கம் என்று பட்டியலிட்டோம். அதை பீஜெயால் மறுக்கமுடியவில்லை. அதே போல் இந்த இஸ்லாமியக் கல்லூரி வெறுமனே ஜமாஅத் ஆதரவு பெற்ற நிறுவனம் மட்டுமல்ல. முழுக்க முழுக்க ஜமாஅத்தின் தூண்கள் அங்கம் வகிக்கும் நிறுவனமாகும்.

இஸ்லாமியக் கல்லூரி சம்மந்தமான விபரங்கள்;

இக்கல்லூரிக்காக உருவாக்கப்பட்ட டிரஸ்டின் பெயர்; இஸ்லாமிய அறக்கட்டளை.

இந்த டிரஸ்டின் அங்கத்தவர்கள்;
  1. எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ் ஹாஜா.
  2. ஹாமித்பக்ரி.
  3. அப்துல் ஜலீல் மதனீ.
  4. சம்ஷுல்லுஹா.
  5. முஹம்மது அலி ரஹ்மானி.
  6. ஜே.எஸ்.ரிபாயி.
  7. டி.எம்.ஜபருல்லாஹ்.
  8. அப்துரரஹ்மான் பிர்தவ்சி.
  9. எம்.ஐ.ஸுலைமான்.
  10. எம்.எஸ்.ஸுலைமான்.
  11. அலிஅக்பர் உமரி.
இந்த டிரஸ்டிகளில் இன்றும் பீஜெயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பலர் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இதில் தமுமுக பிரிவின் பின்னால் ரிபாயி போன்ற சிலர் விலகிய பிறகு, பீஜேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான கலீல்ரசூல், அன்வர்பாஷா உள்ளிட்டோர் டிரஸ்டிகளாக சேர்க்கப்படுகிறார்கள். இந்த கல்லூரியில் அன்றும், தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகிகள் தான் படம் நடத்தினர்கள். நிர்வாகம் செய்தார்கள். இன்றும் இந்த கல்லூரி ததஜ மேலான்மைக்குழுத் தலைவர் சம்சுல்லுஹா தலைமையில், ஜமாத்தின் கல்லூரி போலவே செயல்படுகிறது. மேலும், இந்த இஸ்லாமிய அறக்கட்டளை டிரஸ்டை ஜமாஅத்தில் சேர்க்கவேண்டும் என்ற கருத்து எழுந்தபோது, அதை சைபுல்லாஹ் நீங்கலாக , அனைவரும் எதிர்த்தார்கள். குறிப்பாக கலீல்ரசூல் கடுமையாக எதிர்த்தார். அதன் பின்னால் பீஜே தலைமையில் நடந்த பிறிதொரு அமர்வில், ஜமாஅத்தின் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இக்கல்லூரி ஜமாஅத்தின் அதரவு பெற்ற கல்லூரியாக அவதாரம் எடுத்தது.
  1. இக்கல்லூரியின் பாடத்திட்டம் ஜமாஅத் தான் தீர்மானிக்கும்.
  2. இக்கல்லூரியில் மாணவர் சேர்க்க; நீக்கம் ஜமாஅத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
  3. கணக்கு வழக்குகளில் ஜமாஅத் தலையிடும்.
உள்ளிட்டவைகள் முக்கிய நிபந்தனைகளாகும். மேலும் இந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கு சொந்தமான பல லட்சங்கள் மதிப்புள்ள ஒரு சொத்து இன்றைக்கு ததஜ கைவசம் உள்ளது. இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், அது தனி நிர்வகம்மா; அதுக்கும் ஜமாத்துக்கும் சம்மந்தமில்லம்மா; என்று பீஜே ஜகா வாங்குவார் என்பதற்காகத் தான்.

இப்போது சொல்லுங்கள். பீஜே வெளிநாட்டு நிதியில் யோக்கியராக இருந்தால், அந்த நிதியை திருப்பி அனுப்பாமல், ஜமாஅத்தின் மேற்பார்வையில் இயங்கும் ஒரு கல்லூரிக்கு வாங்கிக் கொடுத்தது ஏன்? பேங்கில் நாம் போடும் பணத்திற்கு வரும் வட்டியை வாங்கி, வேறு நற்காரியத்திற்கு பயன்படுத்தினால் கூட ஹராம் என்று பத்வா வழங்கும் பீஜே, தான் கொண்ட கொள்கைக்கு மாற்றமாக அதே வெளிநாட்டு நிதியை தனது ஜமாஅத் மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு வாங்கித் தந்தது முரண்பாடில்லையா? [குறிப்பு; வட்டியை இங்கே உதாரணத்திற்குத்தான் காட்டியுள்ளோம். அதை நாம் சரிகானவில்லை. எனவே அதை வைத்து ஹலால்- ஹராம் என பீஜே திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்]

மேலும், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பணிகளுக்காக ஹாமித்பக்ரி, சைபுல்லாஹ் ஹாஜா ஆகியோர் வெளிநாட்டு நிதி பெற முயற்ச்சித்தார்கள். அது தனி நிறுவனமாக இருந்தாலும், இவ்விருவரும் ஜமாஅத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பதால், ஜமாஅத் தான் வசூலிக்கிறது என்ற தோற்றம் வரும் என்று நான் தடுத்து விட்டேன் என்று கூறும் பீஜே, அதே முக்கிய நிர்வாகிகளான ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும், லுஹாவும், இரண்டு சுலைமாங்களும், பிர்தவ்சியும், கலீல் ரசூலும், அன்வர்பாஷாவும் அங்கம் வகிக்கும் இந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கு தானே முன் வந்து வெளிநாட்டு நிதியை பெற்றுத் தருகிறார் என்றால், இப்போது ஜமாஅத்தின் கொள்கை பாதிக்கப்படாதா? ஜமாஅத் பெயரில் வாங்கினால் தவறு. ஜமாஅத் நிர்வாகிகள் தனியாக கூடி ஒரு டிரஸ்டை உருவாக்கி அதற்காக வாங்கினால் தவறில்லையோ? மேலும், இஸ்லாமிய அறக்கட்டளை வெளிநாட்டு நிதி பெறலாம் என்றால், இஸ்லாமிய கல்விச் சங்கம் வெளிநாட்டு நிதி பெற முயற்ச்சித்ததை தடுத்தது பீஜேயின் மாற்றாந்தாய் மனப்பான்மையில்லையா? 

