வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

கோ எஜுகேஷன் கல்வி பற்றி பீஜே.


இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் கூட ஆண்களும்-பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜுகேஷன் எனும் கல்வி நிலையங்களே பெருமளவில் உள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் கல்வி கற்பது மார்க்க அடிப்படையில் சரியல்ல என்றாலும், நிர்பந்தம் காரணமாக நமது சமுதாய மாணவ-மனைவியர் கல்வி கற்று வருகின்றனர். இந்த கோ எஜுகேஷன் கல்வி பற்றி பீஜே, தனது இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா..? என்ற நூலில்

'இஸ்லாம் கல்வியை வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் முறையைத்தான் இஸ்லாம் எதிர்க்கிறது' என்று பதிவு செய்துள்ளார். அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் கோ எஜுகேஷன் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று கூறுகிறார். ஆனால் இந்த தடைக்கு அவர் எந்த சான்றையும் முன்வைக்கவில்லை. ஆயினும் சில காரணங்களை முன்வைக்கிறார்.

அதாவது கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களால் வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும் , சக மாணவர்களால் ஏமாற்றப்படுவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன.

இவ்வாறு சேர்ந்து படிப்பதால்தான் ஆண்களின் கவனமும் சிதறடிகப்படுகின்றன.பெண்கள் தனியாக படித்தால் படிப்பு ஏறாது என்று கூறமுடியாது.

எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது என்று இஸ்லாம் கூறுகிறது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது கோ-எஜுகேஷனுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று திடமாக மறுக்கிறார்.

இதே அறிஞர், சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் தலைமையகத்தில் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் கோ-எஜுகேஷன் கூடுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
" நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இதுபோன்ற கல்விக்கூடங்கள் வைத்து கற்றுக்கொடுத்தல் என்ற நடைமுறை இருந்ததில்லை. எனவே கல்வியை விட்டுப்புட்டு பொதுவாக ஒரு சபையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து உக்காருவதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா..? அப்பிடீன்னு பாத்தம்னா அனுமதியிருக்குது. நபிகள் நாயகம்[ஸல்] பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழ வந்தார்கள்.. அந்த அடிப்படையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து படித்தல் என்பதில, ஒரு சபைல சேர்ந்து உக்காருதல் என்பதில தப்பு கெடயாது...பக்கத்து பக்கத்துல உக்காரலன்னா தப்பில்லை. என்கிறார். அதாவது கோ-எஜுகேஷன் கூடும் என்று கூறி தனது முந்தய 'கூடாது' என்ற நிலைக்கு முரண்பட்ட வரலாறும் உண்டு.

சரி! இப்போது (24-8-2014) திருச்சி செயற்குழு தீர்மானத்தில்...

கோஎஜுகேசன் கல்வி முறை ஒழிக்கப்பட வேண்டும்.

சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காமப் போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தைச் சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்து வராத கோஎஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள்.

இதுபோன்ற தீர்மானங்ளை இதற்கு முன்பும் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அதே காலத்தில் கோ எஜுகேஷனுக்கு எதிராக பக்கம் பக்கமாக எழுதிய காலத்திலேயே மறுபக்கம் கோ எஜுகேஷனுக்கு ஆதரவான விளம்பரத்தை உணர்வில் போட்டு காசு பார்த்தார்கள்.

''பெட் இன்ஜினியரிங் கல்லூரி, ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டுப்பாடான ஹாஸ்டல் வசதியுடன் என்ற விளம்பரத்தையும்,
''எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி, எங்கள் மாணவ மாணவியர்களை 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்ற விளம்பரத்தையும் உணர்வு வார இதழில் வெளியிட்டார்கள்.

அப்பப்பா இத்தனை பல்டிகள் அடித்தும் எப்படி அப்பாவிமாதிரி முகத்தை வைத்துக்கொள்ள அண்ணனால் மட்டுமே முடிகிறது?

இயக்க வெறியா? இஸ்லாமிய நெறியா?



