ததஜ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ததஜ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இயக்க வெறியா? இஸ்லாமிய நெறியா?



அதிமுக-வின் ஆட்சியை திமுக தொன்டர்கள் விமர்சித்தாள் அதை கண்டு அதிமுகவினர் திமுகவை எதிர் விமர்சனம் என்ற பெயரில் நாகரீகம் அற்று ஆபாச வார்தைகளை கொண்டு, குடும்பத்தை இழுத்து விமர்சிப்பதில்லை(பெரும்பாலும்),

ஆனால் மார்க்க விசயத்தில் ஒரு செயல் சர்ச்சைக்குள்ளானால் அதை ஒரு விமர்சனமாக முன் வைக்கப்பட்டால் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லி ஒருவர் விமர்சித்தால் (அவர் எப்படி விமர்சித்தாலும் சரியே) எதிர்தரப்பினர் அதை விளக்கி தாண்கொண்ட நிலைப்பாட்டை அழகான முறைவில் விளக்கி சொல்ல வேன்டும், அதை அவர் ஏற்றாலும் ஏற்க்காவிட்டாலும் நம்முடைய கடமை விளக்கியாகி விட்டது, அதுதான் நாகரீகம், மீறியும் அந்த விசயத்தில் தர்க்கம் செய்தால் அவர்களிடம் சலாம் சொல்லி ஒதுங்கிவிடுவது மார்க்க பண்பும்கூட,

மக்கத்து காபிர்கள் நபிகளாரை இழிவுப்படுத்தும் போதும் சத்திய சஹாபாக்களை கொடுமை படுத்திய போதும், பதிலுக்கு அவர்களை இழிவு படுத்தவோ கொடுபைப்படுத்தவோ அல்லது அவர்கள் குடும்பங்களை அசிங்கப்படுத்தவோ இல்லை, தன்நிலையை விளக்கிவிட்டு பொறுமையாக களத்தில் நின்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்கள், என்பது இஸ்லாம் காட்டித்தந்த நபிகளாரின் சரித்திர போதனைகள் மூலம் பார்க்கின்றோம்,

ஆனால் நபிவழியை நாங்கள் மட்டுமே உறுதியாகவும், சரியான அர்தத்திலும் அச்சு பிசகாமல் அடிக்கு அடி பின்பற்றுகிறோம் என்று சொல்லும் ததஜ சகோதர்களிண் எதிர் விமர்சன விளக்கத்திண் கருத்துக்கள் மட்டும் ஏனோ அவ்வளவு அநாகறீகமாகவும், காது கூசும் வார்தைகளையும்,ஆபாச கருத்துக்களும், தனிமனித அந்தரங்க அசல்களையும், முகம் சுழிக்கும் எழுத்துக்களையும் கொண்டுள்ளதோ? அதிலும் குறிப்பாக பலர் முகவரியே இல்லாமல் வந்து சொல்லும் ஆபாச அர்ச்சனைகள் "அஸ்தகபிருல்லாஹ்"

நாம் கேட்பது இதுதான், நீங்கள் சொல்வதுதான் சரி எனும் போது, நீங்கள் மட்டுமே மார்க்கதை, நபிவழியை, சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறீர்கள் எனும் போது சரியானதை மட்டுமே சொல்கின்றோம் எனும் போது நபிகளார் போதித்த அந்த சரியான தனிமனித கண்ணியம், தீய பேச்சை தவிர்த்தல், தீய சொற்களை தவிர்த்தல், என்ற அந்த இஸ்லாமிய அடிப்படை நற்பண்புகளை மட்டும் சரியாக எடுத்து கொள்வதில்லையே அது ஏண்?

இஸ்லாத்தை பற்றி முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் விமர்சிக்கும் போது வராத கோபம், தாங்கள் சார்ந்திருக்கும் ஜமாத்தை பற்றியோ, தலைவர்கள் பற்றியோ ஒரு முஸ்லிம் விமர்சித்தால் மட்டும் எங்கிருந்து வருகிறது? இதை இயக்க வெறி என்பதா? இல்லை இஸ்லாமிய நெறி என்பதா? சிந்தியுங்கள் அவர் அவர் குழிக்கு அவரவர்தான் பதில் சொல்ல வேன்டும், என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்தாலே போதும் இறையச்சம் நம்மை சூழ்ந்து கொள்ளும்!!

#இதையும்_ஆபாச_எழுத்தால்_விமர்சிப்பேன்_என்று_வந்தால்_அவர்களுக்கு_சலாம்_சொல்லி_அமைதிகாப்பதை_தவிர_வேறுவழியில்லை!!

வெள்ளி, 21 மார்ச், 2014

தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிப்பது சரியா? பீஜே அன்றும்-இன்றும்.

மேகத்தை கண்டவுடன் மகிழ்ச்சியில் தோகை விரித்தாடும் மயிலைப் போல, தேர்தல் நெருங்கிவிட்டால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் அறிஞர் பீஜே, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் என் விரலசைப்பின் கீழ்தான் உள்ளார்கள்; எனவே நான் யாரை கை காட்டுகிறேனோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் கட்சிகளைஏமாற்றுவதற்காக, மாநாடு-முற்றுகை என்றெல்லாம் கூத்து நடத்துவதும், தேர்தலில் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி பக்க அரசியல்வாதியாக வலம் வருவதும் பீஜேயின் இன்றைய குர்ஆன்-ஹதீஸ் ஆய்வு கண்டுபிடிப்பாகும். ஆனால் தேர்தல் குறித்த அன்றைய பீஜேயின் நிலை என்ன கொஞ்சம் கீழே படியுங்கள்; இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? -பி.ஜெய்னுல் ஆபிதீன் 1989இல் எழுதியது. உங்கள் பொன்னான வாக்குகள்! இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்! யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான். யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85) நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2) வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை. நன்றி:அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989, 1989-ல் தேர்தலில் வாக்களிப்பதே அல்லாஹ்விடம் பதில் சொல்லும் அளவுக்கு பாவகாரியம் என்றவர், 2004ல் தேர்தல் களப்பணி ஆற்றினால் அது ஈமானுக்கே பங்கம் விளைவிக்கும் என்று எக்கச்சக்கமாக எழுதியவர்களின் இன்றைய நிலை என்ன? தோளில் கிடக்கும் துண்டை மாற்றுவது போல, கொள்கையை மாற்றும் அறிஞர் பீஜேவை சமுதாயம் புரிந்து புறக்கணிக்கவேண்டும்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பித்ரா விநியோகம்; தொடர்ந்து மார்க்க கடமையில் விளையாடும் அண்ணன் ஜமாஅத்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''நீங்கள் எந்த வகைக்கு வழங்குகிறீர்களோ அந்த வகைக்கு மட்டுமே செலவிடப்படும்'' இது ஒவ்வொரு வசூல் வேட்டையின் போதும் அண்ணன் ஜமாஅத் அடிக்கும் ஸ்டான்டாகும். ஆனால் உண்மை நிலவரமோ பெரும்பாலும் நேர்முரனாகத் தான் இருக்கும்.

சுனாமி நிதியில் தனது இயக்கத்தவருக்கு  சீருடை, உணர்வுக்கு ஒரு தொகை, இவ்வாறாக சுனாமித் தொகையில் ஒரு பங்கு பினாமியாக போனதாக பரவலாக குற்றச்சாட்டு அந்த நேரத்தில் எழுந்ததை மறந்திருக்க முடியாது. அதற்கான ஆதாரம்  இங்கே; https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMZPWAfeDkVHeOPA8VCXhbiwCewyDg9ID7D92E9zL_R1OP3RinyYraDvzfHGUkFVZlcf8YmS9UDNKSwsHTUxs5RFsLAZf5lx9N7OIqkRr0-LL2DTGXS6uIVpxOFiJoEBIB9cNQw_o3a9M8/s1600/sunami_unarvu_23-03-2006.JPG