இதையொட்டி நாம் கேட்பது;
  1. வெளிநாட்டு நிதி ஜமாஅத் பெயரால் பெறக்கூடாது என்றால், ஜமாஅத் நிர்வாகிகள் தனிக்கடை போட்டு வசூலிக்கலாமா? அதற்கு பீஜே துணை நின்றது அவரது கொள்கைக்கு முரணில்லையா? பீஜேயின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில், அவரது ஜமாஅத் நிர்வாகிகள், வெளிநாடுகளில் ஜமாஅத்திற்காக இல்லாமல் துணை நிறுவனங்களை ஏற்படுத்தி வசூலித்துக் கொள்ளலாமா?
  2. ஜமாஅத் சம்பளம் கொடுக்க கூட முடியாமல் திணறியபோது, ஹாமித்பக்ரி இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்காக வசூல் வேட்டையாடினார் என்று குமுறிய பீஜே, அதே காலகட்டத்தில் ஒரு பெருந்தொகையை இஸ்லாமிய அறக்கட்டளைக்கு பெற்றுத்தந்தது முரண்பாடில்லையா? 
  3. வெளிநாடுகளில் நாமாகப் போய் வசூலிக்கக் கூடாது. வெளிநாட்டினர் தாமாக தந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்றால், இதுவரை எத்தனை கோடிகள் வெளிநாட்டவரிடம் இருந்து ஜமாத்திற்காக வாங்கப்பட்டது என்று பீஜே சொல்லுவாரா?
  4. இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதன் பெயரால் இயங்கும் இஸ்லாமியக் கல்லூரிக்கும், அதன் சொத்துக்களுக்கும் ஜமாத்திற்கோ, தனக்கோ சம்மந்தமில்லை என்று கூறுவரா? அதன் சொத்து ஆவணங்களை ஜமாஅத் வாங்கி வைத்திருப்பது எதற்காக என்று கூறுவாரா?
  5. ஜமாத்திற்கு சம்மந்தமில்லை என்று பீஜே கூறினால், சென்னை களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இரு தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளை உடனடியாக நிறுத்தியது போல், இஸ்லாமியக் கல்லூரியின் தலைவர், முதல்வர், ஆசிரியர்கள் என வியாபித்திருக்கும் தனது ஜமாத்தினரை உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறச் சொல்லுவாரா? 
  6. இஸ்லாமியக் கல்லூரி சரியென்றால், அதில் தனது ஜமாஅத் நிர்வாகிகள் அங்கம் வகிக்கலாம் என்றால், அதற்காக வெளிநாட்டு நிதியும் பெறலாம் என்றால், காயல்பட்டினம் இஸ்லாமிய கல்விச் சங்கமும் சரிதான் என்றும், அதற்காக வெளிநாட்டு நிதி பெறலாம் என்றும், அதை ஹாமித்பக்ரி மீதான காழ்ப்புணர்வில் தான் எதிர்த்தேன் என்றும் பீஜே சொல்லுவாரா?
  7. ஹாமித்பக்ரியின் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இன்றும் அண்ணனின் அபிமானியாக இருக்கும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி உள்ளிட்ட அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயிகள் சிலர் சம்பளம் பெற்றது எதற்காக என்று பீஜே சொல்லுவாரா? 
  8. இலங்கை வெளிநாடு இல்லை என்றோ, அந்த நாட்டின் பணம் அன்னிய நிதியில்லை என்றோ, தனது கொள்கை அரபு நாட்டு நிதிக்கு மட்டும் தான் என்றோ பீஜே சொல்லுவாரா?
வெளிநாட்டு நிதியும், பீஜேயின் அப்பட்டமான பொய்களும் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்....

புதன், 2 மே, 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 8]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரின் 7 வது தொடரில், அபூதாவூத் மொழிபெயர்ப்புக்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டதையும், பின்பு அவர் அபூதாவூதை மொழிபெயர்த்து தராததால் பீஜேயின் திர்மிதியை வெளியிடுவதற்காக பீஜெயிக்கு ஒரு லட்சம் இஸ்லாமிய கல்விச் சங்கம் வழங்கிய விஷயங்களை எழுதி, திர்மிதி விற்பனை தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினோம். இப்போது அதே திர்மிதி தொடர்பாக இன்னும் சில விசயங்களைப் பார்ப்போம்.

திர்மிதி நூலை சாஜிதா புக் சென்டர் விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அண்ணனால் நியமிக்கப்பட்ட அபிமானியான அன்வர்பாஷாவிடம் கொடுத்து வந்த நிலையில், திடீரென்று மீதமுள்ள நூல்களை மீடியாவேல்டில் ஒப்படைக்கச் சொன்னார் பீஜே. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டு குறுகிய நாட்களில் 'எங்கோ தவறு நடந்து விட்டது' என்று வசனம் பேசி மீண்டும் நூல்களை சாஜிதாவிடம் ஒப்படைக்கச் செய்தார். இதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு மீடியாவேல்டிற்கு சென்று பிறகு சாஜிதாவிடம் திரும்பி வருகையில் 318 நூல்கள் குறைவாக இருந்ததாக அந்நிறுவனம் சொல்கிறது. அப்படியானால் இந்த 318 நூல்கள் மீடியாவேல்டினால் விற்கப்பட்டுள்ளது. இந்த நூல்களுக்கான தொகை மொத்த விலையில் குறைந்தது ஒரு நூல் 133 ரூபாய்கள் என்று கணக்கிட்டாலும், 42 ,294 ரூபாய்கள் ஆகும். இந்த தொகை ஹாமித்பக்ரியிடம் வழங்கப் படவில்லை. சாஜிதாவிடமும் வழங்கப்படவில்லை. அப்படியானால் எங்கே சென்றிருக்கும்?. வேறு எங்கே தவ்ஹீத் ஜமாத்திற்குத்தான்.

ஏற்கனவே திர்மிதி வகைக்காக சாஜிதா அன்வர்பாஷாவிடம் வழங்கியது 5 ,47 ,085
இப்போது மீடியாவேல்ட் மூலமாக விற்ற தொகை 42 ,294                                   
ஆக மொத்தம் 5 ,89 ,379 .00 ஐந்து லட்சத்து என்பத்தி ஒன்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தி ஒன்பது ரூபாய்கள்.  

இந்த தொகை எத்தனை ஷேர் ஹோல்டர்களுக்கு எந்தெந்த ஷேர் ஹோல்டர்களுக்கு பீஜெயால் நியமிக்கப்பட்ட அன்வர்பாஷாவால் வழங்கப்பட்டது என்பதற்கு வெள்ளையறிக்கை ஒன்றை பீஜே வெளியிடவேண்டும். அப்படி வெளியிட தவறும் பட்சத்தில் ஹதீஸ் நூலை வெளியிடப்போகிறோம் என்று மக்களிடம் ஹாமித்பக்ரி வசூலித்து வந்த பணத்தை வைத்து, பீஜே திர்மிதி என்ற பெயரில் ஸ்வாஹா செய்துவிட்டார் என்று மக்கள் விளங்கிக்கொள்வார்கள். 

அடுத்து, தவ்ஹீத் ஜமாத்திருந்து நீக்கப்பட்ட[?] ஹாமித்பக்ரி, சாஜிதாவிடம் திர்மிதி விற்ற பணத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார் என்று பீஜே சொன்னதை ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம். ஆனால் உண்மையில் சாஜிதாவிடமிருந்து ஹாமித்பக்ரி திர்மிதி வகையில் ஐந்து பைசா கூட வாங்கவில்லை என்று உறுதியாகக் கூறுகிறோம். பீஜே தனது கூற்றில் உண்மையாளர் என்றால், சாஜிதாவிடமிருந்து ஹாமித்பக்ரி எத்தனை ஆயிரம் ரூபாய்கள் வாங்கினார் என்று சாஜிதா வவுச்சருடன் காட்டவேண்டும்.இல்லையேல் இவர் ஹாமித்பக்ரி மீது அவதூறு சொன்ன பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

மேலும், நாம் மேலே பட்டியலிட்டுள்ள தொகையான 5 ,89 ,379 .00ஐந்து லட்சத்து என்பத்தி ஒன்பதாயிரத்து முன்னூற்றி எழுபத்தி ஒன்பது ரூபாய்கள் என்பது மொத்த விலையான 133 ரூபாய் கணக்குப்படி சுமார் 4431 நூல்களுக்கான தொகையாகும். [விற்கமுடியாத அளவுக்கு சேதமடைந்த நூல்கள் பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளோம்]
இந்த தொகை ஹாமித்பக்ரியிடம் செல்லவில்லை. ஜமாத்திற்குத்தான் சென்றுள்ளது. அப்படியானால் மோசடியாளர் யார்? ஹாமித்பக்ரியா? பீஜேயா? அல்லது அன்வர்பாஷாவா? சிந்தியுங்கள் சகோதரர்களே! 

திர்மிதி வெளியான சில நாட்களிலேயே ஹாமித்பக்ரி ஜமாத்திலிருந்து நீக்கப் பட்டதாகவும், அவர் சாஜிதாவிடமிருந்து திர்மிதி விற்ற காசை வாங்கி சாப்பிட்டதாகவும், ஷேர் ஹோல்டர்களை முழுமையாக ஏமாற்றியதாகவும் பீஜே சொல்கிறாரே! ஷேர் ஹோல்டர்களுக்கு பணத்தை திருப்பித் தரவேண்டும் என்பதற்காக முயற்சித்த ஹாமித்பக்ரி அவர்கள், லுஹாவுக்கு ஒரு லட்சம் வாயில் தட்டினார். பீஜெயிக்கு ஒரு லட்சம் வாயில் தட்டினார். பின்பு புத்தகங்கள் வெளியான பிறகு அதிலிருந்து ஐந்து பைசா வாங்காமல் அனைத்தும் ஜமாத்திற்கு கிடைக்கச் செய்தார். அதன் மூலம் ஷேர் ஹோல்டர்களுக்கு பணம் போய் சேர்ந்திருக்கும் என்று நம்பினார். ஆனால் திர்மிதி விற்ற காசை லட்சக்கணக்கில் வாங்கிய ஜமாஅத், அதை என்ன செய்ததோ தெரியவில்லை. இன்று ஹாமித்பக்ரி மீது பழிபோட்டு விட்டு, பரிசுத்த வேதாந்தம் பேசுகிறார் பீஜே. திர்மிதி நூல் காசை சாப்பிட்டு மக்களை ஹாமித்பக்ரி ஏமாற்றவில்லை என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறோம். நாம் மேலே எழுதியுள்ளபடி, திர்மிதி காசை ஹாமித்பக்ரி வாங்கித் தின்றதை சாஜிதா வவுச்சருடன் பீஜே காட்டத் தயாரா?

அயல்நாட்டு நிதியில் பீஜேயின் அப்பட்டமான பொய்கள் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [திருத்தப்பட்டது][part 7]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எங்கே போனது 5 ,47 ,085 ரூபாய்கள்?

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், அபூதாவூத் மொழிபெயர்ப்புக்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டதையும், பின்பு அவர் அபூதாவூதை மொழிபெயர்த்து தராததால் பீஜேயின் திர்மிதியை வெளியிடுவதற்காக பீஜெயிக்கு ஒரு லட்சம் இஸ்லாமிய கல்விச் சங்கம் வழங்கிய விஷயங்களை எழுதி, இவர்கள் தானமாக தந்த தியாகிகள் அல்ல. துரோகிகள் என்று தெளிவு படுத்தியிருந்தோம். இந்த தொடரில் திர்மிதி தொடர்பாகக பீஜே சொல்லும் இன்னொரு பொய்யை அலசுவோம்.

''பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன். மேலும், திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப பணம் போட்டவர்களுக்கு ஜமாஅத் திரும்பக் கொடுக்கும்.பணம் தந்தவர்கள் பட்டியலை ஜமாத்திடம் தரவேண்டும் என்ற நிபந்தனை விதித்தோம்.

இந்த நூலை விற்பனை செய்யும் உரிமை சாஜிதா புக் சென்டர் வசம் இருந்தது. அவர் விற்று பணம் தரும் போதெல்லாம் பங்கு சேர்ந்தவர்களுக்கு உரிய தொகையை நாங்கள் கொடுத்து வந்தோம். ஆனால் திர்மிதி வெளியாகி சில நாட்களில் ஹாமித்பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். உடனே சாஜிதா புத்தக வியாபாரியிடம் சென்று மீதிப் புத்தகத்தின் பணத்தை என்னிடம் தரவேண்டும்.ஜமாஅத்தில் கொடுக்கக் கூடாது என்று கூறி அந்தப் பணத்தை சாப்பிட ஆரம்பித்தார். ஷேர் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் தவ்ஹீத் ஜமாஅத்தில் எல்லாப் பணத்தையும் கொடுத்து விட்டேன் என்று கூறி அவர்களை விரட்டியடித்தார். பல நூறு ஏழை மக்கள் இவரிடம் கொடுத்த பணத்தை இன்னும் திரும்பப் பெறவில்லை. அவர்களின் சாபமும் பத்துவாவும் அவர் மீது உள்ளது'' இவ்வாறு பீஜே கூறியுள்ளார்.

உண்மை நிலை என்ன?

திர்மிதியை வெளியிடும் உரிமை இஸ்லாமிய கல்விச் சங்கத்திடமும், அதை விற்பனை செய்யும் உரிமை சாஜிதாவிடம் வழங்கப்பட்டது. சாஜிதா தரும் பணத்தை ஷேர் ஹோல்டருக்கு விநியோக்கிக்கும் பொறுப்பு பீஜேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான அன்றும் பொருளாளர், இன்றும் பொருளாளராக  இருக்கும் அன்வர் பாஷாவுக்கு வழங்கப்பட்டது. இதுவரைக்கும் பீஜே சொல்வது உண்மை. அதற்கு பிறகு சொல்வது அவருக்கே உரித்தான வழக்கமான பொய். 

திர்மிதி ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. அதை சென்னையில் அச்சடித்து பைண்டிங் செய்யப்படாமல், பிரிண்டிங் சிவகாசியிலும், பைண்டிங் சென்னையிலும் செய்யப்பட்டது. இதில் பீஜேயின் உறவினர் ஒருவர் பலனடைந்தார். தேவைப்பட்டால் அவர் பெயரைச் சொல்வோம். பிரிண்டிங் ஓரிடத்திலும், பைண்டிங் ஓரிடத்திலும் நடந்ததால் அந்த நூலின் சுமார் எழுநூறு புத்தகங்கள் அளவுக்கு சேதமானது. மேலும் பைண்டிங் சரியில்லை என்ற குற்றச்சாட்டு திர்மிதி வெளியீட்டு விழாவிலேயே முன்வைக்கப் பட்டது.  ஆக, விற்பனை செய்யும் தரத்தில் ஏறக்குறைய 4300 புத்தகங்கள் அளவுக்குத் தான் சாஜிதாவுக்கு கிடைத்தது. இதுபோக இந்த புத்தகங்கள் தேங்கிய நிலையில், அவ்வப்போது பீஜேயின் அனுமதியின் பேரில் 150 ரூபாய்களுக்கு சில நூறு பிரதிகள் விற்கப்பட்டது. ஆரம்பத்தில் சில்லறை விலை 230 ஆக இருந்ததை மாற்றி, 190 ரூபாய் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் மொத்தமாக வாங்குபவர்களுக்கு கழிவு உண்டு. 

இந்த நூலை விற்று வந்த சாஜிதா புக் சென்டர் நிறுவனர் ஜக்கரியா அவர்கள், 
5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] ரூபாய்களை அன்வர்பாஷாவிடம் வழங்கியுள்ளார். அதோடு பின்னாளில் ஒரு ஷேர் ஹோல்டருக்கு ஐயாயிரம் வழங்கியுள்ளார். ஆக ஐந்து லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரத்து என்பத்தி ஐந்து ரூபாய்கள் ஜக்கரியவால் திர்மிதி நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக திடீரென்று பீஜே அருள் வந்தவராக மீதமுள்ள புக்குகளை மீடியா வேல்டிடம் ஒப்பைடைக்க சொன்னார். பின்பு திரும்பவும் சாஜிதாவிடம் ஒப்படைக்கச் சொன்னார். இதில் மீடியா வேல்டு எத்தனை நூல்கள் விற்றது; அந்த தொகை என்ன ஆனது என்பது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

மேலும், திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு சாஜிதா புக் வியாபாரியிடம் திர்மிதி காசை வாங்கி சாப்பிட்டார் என்று பீஜே சொல்கிறாரே! சில நாட்களில் திர்மிதி ஐந்தரை லட்சத்துக்கு வியாபாரமாகி விட்டது என்கிறாரா? பொய் சொல்வதற்கும் ஒரு அளவில்லையா? திர்மிதி காசை ஹாமித்பக்ரி சாப்பிட ஆரம்பித்தார் என்று கதை விடும் பீஜே, ஜக்கரியா தந்த தொகையை லாவகமாக மறைத்தது ஏன்? அந்த தொகையை சொன்னால் இவர் சொல்லும் பொய் அடிபட்டுப் போகும் என்பதாலா?

திர்மிதி விசயத்தில் பீஜெயிடம் நாம் வைக்கும் கேள்விகள்;
  1. திர்மிதிக்காக இஸ்லாமிய கல்விச் சங்கத்திடம் ஒரு லட்சரூபாய் ராயல்டி வாங்கியது உண்மையா? இல்லையா?
  2. ஜக்கரியாவிடம் 5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] வாங்கியது உண்மையா? இல்லையா?
  3. இந்த தொகை யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்ற வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?
  4. ஹாமித் பக்ரி வழங்கிய ஷேர் ஹோல்டர்கள் பட்டியலை வெளியிட்டு, இன்னினாருக்கு நாங்கள் பணத்தை வழங்கிவிட்டோம்; இன்னின்னாரை ஹாமித்பக்ரி ஏமாற்றி விட்டார் என்று வெளியிடவேண்டும்.
  5. திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி நீக்கப்பட்டார் என்பதற்கு  திர்மிதி வெளியான நாளையும், ஹாமித்பக்ரி நீக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து நிரூபிக்கத் தயாரா?
  6. ஹாமித் பக்ரியிடம் அபூதாவூதுக்காக லுஹாவும், திர்மிதிக்காக பீஜேயும் வாங்கிய தொகையையும், திர்மிதி விற்று ஜக்கரியா தந்த தொகையையும் மறைத்த நோக்கம் என்ன?

அடுத்து வருவது;
த த ஜமாஅத் வெளிநாடுகளில் பெற்ற நிதி உதவிகள்; வெளிநாடு நிதி மூலம் கட்டிய பள்ளிகள். அதற்காக பீஜே செய்த முயற்சிகள்.

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஆளாய் பரந்த அந்த ஒரு லட்சம்.

அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான பொய்களையும், முரண்பாடுகளையும் அலசிவரும் இந்த தொடரில், இப்போது அவர் தன்னைத் தானே திர்மிதியை தந்த தியாகியாக காட்டிக்கொள்வதில் உள்ள பொய்களை பார்ப்போம்.

''நான் திர்மிதி நூலை மொழிபெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தேன்''என்று பீஜே கூறுகிறார். அதாவது இவர் தயாரித்து சொந்தமாக ரிலீஸ் செய்ய இருந்தாராம். அவரும், அவரோடு நெருக்கமாக இருந்தவர்களும் உயிரோடு இருக்கும் இந்த காலத்திலேயே இப்படி அப்பட்டமாக பொய் சொல்கிறார் என்றால், அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும். உண்மையில் திர்மிதியைப் புதுப்பெண்ணாக இவர் ஹாமித்பக்ரி கையில் ஒப்படைத்தாரா? என்றால் இல்லை. ஏற்கனவே இந்த திர்மிதி இவர் ஜாக்கில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே ஏறக்குறைய முப்பது பாகங்களுக்கும் மேலாக சிறிய நூல்களாக வெளிவந்து விட்டது. அந்த பாகங்களை எல்லாம் ஒட்டித்தான் ஹாமித்பக்ரி கையில் ஒப்படைத்தார். அதாவது அவர் அடிக்கடி சொல்வாரே! 'புதிய மொந்தையில் பழைய கள்' என்று; அதுபோல ஏற்கனவே வெளியான நூலைத்தான் 'மேக்கப்' போட்டு ஹாமித்பக்ரியிடம் தந்தார். இதில் தியாகம் எங்கே வாழுது? துரோகம் தான் வாழுது! அது என்ன துரோகம்? இவரது திர்மிதியை ஏற்கனவே விற்றுவந்த ஜாக்கின் வெளியீட்டு நிறுவனம், இவர் ஹாமித்பக்ரியிடம் கொடுத்து பெரிய புக்காக வெளியிட்ட பின்னால் ஜாக்கிடம் இருந்த சிறிய வடிவிலான திர்மிதி விற்பனையாகாமல் தேங்கிப் போனது. ஏற்கனவே ஒரு நிறுவனம் திர்மிதியை விற்று வரும் நிலையில், அதே திர்மிதியை இன்னொருவருக்கு கொடுப்பது, ஒரே நிலத்தை இரண்டு பேருக்கு விற்பதைப் போன்ற துரோகமல்லவா? இந்த துரோகத்தை செய்த பீஜே, அதையே தியாகமாக காட்டுவது அவரின் திறமைதானே!

இங்கே இன்னொன்றையும் பீஜே சொல்வார். அது என்னவென்றால், திர்மிதி சிறிய நூல்களாக பல பாகங்களாக வெளியாகியபோது, அதற்கான உரிமையை நான் அவர்களுக்கு கொடுக்கவில்லை. நானே புத்தகத்தை பிரிண்டிங் செய்து பைண்டிங் செய்து நூலாக அவர்களுக்கு கொடுப்பேன். அதற்குரிய விலையை நான் வாங்கிக் கொண்டேன். ஆனால் ஹாமித்பக்ரியிடம் ஹதீஸ்களை அவர் கையில் தூக்கி கொடுத்து, அதற்க்கான வெளியீட்டு உரிமையை இஸ்லாமிய கல்விச் சங்கத்திற்கு வழங்கினேன். எனவே அது வேறு; இது வேறு என்று பீஜே சொல்லலாம். ஒரு பொருளை ஒருவர் மூலமாக விற்றுவரும் நிலையில், அதே பொருளை வேறு வடிவத்தில் விற்பதாக இருந்தால் ஏற்கனவே விற்றுவரும் அவரிடம் அதைப் பற்றி பேசி, அவர் மறுத்தால் அவர் பாதிக்காத வகையில் வேறு ஒருவர் மூலமாக விற்கலாம். ஆனால் திர்மிதியை சிறிய பாகங்களாக வெளியிட்டு வந்த அந்த நிறுவனத்துடன் பீஜே, இந்த ஆலோசனை நடத்தினார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவேண்டும். நாம் விசாரித்த வகையில், இப்போது திர்மிதி பெரிய புத்தகமாக வெளியிட்டால் ஏற்கனவே சிறிய பாகங்களாக வெளியிட்டவர்கள் பாதிக்கப்படுவார்களே என்ற கருத்து பீஜெயிடம் சொல்லப்பட்டபோது, இல்லம்மா! சிறிய பாகம் வாங்க விரும்புறவன் அதை வாங்கிருவான்; பெரிய பாகமாக வாங்க விரும்புறவன் இதை வாங்கிருவான். எனவே அந்த விற்பனை பாதிக்காது என்று சொன்னதாக தகவல் கிடைத்தது. எது எப்படியோ, திர்மிதியை ஹாமித்பக்ரி கையில் பீஜே ஒப்படைத்தபோது அது புத்தம்புதிய காப்பியாக இருக்கவில்லை. அது ஏற்கனவே பல தியேட்டர்களில் ஒடி, மழை பெய்தது போன்ற கோடு வரும் அருதப் பழசான பிலிம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

''பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன்''என்று பீஜே கூறுகிறார்.
ஹாமித்பக்ரியிடம் திர்மிதியை கொடுத்ததை கூறும் பீஜே, அதற்காக அவரிடம் இருந்து வாங்கியதை மட்டும் லாவகமாக மறைத்து தன்னை தியாகியாக காட்டுகிறார். அபூதாவூத் மொழிபெயர்த்து தருவதற்காக முன்பணமாக ஒரு லட்சம் வாங்கிய லுஹா அல்வா கொடுத்தார். [அவர் மாவட்டத்தில் அதுதானே பிரபலம்] பின்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திய பீஜே, ஹாமித்பரியிடம் தனது திர்மிதி நூலை வெளியிட ஒரு லட்சம் பெற்றுக் கொண்டார். முதலில் 3000பிரதிகள் அச்சடிப்பது என்ற அடிப்படையில் அதற்காக 60 ,000 வாங்கிக்கொண்ட பீஜே, பிறகு தனது பணத்தேவையை முன்னிட்டு 5000 பிரதிகள் அச்சடித்துக் கொள்ளுங்கள் என்று ஹாமித்பரியிடம் சொல்லி மீண்டும் 20000 பெற்றுக் கொண்டார். ஆக 5000 பிரதிகளுக்கு ஒரு நூலுக்கு 20 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார். [திர்மிதியின் சில்லறை விலை 230 ரூபாய்; மொத்தவிலை 180மட்டுமே. இதில் விற்பனையாளருக்கு கழிவு வேறு. அந்தவகையில் நூலின் அசல் விலையில் சுமார் ஆறில் ஒரு பங்கை பீஜே ராயல்டி பெற்றுள்ளார்] 

மேலும், ஒரு லட்சம் என்பது இன்றைக்கு சாதாரணம். ஹாமித்பக்ரி மோசடி செய்தார் என்பதற்கு அன்றைக்கு பத்து லட்சம் என்றால் பயங்கரமான தொகை என்று பில்டப் காட்டும் பீஜே; இந்த ஒரு லட்சமும் அன்றைக்கு உள்ள மதிப்பில் எவ்வளவு பெரிய தொகை என்பதை சொல்வாரா? கணக்கு தெரியவில்லை என்றால் இவர் தொண்டியில் கட்டியுள்ள வீட்டின் கதவு ஜன்னல்களை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

ஆக, மக்களிடம் ஷேர் வசூலித்து ஹாமித்பக்ரி அபூதாவூத் வெளியிடாத காரணத்தால் ஜமாஅத் பெயர் கெட்டது போலவும், ஜமாஅத்தின் களங்கத்தை துடைக்கும் வகையிலும், ஹாமித்பக்ரியை கடனிலிருந்து மீட்கும் வகையிலும், முல்லைக்கு தேர் தந்த பாரி போன்று, இவர் தனது திர்மிதியை தானமாக தந்தது போன்று பிலிம் காட்டுகிறாரே! இவர் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர் என்று மக்களே புரிந்து கொள்ளுங்கள். ஒருவரை கடனிலிருந்து காப்பது என்றால் அவருக்கு தனது பொருளை இலவசமாக கொடுத்து இதை விற்று கடனை கட்டு என்று ஒருவர் சொன்னால் அவர் உண்மையில் தியாகி. ஆனால் ஒருவரது கடன் இக்கட்டை பயன்படுத்தி தனது பொருளை வியாபாரமாக்கி பணம் வாங்கிக்கொண்ட ஒருவர் தியாகியாக முடியுமா? தான் ஒருவருக்கு கொடுத்த பொருளை சொல்லிக்கட்டும் பீஜே, அதற்கு பகரமாக தான் பெற்ற கையூட்டை மறைத்தாரே! இப்போது பீஜே தியாகியா? துரோகியா? மக்களே முடிவு செய்யுங்கள்.

திர்மிதி விற்பனை காசை சாப்பிட்டது ஹாமித்பக்ரியா? ஜமாத்தா? அன்வர்பாஷாவா?

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 5]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முன்னுரை; அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயின் அன்றும் இன்றும் உள்ள நிலைப்பாடுகளையும், அயல்நாட்டு நிதி பிரச்சினையில் அவர் அடித்து விடும் அப்பட்டமான பொய்களையும் அலசிவரும் இந்த தொடரில், இதுவரை அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் அவரது இப்போதைய நிலைப்பாடு அவரது தீர்ப்புக்கே மாற்றமாக அவரது மனோ இச்சை முடிவு என்பதையும், தானும் தனது ஜமாத்தும் வெளிநாட்டு நிதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற பெயரால் ஹாமித்பக்ரியும், சைபுலாஹ்வும் தான் வசூல் வேட்டையாடினார்கள் என்ற அவரது பொய்யை உடைக்கும் வகையில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் உறுப்பினர்கள் யார் யார் என்பதை பட்டியலிட்டதோடு, அந்த சங்கத்திற்கும் பீஜெயுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தினோம். அந்த சங்கம் குறித்த அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பினோம். 