அதிமுக-வின் ஆட்சியை திமுக தொன்டர்கள் விமர்சித்தாள் அதை கண்டு அதிமுகவினர் திமுகவை எதிர் விமர்சனம் என்ற பெயரில் நாகரீகம் அற்று ஆபாச வார்தைகளை கொண்டு, குடும்பத்தை இழுத்து விமர்சிப்பதில்லை(பெரும்பாலும்),

ஆனால் மார்க்க விசயத்தில் ஒரு செயல் சர்ச்சைக்குள்ளானால் அதை ஒரு விமர்சனமாக முன் வைக்கப்பட்டால் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லி ஒருவர் விமர்சித்தால் (அவர் எப்படி விமர்சித்தாலும் சரியே) எதிர்தரப்பினர் அதை விளக்கி தாண்கொண்ட நிலைப்பாட்டை அழகான முறைவில் விளக்கி சொல்ல வேன்டும், அதை அவர் ஏற்றாலும் ஏற்க்காவிட்டாலும் நம்முடைய கடமை விளக்கியாகி விட்டது, அதுதான் நாகரீகம், மீறியும் அந்த விசயத்தில் தர்க்கம் செய்தால் அவர்களிடம் சலாம் சொல்லி ஒதுங்கிவிடுவது மார்க்க பண்பும்கூட,

மக்கத்து காபிர்கள் நபிகளாரை இழிவுப்படுத்தும் போதும் சத்திய சஹாபாக்களை கொடுமை படுத்திய போதும், பதிலுக்கு அவர்களை இழிவு படுத்தவோ கொடுபைப்படுத்தவோ அல்லது அவர்கள் குடும்பங்களை அசிங்கப்படுத்தவோ இல்லை, தன்நிலையை விளக்கிவிட்டு பொறுமையாக களத்தில் நின்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்கள், என்பது இஸ்லாம் காட்டித்தந்த நபிகளாரின் சரித்திர போதனைகள் மூலம் பார்க்கின்றோம்,

ஆனால் நபிவழியை நாங்கள் மட்டுமே உறுதியாகவும், சரியான அர்தத்திலும் அச்சு பிசகாமல் அடிக்கு அடி பின்பற்றுகிறோம் என்று சொல்லும் ததஜ சகோதர்களிண் எதிர் விமர்சன விளக்கத்திண் கருத்துக்கள் மட்டும் ஏனோ அவ்வளவு அநாகறீகமாகவும், காது கூசும் வார்தைகளையும்,ஆபாச கருத்துக்களும், தனிமனித அந்தரங்க அசல்களையும், முகம் சுழிக்கும் எழுத்துக்களையும் கொண்டுள்ளதோ? அதிலும் குறிப்பாக பலர் முகவரியே இல்லாமல் வந்து சொல்லும் ஆபாச அர்ச்சனைகள் "அஸ்தகபிருல்லாஹ்"

நாம் கேட்பது இதுதான், நீங்கள் சொல்வதுதான் சரி எனும் போது, நீங்கள் மட்டுமே மார்க்கதை, நபிவழியை, சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறீர்கள் எனும் போது சரியானதை மட்டுமே சொல்கின்றோம் எனும் போது நபிகளார் போதித்த அந்த சரியான தனிமனித கண்ணியம், தீய பேச்சை தவிர்த்தல், தீய சொற்களை தவிர்த்தல், என்ற அந்த இஸ்லாமிய அடிப்படை நற்பண்புகளை மட்டும் சரியாக எடுத்து கொள்வதில்லையே அது ஏண்?

இஸ்லாத்தை பற்றி முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் விமர்சிக்கும் போது வராத கோபம், தாங்கள் சார்ந்திருக்கும் ஜமாத்தை பற்றியோ, தலைவர்கள் பற்றியோ ஒரு முஸ்லிம் விமர்சித்தால் மட்டும் எங்கிருந்து வருகிறது? இதை இயக்க வெறி என்பதா? இல்லை இஸ்லாமிய நெறி என்பதா? சிந்தியுங்கள் அவர் அவர் குழிக்கு அவரவர்தான் பதில் சொல்ல வேன்டும், என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்தாலே போதும் இறையச்சம் நம்மை சூழ்ந்து கொள்ளும்!!

#இதையும்_ஆபாச_எழுத்தால்_விமர்சிப்பேன்_என்று_வந்தால்_அவர்களுக்கு_சலாம்_சொல்லி_அமைதிகாப்பதை_தவிர_வேறுவழியில்லை!!

பீ.ஜையும்! சூன்யமும்!!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சூன்யம் பற்றி அல்குர்ஆன் அல்பகரா : 2:102 இறைவாக்கை மீண்டும் மீண்டும் பலமுறை நேரடியாகப் படித்து மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதில் “”மேலும், அவர்கள் சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள் தாம் நிராகரித்தனர். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சுன்யத்தைக் கற்றுக் கொடுத்தனர்.” இப்பகுதியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

சுலைமான்(அலை) ஒரு நபி; அவர்களுக்கு இறைவன் மனித அறிவுக்கு எட்டாத சில அற்புதங்களைக் கொடுத்திருந்ததாக 21:81,82, 27:16-44, 34:12,13 ஆகிய வசனங்களில் கூறுகிறான். இவற்றைத் திரித்து அன்றைய மதகுருமார்கள் சுலைமான்(அலை) அவர்களை சூன்யக்காரன், சூனியம் செய்து மக்களை ஏமாற்றுகிறார். அதனால் நிராகரிப்பாளர் ஆகிறார் என்று கூறி மக்களைத் தங்கள் பக்கம் இழுக்க முற்பட்டனர்.

அதற்குப் பதிலடியாகத்தான் அல்லாஹ் சுலைமான்(அலை) நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள்தான் நிராகரிக்கின்றனர். அவர்கள்தான் மனிதர்களுக்குச் சூன்யத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறி எச்சரிக்கிறான். இதிலிருந்து என்ன விளங்குகிறது. சூன்யக்கலை நிராகரிப்பாளர்களான ஷைத்தான்கள் கற்றுக் கொடுக்கும் காஃபிராக்கும் ஒரு தீய செயல் என்பது தெளிவாக விளங்குகிறது. அல்லாஹ் ஜின், மனித இனத்தைச் சோதிப்பதற்காகக் குடி, விபசாரம், சூது போல் சூன்யத்தைப் படைத்துள்ளான் என்பதை விளங்க முடிகிறது. இதை அடுத்த பகுதி உறுதிப்படுத்துகிறது; அது வருமாறு :

“இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (கற்றுக் கொடுத்தார்கள்) ஆனால் அவர்கள் இருவரும் “”நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிப்பாளர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காதவரை, எவருக்கும் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் கணவனுக்கும், மனைவிக்குமிடையே பிரிவை உண்டாக்கும்(தீய) செயலைக் கற்றுக் கொண்டார்கள்; எனினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.”

இப்பகுதியைப் படித்து விளங்குகிறவர்கள் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவை ஏற்படுத்தும் சூன்யத்தை சோதனையாக அல்லாஹ்வே இந்த இரு மலக்குகளுக்கு இறக்கினான் என்பது “”வமா உன்சில அலல் மலக்கைனி பிபாபில ஹாரூத்தவ மாரூத்த” என்ற அரபு வாசகம் உறுதிப்படுத்துகிறது.

பீ.ஜை. சொல்வது போல் 2:98-ல் காணப்படும் ஜிப்ரீலையும் மீக்காயிலையும் குறிப்பிடுவதாக இருந்தால், “வமா உன்சில ” இறக்கப்பட்டதை என்று அல்லாஹ் குறிப்பிடுவானா? மேலும் “”அலல் மலக்கைனி” என்ற பதத்தை 2:98-ல் குறிப்பிடாமல் 2:102-ல் குறிப்பிட்டு மக்களை குழப்பத்தில் ஆக்குவானா? மேலும் 2:98-ல் “”வமலாயிகத்திஹி” என்று வானவர்களைக் குறிப்பிட்டு, அவர்களில் சிறப்புக்குரியவர்களாக ஜிப்ரீலையும், மீக்காயிலையும் தனித்தும் கூறியுள்ளான். இந்த நிலையில் 2:102 காணப்படும் “”அலல் மலக்கைனி” என்ற அரபி பதம் அடுத்து வரும் ஹாரூத், மாரூத்தைக் குறிப்பிடாது, 2:98-ல் இடம் பெற்றுள்ள ஜிப்ரீலையும், மீக்காயிலையுமே குறிக்கும் என்று சுய சிந்தனையற்ற அறிவீனர்கள் மட்டுமே விதண்டாவாதம் செய்ய முடியும்.

ஹாரூத்தும், மாரூத்தும் ஷைத்தான்களாக இருந்தால் அவர்களுக்கு வஹீ மூலம் அல்லாஹ் செய்தி இறக்குவானா? என்ற சாதாரண சிந்தனையும் பீ.ஜைக்கு இல்லையா? அவர்கள் ஷைத்தான்களாக இருந்தால் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். சூன்யத்தைக் கற்று நீங்கள் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்!” என்று எச்சரித்து இருப்பார்களா? என்ற சாதாரண அறிவும் பீ.ஜைக்கு இல்லையா? ஜின் இனமும், மனித இனமும் மட்டுமே சோதனை வாழ்க்கைக்குரியவர்கள், மலக்குகள் சோதனைக்குரியவர்கள் அல்ல என்று 51:56 இறைவாக்குக் கூறுவதை அறியாதவரா பீ.ஜை? இந்த நிலையில் மலக்குகளையும் சோதனைக்கு உட்பட்டவர்களாக்கி, மலக்குகள் கெட்டவற்றைக் கற்றுக் கொடுப்பார்களா? என்று வினா தொடுப்பவர் அறிவாளியா? அறிவீனரா? சூன்யம் கெட்டது என்று அறிந்த நிலையில் அது வெறும் தந்திரவித்தை என்று பிதற்றும் பீ.ஜை. நேர்வழி நடப்பவரா? வழிகேடரா? சிந்தியுங்கள்!

2:102-ன் இறுதிப் பகுதி:
“”தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எவ்வித நன்மையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள். இதனை (சூன்யத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (2:102)

இந்த கடைசிப் பகுதியை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். பீ.ஜை. சொல்வது போல், சூன்யம் வெறும் தந்திர வித்தை என்றால் அது பற்றி இந்த அளவு கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு முஸ்லிம் இந்தத் தந்திர வித்தையைக் கற்று அதைத் தொழிலாகக் கொண்டு (MAGIC SHOW) பிழைக்கிறார். அவற்றிலுள்ள தந்திரத்தை விளக்குகிறார். அதனால் அவர் காஃபிராகி விடுவாரா? 2:102 இறுதிப் பகுதி கூறும் கடும் தண்டனைக்கு ஆளாவாரா? பதில் என்ன? ஆம்! சூன்யக்கலை தந்திரவித்தை மட்டுமல்ல. முஸ்லிமான ஒருவனை காஃபிராக்கும் ஒரு மிகக் கொடுமையான பாவமான செயல். அதில் ஈடுபடுகிறவன், ஈடுபடப்பட 50 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்துத் தூண்டுகிறவன் ஒருக்காலும் முஃமினாக-உண்மை நம்பிக்கையாளனாக இருக்கவே முடியாது. இதுவே 2:102 இறைவாக்கு அறுதியிட்டு உறுதி கூறும் உண்மை.

இதற்கு மேலும் அல்குர்ஆனில் சூன்யம் பற்றிக் கூறும் கீழ்க்கண்ட சுமார் 52 இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்து விளங்கினால் சூன்யம் வெறும் தந்திரவித்தை மட்டுமல்ல, எவ்விதப் புறச்சாதனமும் இல்லாமல் தீங்குகள் விளைவதாக அல்குர்ஆன் 113,114 அத்தியாயங்கள் கூறும் தீங்குகள் போல் சூன்யத்தினாலும் எவ்விதப் புறச்சாதனமும் இல்லாமல் தீங்கு ஏற்படச் செய்ய முடியும். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி சூன்யம் பலிக்காது. ஆயினும் அப்படிப்பட்ட சூன்யச் செயல்களில் ஈடுபடுகிறவன், ஈடுபடத் தூண்டுகிறவன் காஃபிராகிறான். மறுமையில் அவனுக்கு எவ்விதப் பாக்கியமும் கிடைக்காது. சூன்யக்காரன் ஒருபோதும் வெற்றியடையவே முடியாது. அவன் நாளை நரகில் எறியப்படுவான் என்பதைத் திட்டமாக அறிய முடியும்.

- அபூ அப்தில்லாஹ் செல் : 9345100888

வெள்ளி, 28 மார்ச், 2014

பெண் ஆட்சிக்கு வருவதற்கு அதரவு; பீஜே அன்றும்-இன்றும்!



எங்களுக்காக ஒட்டு கேட்டு உங்களிடம் வரமாட்டோம் என்று இயக்கம் தொடங்கி, பின்னர் சமுதாய நலன் என்ற பெயரில் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மாறி மாறி ஆதரித்து பக்கா அரசியல்வாதியாக வலம்வரும் பீஜே, கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் பிரச்சார பீரங்கியாக தேர்தல் நேரத்தில் வலம் வரும் பீஜே, ஆட்சி அதிகாரத்திற்கு ஒரு பெண்ணை ஆதரிக்கலாமா என்ற கேள்விக்கு அன்று அளித்துள்ள பதிலை படியுங்கள்;

கேள்வி; பெண்கள் ஆட்சி செய்வது குறித்து இஸ்லாம் கூறுவதென்ன? 
-டி.என்.இமாஜான்,நாகூர்.

பீஜே பதில்; எந்த சமுதாயத்தின் ஆட்சிக்கு பெண் பொறுப்பேற்கிறாளோ அந்த சமுதாயம் வெற்றி பெறாது என்பது நபிமொழி.
(புகாரி,நஸாயி,திர்மிதி,அஹ்மத்)

பெண்கள் ஆட்சி செய்தால் அந்த சமுதாயம் உருப்படாது என்பது இஸ்லாத்தின் தெளிவான தீர்ப்பாகும். இதற்குரிய காரணங்களை இஸ்லாம் கூறாவிட்டாலும் நாம் அதன் விளைவுகளை இன்று அறிந்து வருகிறோம்.

பெண்கள் ஆட்சியை குடும்பமாகவே கருதி வருவதை அனுபவத்தில் கண்டு வருகிறோம். யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்படாமல் வேண்டியவர்களுக்கு சலுகை செய்வது அவர்களின் இயல்பு. சொந்த விசயத்தில்  அப்படி நடந்தால் தவறில்லை. ஆட்சியில் அப்படி நடந்தால் அதை மன்னிக்க முடியாது.

இலங்கையில் மகள் ஜனாதிபதி என்றால் தாயையே அந்த மகள் பிரதமராக்குகிறாள். பாகிஸ்தானில் மகள் பிரதமர் என்றால் தாயாருக்கும் மந்திரி சபையில் இடம் கிடைக்கிறது. இந்திராவும் வலுக்கட்டாயமாக இரண்டு புதல்வர்களை திணித்தார். இங்கே ஜெயலலிதாவும் எல்லா மரபுகளையும் மீறி தன் தோழியை ஆட்சி செய்ய அனுமதிக்கிறார். அந்த தோழி தன் குடும்பத்தினர் கையில் ஆட்சியையே ஒப்படைத்து விட்டார். இவை சில சாம்பிள்கள். 

இவற்றை ஒளிவு மறைவாக, படிப்படியாக செய்வோம் என்று கூட எண்ணுவதில்லை. தன்னை சேர்ந்த அனைவருக்கும் உடனே நல்லது செய்யவேண்டும்; எவன் வீட்டு சொத்தாக இருந்தாலும் கவலையில்லை என்று நடப்பது பெண்களின் இயல்பு. ஆண்களில் மிகச் சிலர் அவ்வாறு நடக்கலாம்.(அதுவும் மனைவியரின் நச்சரிப்பினால்) பெண்கள் அனைவருமே அப்படித்தான் நடக்கின்றனர். 

இதுபோக பெண் ஆட்சியாளரிடம் ஆணவமும், அகங்காரமும் கர்வமும் மமதையும் திமிரும் ஆண் ஆட்சியாளர்களை விட அதிகமாகவே உள்ளது கண்கூடு. இதுபோல் இன்னும் பலவீனங்கள் உள்ளன. இவை ஆட்சி செலுத்துவதில் குளறுபடிகளை உருவாக்கும்.
(அல் ஜன்னத் ஏப்ரல் 95)

அன்பானவர்களே! இன்று ஜெயலலிதாவுக்காக வரிஞ்சு கட்டி நிற்கும் பீஜே, அன்று அதே ஜெயலலிதா குறித்து கூறியதை படித்தீர்களா? பெண்களிடம் உள்ள பண்புகளை பட்டியலிட்டு பெண்கள் ஆட்சி செய்ய தகுதியற்றவர்கள் என்று கூறும் பீஜே, பெண்கள் ஆட்சி செய்தால் அந்த சமுதாயம் உருப்படாது என்பது இஸ்லாத்தின் தெளிவான தீர்ப்பாகும்' என்றும் ஃபத்வா வழங்குகிறார். இவர் நேரத்துக்கு தக்கவாறு மார்க்கத்தை வளைப்பவர் என்று  தெரிகிறதா? 

இப்போது பெண்கள் ஆட்சி குறித்த இஸ்லாமிய சட்டம் என்பது இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பகுதிக்குத்தான் என்று புது பத்வா வழங்கி வருகிறார். மேற்கண்ட கேள்வியே காபிர்கள் ஆளும் பகுதியில் பெண்கள் ஆள்வது பற்றியல்ல...மாறாக, பொதுவாக பெண்கள் ஆள்வது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு பற்றியதே! அதற்குத்தான் பீஜே, இலங்கை பாகிஸ்தான் முதல் ஜெயலலிதாவரைக்கும் உதாரணம் காட்டி அன்று எழுதினார். முஸ்லிமல்லாத நாட்டில் பெண் ஆட்சிக்கு வருவதை ஆதரிக்கலாம் என்று ஒரு இடத்தில் கூட அன்று குறிப்பிடாத பீஜே, இன்று தனது அரசியல் பல்டிகளுக்கு ஏற்ப மார்க்கத்தை வளைத்து புதுமை பத்வா வழங்கி தடுமாறுகிறார். 

நாம் பீஜெயிடம் கேட்பது, பெண்கள் ஆட்சி தொடர்பான மேற்கண்ட நபிமொழி, முஸ்லிம் பகுதியில்  ஆள்வது பற்றியதுதான் என்று ஆதாரப்பூர்வமாக பதிலளிக்கத் தயாரா?

வெள்ளி, 21 மார்ச், 2014

தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிப்பது சரியா? பீஜே அன்றும்-இன்றும்.

மேகத்தை கண்டவுடன் மகிழ்ச்சியில் தோகை விரித்தாடும் மயிலைப் போல, தேர்தல் நெருங்கிவிட்டால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் அறிஞர் பீஜே, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் என் விரலசைப்பின் கீழ்தான் உள்ளார்கள்; எனவே நான் யாரை கை காட்டுகிறேனோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் கட்சிகளைஏமாற்றுவதற்காக, மாநாடு-முற்றுகை என்றெல்லாம் கூத்து நடத்துவதும், தேர்தலில் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி பக்க அரசியல்வாதியாக வலம் வருவதும் பீஜேயின் இன்றைய குர்ஆன்-ஹதீஸ் ஆய்வு கண்டுபிடிப்பாகும். ஆனால் தேர்தல் குறித்த அன்றைய பீஜேயின் நிலை என்ன கொஞ்சம் கீழே படியுங்கள்; இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? -பி.ஜெய்னுல் ஆபிதீன் 1989இல் எழுதியது. உங்கள் பொன்னான வாக்குகள்! இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்! யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான். யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85) நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2) வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை. நன்றி:அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989, 1989-ல் தேர்தலில் வாக்களிப்பதே அல்லாஹ்விடம் பதில் சொல்லும் அளவுக்கு பாவகாரியம் என்றவர், 2004ல் தேர்தல் களப்பணி ஆற்றினால் அது ஈமானுக்கே பங்கம் விளைவிக்கும் என்று எக்கச்சக்கமாக எழுதியவர்களின் இன்றைய நிலை என்ன? தோளில் கிடக்கும் துண்டை மாற்றுவது போல, கொள்கையை மாற்றும் அறிஞர் பீஜேவை சமுதாயம் புரிந்து புறக்கணிக்கவேண்டும்.