அடுத்து ஃபித்ரா வசூலில்  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மீதமாகி விட்டது. எனவே தலைமையால் நடத்தப்படும்  தாஃவா சென்டருக்கு ஒதுக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும். ஃபித்ரா தொகையை தாஃவா சென்டருக்கு எப்படி ஒதுக்கலாம் என கடந்த காலங்களில் விமர்சனங்கள் எழுந்தவுடன், கடந்த ஆண்டு உஷாராக வேறு வழியை கையாண்டு மீதமானஃபித்ரா தொகையை ஜகாத் நிதியில் 
சேர்த்தது அண்ணன் ஜமாஅத்.

அப்போது நாம், ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும். என்று கேட்டிருந்தோம். அதற்கு அண்ணன், ''நாங்க இப்பிடித்தான் செய்வோம்; விரும்புனா எங்கள்ட்ட குடுங்க; இல்லனா எங்கள ஆளை விடுங்க'ன்னு சொன்னதை தவிர வேறு பதில் சொல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஃபித்ரா கணக்கு வெளியிட்டுள்ள அண்ணன் ஜமாஅத், 82 ,067 ரூபாய்கள் மீதமாகி விட்டதாகவும் அதை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டதாகவும் அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1000௦௦௦ பேருடைய பித்ரா தொகையை  உரியவர்களுக்கு விநியோகிக்காமல் அவர்களின் மார்க்க கடமையோடு விளையாடியுள்ளது. சொல்ல முடியாது; இப்போதும் நாணயமதிப்பு பட்ட்யலிட்டு விஷயத்தை திசைதிருப்ப  
அண்ணன் கால்குலேட்டர் சகிதம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.
 
நன்றி; அப்துல் முஹைமின்

ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே..?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா விநியோகம் தொடர்பாக இந்த ஆண்டு
 82 ,067 ரூபாய்கள் மீதமாகி விட்டதாகவும் அதை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டதாகவும் அறிவித்துள்ளதையும், அதாவது சுமார் 1000௦௦௦ பேருடைய பித்ரா தொகையை  உரியவர்களுக்கு விநியோகிக்காமல் அவர்களின் மார்க்க கடமையோடு விளையாடியுள்ளது என்பதையும் நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம்.
 
இதற்கிடையில் மேற்கண்ட தொகை குறித்து இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது.
 
அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா வரவு மொத்தம் - 57 ,66 ,667 
 
அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600 
 
தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067 
 
இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால், மீதி இருப்பான  82 ,067 பற்றி எழுதி விட்டு,  'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகை' என்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.
 
அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து  82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அப்படியானால் மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 எங்கே?
 
புரியிற மாதிரி சொல்வதாக இருந்தால் செல்வந்தர் ஒருவர், தனது கணக்காளரிடம்  பத்து ரூபாயை தந்து இதை ஏழைகளுக்கு செலவு செய்து விட்டு கணக்கு கொடு என்கிறார். 
 
அதை வாங்கிய கணக்காளர் ஒன்பது ரூபாயை தனது உதவியாளரிடம் கொடுத்து ஏழைகளுக்கு பொருள் வாங்கி கொடு என்று சொல்லி விட்டு, ஒரு ரூபாயை தன் கைவசம் வைத்துக் கொள்கிறார்.
 
ஒன்பது ரூபாய் வாங்கிப்போன அந்த உதவியாளர், எட்டு ரூபாய்க்கான பொருளை ஏழைகளுக்கு வழங்கி விட்டு, ஒரு ரூபாயை கணக்காளரிடம் மீதம் அனுப்புகிறார்.
 
இப்போது செல்வந்தர் கணக்காளரிடம் கணக்கு கேட்க, ஒரு ரூபாயை திருப்பித் தந்து விட்டு, அய்யா! ஒன்பது ரூபாய் என் உதவியாளரிடம் கொடுத்தேன். அவர் எட்டு ரூபாய்க்கு ஏழைகளுக்கு பொருள் வழங்கிவிட்டு, ஒரு ரூபாயை என்னிடம் தந்தார். அந்த ஒரு ரூபாய் தான் இது என்கிறார். 
 
அப்போது செல்வந்தர், சரி! நான் கொடுத்த பத்து ரூபாயையும் அவனிடம் நீ முழுசா தந்திருந்தா நீ சொல்ற கணக்கு சரி. ஆனா ஒரு ரூபாயை நீ புடிச்சு வச்சுக்கிட்டு அவனிடம் ஒன்பது ரூபாய் தான குடுத்தாய். அவன் குடுத்த ஒரு ரூபாய் இங்க இருக்கு; உன்னிடம் மீதமிருந்த அந்த ஒரு ரூபாய் எங்கே எனக் கேட்க, அதுதான்யா இந்த ஒரு ரூபாய் என கணக்காளர் சொன்னாராம். அது போலத் தான் அண்ணன் ஜமாத்தின் கணக்கும் உள்ளது. 
 
எனவே மறுபடியும் கேட்கிறோம்.  மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 எங்கே?
 
நன்றி; அப்துல் முஹைமின்

அது போன வருஷம்; இது இந்த வருஷம்....???

ஒப்பற்ற  ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாத்தின் ஃபித்ரா நிதி தொடர்பாக இன்றைக்கு 
இன்னொரு விஷயத்தை பார்ப்போம். கடந்த ஆண்டு ரமலான் காலகட்டத்தில் அண்ணன் ஜமாஅத் ஒரு அறிவிப்பை செய்திருந்தது. அதாவது, ''ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் கிளைகள் சார்பாக வழங்கப்படும் ஃபித்ரா பொருட்கள் ரூ150 முதல் ரூ.250௦ வரை தான் இருக்க வேண்டும்.
ரூ.250௦க்கு மேல் ஃபித்ரா பொருள்கள் வழங்கும் கிளைகளுக்கு மாநிலத்தலைமை மூலம் ஃபித்ரா தொகை அனுப்பி வைக்கப்படாது''''.என்று அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கான ஃபித்ரா பொருட்களின் உச்சவரம்பாக ரூ.250 ஐ நிர்ணயம் செய்த அண்ணன் ஜமாஅத், இந்த ஆண்டு அந்த உச்சவரம்பை உயர்த்தி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படியானால் பழைய உச்சவரம்பே நீடிக்கிறது என்று தெரிகிறது.

அண்ணன் ஜமாஅத்தின் உச்சவரம்பை மீறி, இந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கு  ரூ.300௦௦ முதல் ரூ.750௦ வரை மதிப்புள்ள பொருட்களை 33 கிளைகள் வழங்கியுள்ளன.

ரூ. 251  முதல் ரூ. 300௦௦ வரையிலான பொருட்கள் வழங்கிய கிளைகளை  
கணக்கிட்டால் பட்டியல் நீளும்.  தலைமையின் கட்டளையை மீறி ஏகப்பட்ட ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரே குடும்பத்தாருக்கு வழங்கிய இந்த கிளைகளுக்கு, அண்ணன் ஜமாஅத் மாநிலதலைமை ஃபித்ரா தொகையை அனுப்பாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் எதிலும் சொல் ஒன்று; செயல் ஒன்றாக செயல்படும் அண்ணன் ஜமாஅத், இந்த விஷயத்திலும் சம்மந்தப்பட்ட கிளைகளுக்கு தலைமை மூலம் பணத்தை அனுப்பியுள்ளது.

அண்ணன் ஜமாஅத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது,  அண்ணன் ஜமாஅத்தின் அறிவிப்புகளை 'ஓடுற தண்ணீல தான் ஒலக்கை கொண்டு தான் எழுதணும் போல தெரியுது.

நன்றி; அப்துல் முஹைமின்

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மார்க்கத்தில் நாளுக்கொரு பரிமானம் காணும் அறிஞர் பீஜேயும், அவரை தலைவராக கொண்டுள்ளவர்களும் அரசியல் விசயத்திலும் எடுத்த அவதாரங்கள் ஏராளம்; தாராளம். அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விட்டு அதை மறந்து வாரியத்தை வாங்கி வீரியம் இழந்து விட்டார்கள். நேரடியான அரசியலில் குதித்து விட்டார்கள் என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர் அணியினரை எகிறிக்குதித்து விமர்சித்த பீஜேயும் அவரை தலைவராக கொண்டவர்களும் இதோ அரசியல் எனும் சாக்கடையில்[அவர்கள் பாஷையில்] நீந்த இந்த உள்ளாட்சித் தேர்தலை வெள்ளோட்டம் பார்க்க தீர்மானித்துள்ளார்கள். ததஜவின் இந்த திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பார்ப்பதற்கு  முன்னால், அரசியல் குறித்த இவர்களின் கடந்த கால நிலைப்பாடுகளை கொஞ்சம் அசைபோடுவது இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.

கடந்த 1989 ஜனவரி  அல்ஜன்னத் இதழில் தேர்தல் குறித்து அறிஞர் பீஜே எழுதிய தலையங்கம்;

உங்கள் பொன்னான வாக்குகள்!
இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!

யாரைத் தேர்ந்தெடுத்தாலும்   லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85)

நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)
வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.

நன்றி:அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989,

தேர்தலில் போட்டியிடும் யாரை தேர்ந்தெடுத்தாலும் அது தீமைக்கு துணை போனதாக அமையும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் அறிஞர் பீஜே. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து தமுமுக தொடங்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும்  அரசியல் இல்லை. ஆனால் யாரை ஆதரிப்பது என்பதை நாங்கள் தீர்மானிப்போம் என்று அறிவித்து அரசியலுக்கு புது அர்த்தம் கண்டார். ஜெயலலிதா கருணாநிதி என தான் ஆதரித்த அணிக்கு பிரச்சாரமும் மேற்கொண்டார்.

திடீரென தமுமுகவிலிருந்து விலகுவதற்கு அல்லது விலக்கப்படுவதற்கு முன்பாக, 'தேர்தல் களப்பணி ஆற்றினால் ஈமான் போய் விடும்' என்று ஏகத்துவத்தில் எதுகைமோனையோடு 2004  ல் எழுத்தோவியம் கண்டார்.

தமுமுகவிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்ட பின் தனக்கென ததஜவை உருவாக்கியபின், இது கொடி பிடிக்கும் கூட்டமல்ல; இது கொள்கை  கூட்டம் என்று கர்ஜித்தார். பின்னர் கொடி கண்டார்; கோஷமும் கொண்டார். அரசியலில் ஆதரவு நிலைப்பாடு கண்டார். அந்த கட்சிகளின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி, கருணாநிதிக்காக ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவுக்காக கருணாநிதியும் பழுக்க காய்ச்சி பழுத்த அரசியல்வாதியாக கரை சேர்ந்தார்.

இந்நிலையில், இவரின் பரமஎதிரியான தமுமுக அரசியல் களம் கண்டவுடன் 'மண்ணைக் கவ்வ வைப்பேன்' என்று மனுநீதி சிந்தனையில் முழங்கினார். முதல் தேர்தலில் முன்னுரை எழுதிய மமக, அடுத்த தேர்தலில்  இவரை மண்ணைக் கவ்வ வைத்து வெற்றியுரை எழுதியது. சட்டமன்றத்தில் தடம் பதித்தது. இது இவரை ரெம்பவே பாதித்து விட்டது  என்பதற்கு  சான்றுதான் இந்த நேரடி அரசியல் பிரவேச அறிவிப்பு.


"நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எந்த நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். உறுப்பினர்கள் கட்சி சாராமல் தனித்து போடியிடலாம். ஆனால் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் பிரச்சாரம் செய்யாது.

எனவே தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெயரையோ, கொடிகளையே எந்த வேட்பாளர்களும் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாவட்ட, கிளை நிர்வாகிகள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரச்சாரம், மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாநில தலைமை கேட்டுகொள்கின்றது."
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிக்கையில், ''ததஜ என்பது நேரடியாகவோ-மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடாது. நாங்கள் சீட்டுக்காக-நோட்டுக்காக சமுதாயத்தை அடகு வைக்கமாட்டோம்; எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று உங்களிடம் வரமாட்டோம் என்று இதுவரை சொன்னதற்கு  மாற்றமாக, தனது அமைப்பின் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பீஜே தலைமையிலான ஜமாஅத் சொல்கிறது. நாங்கள் பைலா வைத்திருக்கிறோம். அந்த பைலாப் படிதான் எல்லாம் செய்வோம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்கும் பீஜேயும், அவரை தலைவராக கொண்டவர்களும் 'உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஒரு வரியை ததஜ பைலாவிலிருந்து காட்டுவார்களா?

இப்படி நாம் கேட்டவுடன் உறுப்பினர்கள் போட்டியிட பைலாவில் தடையிருக்கிறதா என்று வார்த்தை விளையாட்டு விளையாடுவார்கள். பைலாவில் அமைப்பின் செயல் திட்டங்கள் என்ற பகுதியில், 'உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. என்று உள்ளதே! பைலாவின் இந்த சட்டம் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாதா? உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்று காட்டமுடியுமா?

அடுத்து, இதே உள்ளாட்சித் தேர்தல் குறித்து பைலாவில் செயல்திட்டத்தில்  கூறும்போது, உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும்  ஆதரவாக கருத்துக் கூறுவதோ, அல்லது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. மேலும் அனைத்து மட்ட நிர்வாகிகளும், அனைத்து மட்ட செயற்குழு-ப்துக்குழு உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தலில்  பிரசாரம் செய்யக் கூடாது'  என்று விதி இருக்கிறது. ஆனால் இதே
உள்ளாட்சி தேர்தலில்  உறுப்பினர்கள் மட்டும் போட்டியிடலாம் என்ற விதி இல்லையே? 

மேலும், ''உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்'' என்று உள்ளதே! எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்பது அமைப்பின் கொள்கையல்லவா? அதற்கு மாற்றமாக தேர்தலில் போட்டியிடுபவர் எப்படி இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியும்?
மேலும் சில தவறுகளை செய்தவர்கள் மாநில-மாவட்ட-கிளை நிர்வாகத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறும் பைலா விதி, அந்த தவறுகள் பட்டியலில் 'உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுவதையும்' குறிப்பிடுகிறதே?

அப்படியானால் பைலா எதை  தவறென்று சொல்கிறதோ எந்த தவறை செய்தால் சாதாரண கிளை நிர்வாகி பதவியை கூட பெற தகுதி இல்லை என்று சொல்கிறதோ, அந்த தவறை அதாவது தேர்தலில் போட்டியிடக்கூடிய அந்த தவறை  மாநில நிர்வாகமே செய்யத் தூண்டுவது அமைப்பு விதியை மாநில நிர்வாகமே மீறுவது ஆகுமே?

 ததஜவின் இந்த புதிய அறிவிப்பு பிரகாராம் இன்றைக்கு உறுப்பினர் போட்டியிட அனுமதி; உள்ளாட்சியில் போட்டியிட அனுமதி. நாளை நிர்வாகிகள் போட்டியிட அனுமதி; சட்டமன்றம்-நாடாளுமன்றத்திற்கு போட்டியிட அனுமதி. [மறைவான ஞானமா? என்று கேட்க வேண்டாம். ததஜவின் வெளிப்படையான நடவடிக்கையை  வைத்து செய்யும் கணிப்பு இது]

இதையெல்லாம் விட, பீஜே தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உள்ளாட்சியில் போட்டியிட்டு மேயரானாலும் தடுக்க முடியாதே? ஒரு வேளை அதற்கான முன்னோட்டம்தான் இந்த வெள்ளோட்டமோ? அல்லாஹ்வே அறிந்தவன்.

உங்கள் ஒட்டு ததஜ'வுக்கே!