இப்போது அவர் தன்னைத் தானே திர்மிதியை தந்த தியாகியாக காட்டிகொள்வதற்கு காரணமாக அமைந்த அபூதாவூத் மொழிபெயர்ப்பு குறித்த அவரின் அப்பட்டமான பொய்யைப் பார்ப்பதற்கு முன்னால் ஏற்கனவே கேட்ட ஒரு கேள்வியை பீஜெயிக்கு மீண்டும் வைக்கிறோம்.அதற்கு அவர் பதில் சொல்லியாகவேண்டும்.

இன்று பீஜே ஜமாஅத்தில் இல்லாத இரு பிரச்சாரகர்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர் என்று சொன்னீர்களே! அந்த இருவர் யார்? 
 
அபூதாவூத் விசயத்தில் பீஜே சொல்வது என்ன? 

ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் அரபுநாடுகளுக்கு சென்றனர். அங்கு மக்களிடம் ஒரு திட்டத்தை முன்வைத்தனர். அதாவது நாங்கள் ஹதீஸ் நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிடப்போகிறோம். அதில் நீங்கள் ஷேர் சேர்ந்தால் நல்ல லாபத்துடன் முதலீட்டை திரும்பத்தருவோம் என்று சொல்லி நிதி திரட்டினார்கள். அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் முதன்மை நிர்வாகிகளாக இருந்தாலும் மற்ற நிர்வாகளிடமோ மூத்த அறிஞர்களிடமோ அவர்கள் எந்த ஒப்புதலும் பெறவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அவர்கள் வெளியிடப்போவதாகவும் அவர்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வெளியிடப்போவதாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி நிதிகளை திரட்டினார்கள்.

இப்படி பங்கு சேர்த்து பல மாதங்கள் ஆன பின்னும் நூல் வெளியிடும் எந்த முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. பங்கு சேர்ந்தவர்கள் என்னிடமும் லுஹாவிடமும் தொலைபேசி வழியாகவும், எழுத்து மூலமாகவும் புகார்களை அனுப்பினார்கள். உடனடியாக நிர்வாகக்குழுவை கூட்டி ஹாமித்பக்ரியிடமும் சைபுல்லாஹ்விடமும் விளக்கம் கேட்டோம். யாரை கேட்டு ஷேர் சேர்த்தீர்கள்? நீங்கள் இருவரும் ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளராக இருந்துகொண்டு இப்படி நிதி திரட்டுவது ஜமாஅத்தின் செயலாக பார்க்கப்படாதா? சரி! பணம் திரட்டி வந்து பல மாதங்கள் கடந்த பின்னரும் எந்த நூலையும் வெளியிட முயற்சி செய்யாமல் இருப்பது ஏன்? உடனடியாக ஷேர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று பீஜெயாகிய நான் வற்புறுத்தினேன். ஆனால் அதிகமான நிர்வாகிகள் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம்; உடனே ஹதீஸ் நூலை வெளியிட்டு இவ்விருவரும் கொடுத்த வாக்கை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என்று சொன்னதால் இவ்வாறே முடிவு எடுக்கப்பட்டது.

இவர்கள் சொன்னபடி அபூதாவூதை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அபூதாவூத் 300 ஹதீஸ்களை லுஹா மொழிபெயர்த்து வைத்து இருந்தார். மேலும் 700 ஹதீஸ்களை மொழிபெயர்த்து 1000 ஹதீஸ்களாக வெளியிட எவ்வளவு நாள் தேவைப்படும் என்று லுஹாவிடம் கேட்டபோது தனக்கு ஆறு மாதங்களாவது தேவைப்படும் என்று கூறிவிட்டார். அப்படியானால் இன்னும் தாமதப்படும் மக்களிடம் இன்னும் கெட்டபெயர் ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் கருதினார்கள். நான் திரிமிதி நூலை மொழிபெயர்த்து சொந்தமாக வெளியிட திட்டமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தேன். பல மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள் வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு வழங்கினேன்.
மேலும், திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை விற்பனையாவதற்கு ஏற்ப ஷேர் போட்டவர்களுக்கு பணத்தை ஜமாஅத் வழங்கும் என்று நிபந்தனை விதித்தோம்.

மேலே நீங்கள் படித்தது அபூதாவூத் வெளியீடு குறித்த பீஜேயின் வர்ணனையாகும். இதில் முதலாவதாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், ஹாமித்பக்ரியும்-கைவிட்ட தமுமுகவும் என்ற ஒரு நீண்ட தொடரை எழுதிய பீஜே, அபூதாவூத் வெளியிடுவதற்காக ஹாமித்பக்ரிதான் ஷேர் சேர்த்தார் என்று முழுக்க முழுக்க ஹாமித்பக்ரியை சாடியிருந்தார். அதில் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை குறிப்பிடவில்லை. பார்க்க; 

அப்போது சைபுல்லாஹ்வை சேர்க்காததற்கு காரணம் அவர் அன்று ஜமாஅத்தில் இருந்தார். இப்போது ஷேர் மோசடி என்று இவரால் கூறப்படும் இதில் சைபுல்லாஹ் அவர்கள் பெயரை இணைப்பதற்கு காரணம் அவர் இப்போது ஜமாஅத்தில் இல்லை. ஆக இவரது ஜமாஅத்தில் இருந்தால் இவரே மோசடி என்று சொல்லும் ஒரு திட்டத்தின் பங்குதாரரை மறைத்து காப்பாற்றுவார். இவரை விட்டு வெளியேறினால் அவரை மோசடியாளராக அடையாளம் காட்டுவார் என்பதற்கு இது ஒரு சான்று என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் அபூதாவூத் ஷேர் சேர்த்தது தனக்கோ ஏனைய நிர்வாகிகளுக்கோ தெரியாது. எங்களிடம் அவர்கள் அனுமதி வாங்கவில்லை. பின்னர் இதுபற்றி மக்கள் புகாரளித்த பின் தான் அவர்கள் இருவரையும் நிர்வாகக்குழுவில் சங்கைப்பிடித்தோம் என்று சளைக்காமல் சரடு விடுகிறார் பீஜே. ஆனால் இவ்விருவரும் வெளிநாட்டில் ஷேர் வசூலிக்கும் காலத்திலேயே இவருக்கு இந்த விஷயம் தெரியும் என்பதற்கு அவரது வாயாலேயே அல்லாஹ் வாக்குமூலம் கொடுக்க வைத்த அற்புதம் பாரீர்;

ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற இவரது தொடரில், ''இதுபோல் வெளிநாடு சென்று ஹாமித்பக்ரி அபூதாவூத் வெளியிடப்போகிறேன் ஷேர் தாருங்கள். லாபம் தருகிறேன் என்று பல லட்சங்கள் திரட்டினார். என்னிடம் தொலைபேசியில் கேட்டவர்களுக்கு, யாரும் இதில் சேரவேண்டாம் என்று கூறினேன்.'' என்று பீஜே கூறுகிறார்.

இதன் மூலம் அபூதாவூத் வெளியிடுவது தாமதமான பின்னர், புகார் வந்த பின்னர் தான் தனக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிய வந்தது போல் பீஜே சொல்லியது அப்பட்டமான பொய்யல்லவா? தன்னிடம் போனில் கேட்டவர்களை இதில் ஷேர் சேராதீர்கள் என்று பீஜே சொன்னதற்கு காரணம், ஹாமித்பக்ரி மோசடியாளர் என்பதால்தான் என்றால், ஹாமித்பக்ரியின் இந்த மோசடியிலிருந்து ஏனைய மக்களையும் காக்கும் வகையில், ஹாமித்பக்ரி ஷேர்  கேட்டால் கொடுக்காதீர்கள் என்று இவர் அந்த வெளிநாட்டு கிளைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாதது ஏன்? ஷேர் வசூலித்த ஹாமித்பக்ரியை தொடர்பு கொண்டு இந்த ஷேர் நீங்கள் பிடிக்கக் கூடாது; மீறி பிடித்தால் ஜமாஅத் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லாதது ஏன்? சரி! இவர் கூற்றுப் பிரகாரம் ஹாமித்பக்ரி பல லட்சங்கள் அள்ளிக் கொடுவந்தாரே! வந்த பின்னால், ஏங்க பக்ரி! இந்த ஷேர் கலெக்ட் பண்ணீங்களே! அது என்ன ஆச்சு? ஏன் இன்னும் நூலை வெளியிடவில்லை? அதற்காக நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? என்று பீஜே கேட்காதது ஏன்? மக்கள் புகார் வரும்வரை வாய்மூடி மவுனம் காத்தது ஏன்? நிர்வாக்குழு கண்டிப்பதற்கு முன்பே நான் இதுபற்றி கேட்டேன் என்று பீஜே இப்போது சொன்னாலும் மாட்டிக்கொள்வார். 

அடுத்து, அபூதாவூத் விசயத்தில் ஹாமித்பக்ரி வசூலித்தது எவ்வளவு என்று பீஜெயிக்கு தெரியாது என்றால், அது எத்தனை லட்சங்கள் என்று எனக்கு தெரியாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், ஹாமித்பக்ரியும் கைவிட்ட தமுமுகவும் என்ற தொடரில், ''பல லட்சங்கள்; பத்துலட்சத்திற்கு மேல் என்று கூறுகிறார். உணர்வு 16;3௦ ல், சில லட்சங்கள் அது இப்போது எனக்கு நினைவில் இல்லை என்கிறார். பல லட்சங்களா? சில லட்சமா? இது போகட்டும்.

அபூதாவூத் பிரச்சினையில் மக்கள் புகாரளித்த பின் தான் லுஹாவை அணுகி ஆயிரம் ஹதீஸ் கேட்டதாகவும் அவர் ஆறுமாதம் ஆகும் என்றதாகவும் ஒரு செய்தியை சொல்கிறார் பீஜே. ஆனால் உண்மை என்ன? மேலப்பாளையம் வழக்கு ஒன்றில் சிறைமீண்ட லுஹா, தான் மொழிபெயர்த்த அபூதாவூத் ஹதீஸ் இத்தனை வைத்துள்ளேன் என்று ஹாமித்பக்ரியிடம் சொன்ன பின் தான் அபூதாவூத் வெளியிடும் திட்டமே தீட்டப்படுகிறது. அதற்காக ஷேர் பிடிக்கப்படுகிறது. அபூதாவூத் மொழிபெயர்ப்ப்புப் பணிக்காக லுஹாவுக்கு ஒரு லட்ச ரூபாய் இஸ்லாமிய கல்விச்சங்கம் வழங்கியது. உண்மை இவ்வாறிருக்க மக்கள் புகார் வந்த பின் தான் லுஹாவை அணுகியதாக பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பிரச்சினை வந்த பின்பு கூட என்னால் முடியாது; இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று கூறிய லுஹா, இந்த பணிக்காக என்று ஒப்புகொண்டுஒரு லட்சம் வாங்கியது எதற்காக என்று கூறுவரா? நான் ஒரு லட்சம் வாங்கவில்லை என்று லுஹா அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பாரா? 

ஆக ஹாமித்பக்ரி அபூதாவூத் வகைக்காக ஷேர் பிடித்தது உண்மை. அதற்காக லுஹாவுக்கு ஒரு லட்சம் தந்து அதை வெளியிட முயற்சி செய்தது உண்மை. இதை மறைத்து ஹாமித்பக்ரி ஏதோ அந்த லட்சங்களை முழுசாக முழுங்கி ஏப்பம் விட்டது போல் பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யாகும். இறுதியாக, இதுவரை நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பீஜே பதிலளிக்க வேண்டும்.

இதே அபூதாவூத் விசயத்தில் பீஜேயின் பல ஆண்டு நாடகங்கள்;








1991 லேயே அபூதாவூத் தயார் நிலையில் உள்ளதாக கூறும் பீஜே, அந்த அபூதாவூத் மாயமாய் மறைந்த ரகசியத்தை கொஞ்சம் மக்களுக்கு சொல்வாரா?

அடுத்து வருவது;
திர்மிதி வெளியீட்டில் பீஜேயின் நம்பிக்கைத் துரோகங்கள்.

திரிமிதியின் திரை மறைவு பணப் பரிமாற்றங்கள்.

திர்மிதி விற்பனை காசை சாப்பிட்டது ஹாமித்பக்ரியா? ஜமாத்தா? அன்வர்பாஷாவா?

அருளாளன் நாடினால் அதிவிரைவில்.



வெள்ளி, 6 ஏப்ரல், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 4]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் பீஜேயை நோக்கி,

அன்று குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் வெளிநாடு நிதி கூடும் என்றீர்கள். இன்று அந்த வசனத்திற்கு மாற்றமாக மனோஇச்சையை சட்டமாக்கி முரண்பட்டது ஏன் என்று கேட்டோம். 

குர்ஆன் அனுமதி அடிப்படையில் வெளிநாட்டு நிதி பெறுபவர்களை அரபுநாட்டு சல்லிக்கு மாரடிப்பவர்கள் என்று விமர்சிப்பது சரியா? என்று கேட்டோம்.

இஸ்லாமிய கல்விச் சங்கம் தான் வசூல் செய்தது. எனக்கோ தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்று பீஜே சொன்னதற்கு, இஸ்லாமிய கல்விச் சங்கம் விசயத்தில் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டோம். இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் அங்கத்தினர்கள் ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் மட்டும் தான் என்று பீஜே சொல்லத்தயாரா? என்று கேட்டோம்.

இன்று பீஜே ஜமாஅத்தில் இல்லாத இரு பிரச்சாரகர்கள் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளிநாடு பயணம் மேற்கொண்டனர் என்ற பீஜேயின் வாதத்தை வைத்து அந்த இருவரின் பெயரை பீஜே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டோம்.

இன்னும் இதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகளை பீஜேயை நோக்கி நாம் எழுப்பியும் அவர் அசையாமல் இருப்பதின் மூலம் வெளிநாட்டு நிதி விசயத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற சங்கம் இவர் ஆதரவுடன் வசூல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

வெளிநாட்டு நிதி வசூலித்தது ஹாமித்பக்ரிக்கு மட்டுமே சொந்தமான இஸ்லாமிய கல்விச் சங்கம்தான் என்று சொன்ன பீஜே, பிறகு அதில் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களும் ஒரு அங்கம் என்றார். அப்போது நாம் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் இவ்விருவரைத் தாண்டி வேறு யாரும் இருக்கவில்லையா என்று கேட்டோம். அதற்கு பீஜே பதிலளிக்காததால், இப்போது நாமே இஸ்லாமிய கவிச் சங்கத்தின் அங்கத்தினர்களாக இருந்து இன்றும் பீஜெயோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சிலரை அடையாளம் காட்டுகிறோம்.

  • இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு தலைவராக வீற்றிருக்கும் சம்சுல்லுஹா ரஹ்மானி.
  • இன்று பீஜேயின் மேலாண்மைக்குழு உறுப்பினராக வீற்றிருக்கும் எம்.எஸ்.ஸுலைமான்.
  • இன்று பீஜேயின் தணிக்கைக் குழு தலைவராகவும், வருங்கால செயல் தலைவராகவும் அரியணை ஏறவுள்ள எம்.ஐ.ஸுலைமான்.

இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் இந்த சங்கத்தின் அங்கத்தினர்கள். அவர்கள் பட்டியல் இங்கே தேவையில்லை என்பதால் வெளியிடவில்லை. ஆக, இஸ்லாமிய கல்விச் சங்கம் என்பது ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்வதற்காக தனக்கு மட்டுமே சொந்தமாக உருவாக்கிக் கொண்டது என்று பீஜே சொன்னது அப்பட்டமான பொய் என்பதை, அவரது இன்றைய சகாக்கள் அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் என்பதன் மூலம் நிரூபித்துள்ளோம். 

இந்த லட்டர் பேடு சங்கத்தின் மூலம் ஹாமித்பக்ரி தமிழகம் முழுக்க வசூல் வேட்டையாடினார். அது நிர்வாகிகளுக்கு தெரியவந்தபோது, நானும்[பீஜே] சைபுல்லாஹ்வும், லுஹாவும், அலாவுதீனும் அடங்கிய குழுவில் அவரை கண்டபடி கண்டித்தோம் என்று பீஜே சொன்னாரே! அந்த லட்டர் பேடு சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ் எப்படி ஹாமித்பரியை கண்டிக்க முடியும் என்று ஏற்கனவே கேட்டோம். இப்போது அந்த லட்டர் பேடு சங்கத்தின் அங்கமான லுஹா எப்படி ஹாமித்பக்ரியை கண்டிக்க முடியும் என்பதற்கும் பீஜே பதில் சொல்லட்டும். ஹாமித்பக்ரியின் வசூல் மோசடிக்கும், அந்த சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ், லுஹா, எம்.ஐ.ஸுலைமான், எம்.எஸ். ஸுலைமான் ஆகியோருக்கும் சம்மந்தமில்லை என்று பீஜே மறுப்பாரா? அந்த சங்கத்தின் தலைவரான ஹாமித்பக்ரி வசூல் மோசடி செய்தார் என்பது உண்மை என்றால், அந்த மோசடி சங்கத்தில் அங்கம் வகித்த இவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன? ஆக பலர் அங்கம் வகித்த கூட்டு நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற முயற்சித்தார்கள். ஆனால் அவ்விருவர் மட்டும் இன்று பீஜெயோடு இல்லாத காரணத்தால், அவ்விருவர் மீது மட்டும் பழிபோட்டு இப்போது தன்னோடு இருக்கும் மற்ற சகாக்களை காப்பாற்ற நினைக்கிறார் பீஜே.

இன்னும் சொல்லப்போனால், ஒரு பேச்சுக்கு ஹாமித்பக்ரி செய்த வசூல் மோசடி, சைபுல்லாஹ், லுஹா, இரண்டு சுலைமான்களுக்கு தெரியாமல் நடந்தது என்றே வைத்துக் கொண்டாலும் இந்த வசூல் விவகாரம் தெரிந்தவுடன் இவர்கள் எல்லாம் இந்த சங்கத்தில் இருந்து விலகிவிட்டார்கள் என்று பீஜே சொல்லுவாரா? ஹாமித்பக்ரி இந்த சங்கத்தை கலைத்து விட்டு அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பணியை மட்டும்பார்த்தார் என்று பீஜே சொல்வாரா? 

இதையும் தாண்டி சொல்கிறோம். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளான ஹாமித்பக்ரி, சைபுல்லாஹ் ஹாஜா, இரண்டு சுலைமான்கள், லுஹா ஆகியோர் இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் அங்கம் வகித்தது போல் அதே காலகட்டத்தில் தமுமுகவிலும் அங்கம் வகித்தார்கள். அதுவும் மேல் மட்ட அங்கத்தினர்களாக. தலைமைக்கழக பேச்சாளர்களாக. தமுமுக அந்த காலகட்டத்தில் ஒரு வெளிநாட்டு நிதி வசூலித்தால் அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இவர்கள் சொல்லமுடியுமா? அவ்வளவு ஏன்? இன்று த த ஜமாஅத்தில் அங்கம் வகிக்கும் இவர்கள், இந்த ஜமாஅத் வெளிநாட்டு நிதி வாங்கியதை நிரூபித்து விட்டால், அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என்று இவர்கள் நழுவமுடியுமா? இன்னும் தெளிவாக சொல்வதனால் ஜமாஅத் என்பது பரந்து விரிந்த உறுப்பினர்களை கொண்டது. ஆனால் இஸ்லாமிய கல்விச் சங்கமோ குறிப்பிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களை கொண்டது. அந்த சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் பொறுப்பாளியாவார்.

எனவே இஸ்லாமிய கல்விச் சங்கம் வெளிநாட்டு நிதியோ, உள் நாட்டு நிதியோ வசூலித்தது மோசடி என்றால் அது ஹாமித்பக்ரி என்ற தனிமனிதனை மட்டும் சாராது. மாறாக பீஜேயின் இன்றைய சகாக்கள் உட்பட அனைவரும் அதில் பங்காளிகள் என்பதும், இந்த பங்காளிகளை தனது பங்காளிகளாக கொண்ட பீஜேயும் இந்த மோசடியில் ஒரு பங்காளி என்பதும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகும். 

அடுத்து வருவது;

இஸ்லாமிய கல்விச் சங்கத்தில் ஊதியம் பெற்ற அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தாயி.

அபூதாவூத் மொழிபெயர்ப்பு; அவிழப்போகும் முடிச்சுகள்.

திர்மிதி வெளியீடு; பீஜேயின் தியாகமா? திரைமறைவு பணப் பரிமாற்றங்கள்.

இன்ஷா அல்லாஹ் விரைவில்.