ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா விநியோகம் தொடர்பாக வெளியிட்ட பட்டியலில்,
அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா வரவு மொத்தம் - 57 ,66 ,667
அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600
தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067
இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால், மீதி இருப்பான 82 ,067 பற்றி எழுதி விட்டு, 'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகை' என்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.
அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து 82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அப்படியானால் மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை 82 ,067 எங்கே? என்று நாம் கேட்டிருந்தோம்.
அதுமட்டுமன்றி, இந்த மூளையை அடமானம் வைத்த கூட்டத்திற்கு விளங்குவதற்காக, பிரபல்யமான வாழைப்பழ காமெடி பாணியில் விளக்கமும் சொல்லியிருந்தோம். ஆனாலும் மூளை இருந்தால் அல்லவா சிந்திப்பதற்கு? என்று கேட்கும் வண்ணம் பொய்யனின் பினாமி, ஒரு உதாரணம் சொல்லி உதார் விட்டுள்ளது. முதலில் பொய்யனின் பினாமி சொல்வதை பார்ப்போம்;
''உதாரணமாக ஒரு கடையின் முதலாளி 3
பேர்களை அழைத்து ஆளுக்கு பத்து ரூபாய்
கொடுக்கிறார். கொடுத்து இதை செலவு
செய்யுங்கள் என சொல்கிறார். செலவு செய்து
விட்டு மூவரும் ஆளுக்கு ஒரு ரூபாயைத்
திருப்பி அந்த கடை முதலாளியிடம்
கொடுக்கின்றனர். இப்போது அந்த முதலாளி
எவ்வாறு கணக்கு எழுதுவார்.
மொத்த வரவு: 30 ரூபாய்
ஊழியர்களுக்கு கொடுத்தது: 27 ரூபாய்
கடையின் இருப்பு: 3 ரூபாய் (செலவு செய்தவர்கள் திருப்பி அனுப்பிய தொகை)
என்று பொய்யனின் பினாமி கதை சொல்கிறது; இல்லை இல்லை கதை விடுகிறது. சரி இப்போது விசயத்திற்கு வருவோம்.
பொய்யனின் பினாமியின் கணக்கு எப்போது சரியாகும் என்றால், மொத்த வரவான முப்பது ரூபாயையும் கடை முதலாளி பணியாளர்களிடம் தந்தால் தான் பொய்யனின் பினாமி கூறியது போன்று மூன்று ரூபாய் மீதமாகும். ஆனால் இந்த கடை முதலாளியான பீஜே எனும் பொய்யன், இந்த பினாமியிடம் தரும்போது 27 ரூபாய் மட்டுமே தான் தருகிறார். அந்த 27 ரூபாயையும் முழுவதும் செலவு செய்ய துப்பில்லாத இந்த பினாமி, 24 ரூபாய் செலவு செய்து விட்டு மூன்று ரூபாயை பொய்யன் பீஜெயிடம் திருப்பித் தருகிறது. இப்ப பொய்யன் பீஜே கணக்கு எழுதுவதாக இருந்தால்,
மொத்த வரவு 30௦.00
பினாமியிடம் கொடுத்தது 27.00௦௦
.........
மீத இருப்பு= 3 .௦௦௦௦00
பினாமி வாபஸ் கொண்டு வந்தது = 3 .௦௦00
............
ஆகமொத்தம் முதலாளியிடம் இருப்பு6 .௦௦00
மொத்த இருப்பாக ஆறு ரூபாய் காட்டவேண்டிய பொய்யன் பீஜே, இருப்பாக பினாமி கொண்டு வந்த மூன்று ரூபாயை மட்டும் காட்டி விட்டு, தன்னிடம் உள்ள மூன்று ரூபாயை மறைக்கிறார்.
எனவே தான் மீண்டும் கேட்கிறோம். 'ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே?
பொய்யன் பீஜேக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன.
- மொத்த வரவான 57 ,66 ,667 ரூபாய்களை நான் முழுவதுமாக மாவட்டங்களுக்கு வழங்கி விட்டேன். மாவட்டம் விநியோகிக்க முடியாமல் என்னிடம் தந்த 82 ,067 ரூபாய் மட்டுமே நிகர இருப்பு என்று சொல்ல வேண்டும்.
- நான் மாவட்டங்களுக்கு முழுமையாக வழங்கவில்லை. 82 ,067 ரூபாயை என் வசம் வைத்துக்கொண்டு மீதியைத்தான் மாவட்டங்களுக்கு வழங்கினேன். நான் வழங்கிய தொகை அனைத்தையும் மாவட்டங்கள் பைசா பாக்கியில்லாமல் செலவு செய்து விட்டன. எனவே என்னிடம் இருந்த தொகையான 82 ,067 மட்டுமே நிகர இருப்பு என்று சொல்ல வேண்டும்.
என்றால்,
என்னிடம் இருந்த இருப்பு தொகை = 82 ,067
மாவட்டங்கள் திருப்பித் தந்த தொகை= 82 ,067
--------------
ஆக மொத்தம் நிகர இருப்பு 1 64 ,134
--------------
என்று உண்மைக் கணக்கை அறிவிக்க வேண்டும். அதை விடுத்து பினாமிகளை ஏவி விட்டு பிதற்றுவதால் பொய்க்கணக்கு உண்மைக் கணக்காகி விடாது என்பதை பொய்யன் பீஜே புரிந்து கொண்டால் சரிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக