வெள்ளி, 28 மார்ச், 2014

பெண் ஆட்சிக்கு வருவதற்கு அதரவு; பீஜே அன்றும்-இன்றும்!



எங்களுக்காக ஒட்டு கேட்டு உங்களிடம் வரமாட்டோம் என்று இயக்கம் தொடங்கி, பின்னர் சமுதாய நலன் என்ற பெயரில் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மாறி மாறி ஆதரித்து பக்கா அரசியல்வாதியாக வலம்வரும் பீஜே, கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் பிரச்சார பீரங்கியாக தேர்தல் நேரத்தில் வலம் வரும் பீஜே, ஆட்சி அதிகாரத்திற்கு ஒரு பெண்ணை ஆதரிக்கலாமா என்ற கேள்விக்கு அன்று அளித்துள்ள பதிலை படியுங்கள்;

கேள்வி; பெண்கள் ஆட்சி செய்வது குறித்து இஸ்லாம் கூறுவதென்ன? 
-டி.என்.இமாஜான்,நாகூர்.

பீஜே பதில்; எந்த சமுதாயத்தின் ஆட்சிக்கு பெண் பொறுப்பேற்கிறாளோ அந்த சமுதாயம் வெற்றி பெறாது என்பது நபிமொழி.
(புகாரி,நஸாயி,திர்மிதி,அஹ்மத்)

பெண்கள் ஆட்சி செய்தால் அந்த சமுதாயம் உருப்படாது என்பது இஸ்லாத்தின் தெளிவான தீர்ப்பாகும். இதற்குரிய காரணங்களை இஸ்லாம் கூறாவிட்டாலும் நாம் அதன் விளைவுகளை இன்று அறிந்து வருகிறோம்.

பெண்கள் ஆட்சியை குடும்பமாகவே கருதி வருவதை அனுபவத்தில் கண்டு வருகிறோம். யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்படாமல் வேண்டியவர்களுக்கு சலுகை செய்வது அவர்களின் இயல்பு. சொந்த விசயத்தில்  அப்படி நடந்தால் தவறில்லை. ஆட்சியில் அப்படி நடந்தால் அதை மன்னிக்க முடியாது.

இலங்கையில் மகள் ஜனாதிபதி என்றால் தாயையே அந்த மகள் பிரதமராக்குகிறாள். பாகிஸ்தானில் மகள் பிரதமர் என்றால் தாயாருக்கும் மந்திரி சபையில் இடம் கிடைக்கிறது. இந்திராவும் வலுக்கட்டாயமாக இரண்டு புதல்வர்களை திணித்தார். இங்கே ஜெயலலிதாவும் எல்லா மரபுகளையும் மீறி தன் தோழியை ஆட்சி செய்ய அனுமதிக்கிறார். அந்த தோழி தன் குடும்பத்தினர் கையில் ஆட்சியையே ஒப்படைத்து விட்டார். இவை சில சாம்பிள்கள். 

இவற்றை ஒளிவு மறைவாக, படிப்படியாக செய்வோம் என்று கூட எண்ணுவதில்லை. தன்னை சேர்ந்த அனைவருக்கும் உடனே நல்லது செய்யவேண்டும்; எவன் வீட்டு சொத்தாக இருந்தாலும் கவலையில்லை என்று நடப்பது பெண்களின் இயல்பு. ஆண்களில் மிகச் சிலர் அவ்வாறு நடக்கலாம்.(அதுவும் மனைவியரின் நச்சரிப்பினால்) பெண்கள் அனைவருமே அப்படித்தான் நடக்கின்றனர். 

இதுபோக பெண் ஆட்சியாளரிடம் ஆணவமும், அகங்காரமும் கர்வமும் மமதையும் திமிரும் ஆண் ஆட்சியாளர்களை விட அதிகமாகவே உள்ளது கண்கூடு. இதுபோல் இன்னும் பலவீனங்கள் உள்ளன. இவை ஆட்சி செலுத்துவதில் குளறுபடிகளை உருவாக்கும்.
(அல் ஜன்னத் ஏப்ரல் 95)

அன்பானவர்களே! இன்று ஜெயலலிதாவுக்காக வரிஞ்சு கட்டி நிற்கும் பீஜே, அன்று அதே ஜெயலலிதா குறித்து கூறியதை படித்தீர்களா? பெண்களிடம் உள்ள பண்புகளை பட்டியலிட்டு பெண்கள் ஆட்சி செய்ய தகுதியற்றவர்கள் என்று கூறும் பீஜே, பெண்கள் ஆட்சி செய்தால் அந்த சமுதாயம் உருப்படாது என்பது இஸ்லாத்தின் தெளிவான தீர்ப்பாகும்' என்றும் ஃபத்வா வழங்குகிறார். இவர் நேரத்துக்கு தக்கவாறு மார்க்கத்தை வளைப்பவர் என்று  தெரிகிறதா? 

இப்போது பெண்கள் ஆட்சி குறித்த இஸ்லாமிய சட்டம் என்பது இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பகுதிக்குத்தான் என்று புது பத்வா வழங்கி வருகிறார். மேற்கண்ட கேள்வியே காபிர்கள் ஆளும் பகுதியில் பெண்கள் ஆள்வது பற்றியல்ல...மாறாக, பொதுவாக பெண்கள் ஆள்வது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு பற்றியதே! அதற்குத்தான் பீஜே, இலங்கை பாகிஸ்தான் முதல் ஜெயலலிதாவரைக்கும் உதாரணம் காட்டி அன்று எழுதினார். முஸ்லிமல்லாத நாட்டில் பெண் ஆட்சிக்கு வருவதை ஆதரிக்கலாம் என்று ஒரு இடத்தில் கூட அன்று குறிப்பிடாத பீஜே, இன்று தனது அரசியல் பல்டிகளுக்கு ஏற்ப மார்க்கத்தை வளைத்து புதுமை பத்வா வழங்கி தடுமாறுகிறார். 

நாம் பீஜெயிடம் கேட்பது, பெண்கள் ஆட்சி தொடர்பான மேற்கண்ட நபிமொழி, முஸ்லிம் பகுதியில்  ஆள்வது பற்றியதுதான் என்று ஆதாரப்பூர்வமாக பதிலளிக்கத் தயாரா?

வெள்ளி, 21 மார்ச், 2014

தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிப்பது சரியா? பீஜே அன்றும்-இன்றும்.

மேகத்தை கண்டவுடன் மகிழ்ச்சியில் தோகை விரித்தாடும் மயிலைப் போல, தேர்தல் நெருங்கிவிட்டால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் அறிஞர் பீஜே, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் என் விரலசைப்பின் கீழ்தான் உள்ளார்கள்; எனவே நான் யாரை கை காட்டுகிறேனோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் கட்சிகளைஏமாற்றுவதற்காக, மாநாடு-முற்றுகை என்றெல்லாம் கூத்து நடத்துவதும், தேர்தலில் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி பக்க அரசியல்வாதியாக வலம் வருவதும் பீஜேயின் இன்றைய குர்ஆன்-ஹதீஸ் ஆய்வு கண்டுபிடிப்பாகும். ஆனால் தேர்தல் குறித்த அன்றைய பீஜேயின் நிலை என்ன கொஞ்சம் கீழே படியுங்கள்; இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? -பி.ஜெய்னுல் ஆபிதீன் 1989இல் எழுதியது. உங்கள் பொன்னான வாக்குகள்! இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்! யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான். யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85) நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2) வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை. நன்றி:அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989, 1989-ல் தேர்தலில் வாக்களிப்பதே அல்லாஹ்விடம் பதில் சொல்லும் அளவுக்கு பாவகாரியம் என்றவர், 2004ல் தேர்தல் களப்பணி ஆற்றினால் அது ஈமானுக்கே பங்கம் விளைவிக்கும் என்று எக்கச்சக்கமாக எழுதியவர்களின் இன்றைய நிலை என்ன? தோளில் கிடக்கும் துண்டை மாற்றுவது போல, கொள்கையை மாற்றும் அறிஞர் பீஜேவை சமுதாயம் புரிந்து புறக்கணிக்கவேண்டும்.