வியாழன், 29 மார்ச், 2012

அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 3]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அயல்நாட்டு நிதி பெறுதல் விசயத்தில் இதுவரை நாம் கேட்ட எந்த கேள்விக்கும் அறிஞர் பீஜே பதிலளிக்கவில்லை என்பதை நமது தொடரில் மேற்கோள் காட்டியுள்ளோம். நமது இரண்டாவது தொடரின் இறுதியாக,  ''நம் ஜமாஅத்தில் இப்போது இல்லாத இரண்டு பிரச்சாரகர்கள், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நாம் செயல்பட்டபோது, நம் ஜமாஅத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்கள் என்று கூறியுள்ளார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் வெளிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அந்த இரு பிரச்சாரகர்களின் பெயரை பீஜே பகிரங்கமாக சொல்லவேண்டும். என்றும், அப்படி அவர் சொல்லும் பட்சத்தில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பெயரால் வசூல் செய்யப்பட்ட விசயத்தில்  தனக்கோ  தனது தவ்ஹீத் ஜமாத்திற்கோ சம்மந்தமில்லை என்ற அவரது பொய் முகம் வெளிப்படும் இன்ஷா அல்லாஹ்'' என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

ஒரு வாரம் கழிந்தும் நமது இந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. அவர் அந்த இரு தாயிகளின் பெயரை சொல்லவேண்டும். சொல்லவில்லையானால் இவரது அனுமதியின் பெயரில் தான் அந்த தாயிகள் இருவரும் வெளிநாட்டில் வசூல் வேட்டையாடினார்கள் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அடுத்து இந்த வெளிநாட்டு நிதி விசயத்தில் அறிஞர் பீஜேயின் இன்னொரு முரண்பாட்டைப் பார்ப்போம்.

மவ்லவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் பீஜேயை நோக்கி, ''அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இவர்கள் இயங்கியபோது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராக செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999 களில் குவைத்திலுள்ள லஜ்னத்துல் காரதில் ஹிந்திய்யா என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சித்து முடியாமல் போனது. இதுகுறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள். அரபுப்பணம் கிடைக்காதவர்கள் உள்நாட்டு வசூலை இலக்காகக் கொண்டு சீ...சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.'' என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்.

நன்றாக கவனிக்க வேண்டும். மவ்லவி இஸ்மாயில் ஸலபி தனது விமர்சனத்தின் முக்கிய அம்சமாக,

  • வெளிநாட்டு நிதி பெறக்கூடாது என்ற பைலாவையுடைய, பீஜேயும் அங்கம் வகிக்கும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மவ்லவி ஹாமித்பக்ரி, அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் மவ்லவி சைபுல்லாஹ் ஹாஜா ஆகிய இருவர், வெளிநாட்டு நிதி பெறும் நோக்கில் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
  • இருவரும் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
  • அதற்காக மவ்லவி இஸ்மாயில் ஸலபி தங்கியிருந்த அறையில் திட்டங்கள் தீட்டியுள்ளனர்.

இதுதான் இஸ்மாயில் சலபியின் விமர்சனத்தின் முக்கிய அம்சமாகும். 

இதற்கு மறுப்பு எழுதிய அறிஞர் பீஜே, '' இஸ்லாமிய கல்விச்சங்கத்தின் நிறுவனரான ஹாமித்பக்ரியும், அச்சங்கத்தின் அங்கமான சைபுல்லாஹ்வும், 'தவ்ஹீத் ஜமாஅத் தான் வெளிநாடுகளில் உதவி வாங்காது. நாம் சுயேட்சையான நிறுவனம் தானே? நாம் உதவி வாங்கினால் என்ன என்று ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினர். அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பினார்கள். இலங்கை சென்றபோது ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸுன்னா, ஷபாப், ஆகிய நிறுவனங்களிடம் பரிந்துரைக் கடிதங்கள் கேட்டனர். இதில் எனக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்மந்தம் இல்லை. இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிரவாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர்.'' என்று பீஜே பதிலளித்துள்ளார். 

பீஜேயின் இந்த பதிலில் இருந்து நாம் கேட்கும் கேள்விகள்;

  1. தனக்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் சம்மந்தமில்லாத இஸ்லாமிய கல்விச்சங்கம் என்ற பெயரில், அதன் அங்கத்தவர்களான ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் வெளிநாட்டி நிதி பெறும் நோக்கில் ஆலோசனை செய்ததையும், அதற்காக இலங்கையில் பரிந்துரைக் கடிதம் பெற்றதையும், வெளிநாட்டிற்கு நிதி பெறும் நோக்கில் கடிதங்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டுள்ள பீஜே, இந்த மூன்று விஷயங்கள் பீஜேவுக்கு தெரிந்தே நடந்ததா? அல்லது பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டரா? என்று சொல்லவேண்டும்.
  2. [வெளிநாட்டு நிதி பெற முயற்சிக்கும்] இந்த விவரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்தபோது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக்குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக்காட்டினார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இதுபோன்ற உதவிகளைப் பெறக்கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின்னர் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொல்வது உண்மையானால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்று பீஜே சொல்வாரா?
  3. ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், தவ்ஹீத் ஜமாஅத் முடிவை ஏற்று அவர்கள் வெளிநாட்டு நிதி பெறும் முடிவை கைவிட்டு விட்டனர் என்று பீஜே சொன்னது பொய்யா?
  4. நிர்வாகக்குழு முடிவுக்குப் பின்னரும் ஹாமித்பக்ரியும்-சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டது உண்மை என்றால், நிர்வாக்குழு முடிவை மீறிய அவர்கள் மீது பீஜே எடுத்த நடவடிக்கை என்ன?
  5. ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய்யாகி விடுகிறது. அப்படியானால், அபூதாவூத் மொழியாக்கம் ஷேர் பிடிப்பதற்காக இவர்கள் தனிப்பயணம் மேற்கொண்டார்கள் என்று பீஜே சொல்வாரா?
  6. ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் வெளிநாட்டு நிதி பெற எடுத்த முயற்ச்சிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக்குழு முடிவால் கைவிடப்பட்டது என்றால், ஹாமித்பக்ரியும், சைபுல்லாஹ்வும் குவைத் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது பொய் என்றால், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குவைத் சென்ற அந்த இரு தாயிகள் பெயரை சொல்லத் தயக்கம் ஏன்?
அறிஞர் பீஜே மவுனம் கலைந்து மக்கள் தெளிவடையும் வகையில் பதிலளிப்பாரா?
தொடரும் அருளாளன் நாடினால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக