வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சினிமாவை ஒழிக்க முடியும்; ஆனா முடியாது- அண்ணனின் காமெடி!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கற்பழிப்புகள் நாள்தோறும் பெருகி வருவதை கண்டு கவலையுற்ற ஒருவன், ஒரு தலைவரிடம் போய் தீர்வு கேட்க, 'கற்பழிப்புகளை ஒழிக்க வேண்டுமானால், கற்பழிப்புக்கு காரணமாக இருக்கும் 'கருவியை' ஒழிக்க 
வேண்டும். ஆனாலும் அந்த 'கருவியை' ஒழிக்க முடியாது; ஏனென்றால் அந்த கருவி நேர்மையான முறையில் திருமணம் செய்து குழந்தை பெறுவதற்கும்  பயன்படுகிறது. எனவே அந்த கருவியை ஒழிக்க முடியாத நிலை உள்ளதால் கற்பழிப்புகளை ஒழிக்க முடியாது..'என்று அந்த தலைவர் பதில் சொன்னால் கேள்வி கேட்டவனுக்கு மயக்கம் வருமா? வராதா? இதுபோன்ற  போன்ற ஒரு சூப்பர் பதிலை அண்ணனும் சொல்லியுள்ளார்.

சமூக தீமைகளுக்கு முதல் காரணமாக இருக்க கூடிய சினிமாவை எதிர்த்து டி.என்.டி.ஜே. போராட்டம் நடத்தாதது ஏன் என்ற கேள்விக்கு உணர்வில் பதிலளித்த அண்ணன், ''சினிமாவை தயாரிப்பதற்கான சாதனங்களும் தொழில் நுட்பங்களும் நல்ல காரியங்களுக்கும் உதவக்கூடியதாக உள்ளன. அந்த சாதனங்களை ஒழித்தால் தான் சினிமாவை ஒழிக்க முடியும். 
அந்த தொழில் நுட்பமும் சாதனங்களும் நல்ல பணிகளுக்கும் 
தேவைப்படுவதால் அவற்றை ஒழிக்க முடியாது. சினிமாவையும் ஒழிக்க முடியாது..' என்று கூறியுள்ளார். 

சினிமா சாதனங்களை ஒழித்தால் தான் சினிமாவை ஒழிக்க முடியும் . இல்லையென்றால் முடியாது என்ற நகைச்சுவை பதிலை கண்டு யாரும் நம்மை கேலி செய்து விடக்கூடாது என்பதால் 
கடைசியாக, நல்ல ஆட்சி நடந்தால் ஒழிக்கலாம்; மனநிலையில் 
மாற்றத்தை  உண்டாக்கி ஒழிக்கலாம் என்று போகிற போக்கில் சொல்லி விட்டு செல்கிறார்.  

சகோதரர்களே! அண்ணனிடம் சினிமாவை ஒழிப்பதற்கு தீர்வு கேட்ட மாதிரி, கற்பழிப்பு- விபச்சாரம்- கொலை- போன்றவற்றை ஒழிக்க தீர்வு கேட்டு விடாதீர்கள். கேட்டால்....

இப்போது முதல் பாராவை படியுங்கள்.

நன்றி;அப்துல்முஹைமின்

__._,_.___

வியாழன், 29 செப்டம்பர், 2011

மறுபடியும் மொதல்ல இருந்தா....????????

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா விநியோகம் தொடர்பாக வெளியிட்ட  பட்டியலில்,
 
அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா வரவு மொத்தம் - 57 ,66 ,667 
 
அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600 
 
தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067 
 
இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால், மீதி இருப்பான  82 ,067 பற்றி எழுதி விட்டு,  'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகை' என்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.
 
அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து  82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அப்படியானால் மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 எங்கே? என்று நாம் கேட்டிருந்தோம்.
 
அதுமட்டுமன்றி, இந்த மூளையை அடமானம் வைத்த கூட்டத்திற்கு விளங்குவதற்காக, பிரபல்யமான வாழைப்பழ காமெடி பாணியில் விளக்கமும் சொல்லியிருந்தோம். ஆனாலும் மூளை இருந்தால் அல்லவா சிந்திப்பதற்கு? என்று கேட்கும் வண்ணம் பொய்யனின் பினாமி, ஒரு உதாரணம் சொல்லி உதார் விட்டுள்ளது. முதலில் பொய்யனின் பினாமி சொல்வதை பார்ப்போம்;
 
''உதாரணமாக ஒரு கடையின் முதலாளி 3
 
பேர்களை அழைத்து ஆளுக்கு பத்து ரூபாய்
 
கொடுக்கிறார். கொடுத்து இதை செலவு
 
செய்யுங்கள் என சொல்கிறார். செலவு செய்து
 
விட்டு மூவரும் ஆளுக்கு ஒரு ரூபாயைத்
 
திருப்பி அந்த கடை முதலாளியிடம்
 
கொடுக்கின்றனர். இப்போது அந்த முதலாளி
 
எவ்வாறு கணக்கு எழுதுவார்.

மொத்த வரவு: 30 ரூபாய்

ஊழியர்களுக்கு கொடுத்தது: 27 ரூபாய்

கடையின் இருப்பு: 3 ரூபாய் (செலவு செய்தவர்கள் திருப்பி அனுப்பிய தொகை)
 
என்று பொய்யனின் பினாமி கதை சொல்கிறது; இல்லை இல்லை கதை விடுகிறது. சரி இப்போது விசயத்திற்கு வருவோம்.
 
பொய்யனின் பினாமியின் கணக்கு எப்போது சரியாகும் என்றால், மொத்த வரவான முப்பது ரூபாயையும் கடை முதலாளி பணியாளர்களிடம் தந்தால் தான் பொய்யனின் பினாமி கூறியது போன்று மூன்று ரூபாய் மீதமாகும். ஆனால் இந்த கடை முதலாளியான பீஜே எனும் பொய்யன், இந்த பினாமியிடம் தரும்போது 27  ரூபாய் மட்டுமே தான் தருகிறார். அந்த 27  ரூபாயையும் முழுவதும் செலவு செய்ய துப்பில்லாத இந்த பினாமி, 24  ரூபாய் செலவு செய்து விட்டு மூன்று ரூபாயை பொய்யன் பீஜெயிடம் திருப்பித் தருகிறது. இப்ப பொய்யன் பீஜே கணக்கு எழுதுவதாக இருந்தால்,
 
மொத்த                          வரவு                           30௦.00
பினாமியிடம் கொடுத்தது                          27.00௦௦  
                                                                                .........
                  
                                                     மீத இருப்பு=   3 .௦௦௦௦00
பினாமி வாபஸ் கொண்டு வந்தது     =  3 .௦௦00
                                                                               ............
ஆகமொத்தம் முதலாளியிடம் இருப்பு6 .௦௦00
 
மொத்த இருப்பாக ஆறு ரூபாய் காட்டவேண்டிய பொய்யன் பீஜே, இருப்பாக பினாமி கொண்டு வந்த மூன்று ரூபாயை மட்டும் காட்டி விட்டு, தன்னிடம் உள்ள மூன்று ரூபாயை மறைக்கிறார்.
 
எனவே தான் மீண்டும் கேட்கிறோம். 'ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே?
 
பொய்யன் பீஜேக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன.
 
  1. மொத்த வரவான 57 ,66 ,667 ரூபாய்களை நான் முழுவதுமாக மாவட்டங்களுக்கு வழங்கி விட்டேன். மாவட்டம் விநியோகிக்க முடியாமல் என்னிடம் தந்த 82 ,067  ரூபாய் மட்டுமே நிகர இருப்பு என்று சொல்ல வேண்டும்.
  2. நான் மாவட்டங்களுக்கு முழுமையாக வழங்கவில்லை. 82 ,067 ரூபாயை என் வசம் வைத்துக்கொண்டு  மீதியைத்தான் மாவட்டங்களுக்கு வழங்கினேன். நான் வழங்கிய தொகை அனைத்தையும் மாவட்டங்கள் பைசா பாக்கியில்லாமல் செலவு செய்து விட்டன. எனவே என்னிடம் இருந்த தொகையான 82 ,067  மட்டுமே நிகர இருப்பு என்று சொல்ல வேண்டும்.
இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை  சொல்ல முடியவில்லை 
என்றால்,

என்னிடம் இருந்த இருப்பு தொகை        = 82 ,067 
மாவட்டங்கள் திருப்பித் தந்த தொகை=  82 ,067 
                                                                                  --------------
ஆக மொத்தம் நிகர இருப்பு                         1 64 ,134          
                                                                                  --------------


என்று உண்மைக் கணக்கை அறிவிக்க வேண்டும். அதை விடுத்து பினாமிகளை ஏவி விட்டு பிதற்றுவதால் பொய்க்கணக்கு உண்மைக் கணக்காகி விடாது என்பதை பொய்யன் பீஜே புரிந்து கொண்டால் சரிதான்.


--நன்றி; அப்துல் முஹைமின்
இயக்கங்களின் மறுபக்கம்.

பித்ரா விநியோகம்; பலவீனம் கண்ணிலா? கணக்கிலா?

 ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஃபித்ரா விநியோக கணக்கு என்று அண்ணன் ஜமாஅத் வெளியிட்ட முதல் பட்டியலில் 65கணக்கு முரண்பாடுகள் இருந்தன. அதை சரி செய்து கடந்த வார உணர்வில் மறுப்பதிப்பு செய்த அண்ணன் ஜமாஅத், ''ஒரு வரி மேலே ஏறியதால் வந்த குளறுபடி' என்று சமாளித்தது.

சரி! சரிசெய்து வெளியிட்ட இரண்டாவது பட்டியலாவது சரியாக இருக்கனுமல்லவா? அதில் உள்ள  ஓட்டைகளில் சிலவற்றை உங்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம்.

சூளைமேடு
தலைமை மூலம்- 10000
உள்ளூர் வசூல் 13390
௦ஆக மொத்தம் 23390௦
அண்ணன் ஜமாஅத் கூட்டல் லட்சணம்= ௦13390

திண்டிவனம்;
தலைமை மூலம் 14000
உள்ளூர் வசூல் 23070
ஆக மொத்தம் 37,070௦
அண்ணன் ஜமாஅத் கூட்டல் லட்சணம்= 37135

சூரமங்கலம்;
தலைமை மூலம் 12670
உள்ளூர் வசூல் 18850௦
ஆக மொத்தம் 31520௦
அண்ணன் ஜமாஅத் கூட்டல் லட்சணம்=32520 

புத்தன்துறை;
தலைமை மூலம் 7000
உள்ளூர் வசூல் 800௦
ஆக மொத்தம் 7800௦
அண்ணன் ஜமாஅத் கூட்டல் லட்சணம்= ௦?????

மெயின்பஜார்&காந்தல்;
தலைமை மூலம் 12000
உள்ளூர் வசூல் 7780
ஆக மொத்தம் 19780
அண்ணன் ஜமாஅத் கூட்டல் லட்சணம்= 13780௦

இவைகள் சாம்பிள்கள் தான்; இன்னும் பித்ரா கணக்கு வழக்கில் இவர்களின் லட்சணங்கள் தொடர்ந்து வெளிவரும் இறைவன் நாடினால்.

அண்ணன் கணக்குல 'வீக்'குன்னு மக்கள் தெரிந்து மானம் போறதுக்குள்ள நல்ல விலையுயர்ந்த நவீன கால்குலேட்டரை அண்ணனுக்கு வாங்கி அனுப்புவது அண்ணனை பின்பற்றுபவர்கள் 
அண்ணனுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும். ௦௦

--நன்றி; அப்துல் முஹைமின்
இயக்கங்களின் மறுபக்கம்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பித்ரா விநியோகம்; தொடர்ந்து மார்க்க கடமையில் விளையாடும் அண்ணன் ஜமாஅத்!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''நீங்கள் எந்த வகைக்கு வழங்குகிறீர்களோ அந்த வகைக்கு மட்டுமே செலவிடப்படும்'' இது ஒவ்வொரு வசூல் வேட்டையின் போதும் அண்ணன் ஜமாஅத் அடிக்கும் ஸ்டான்டாகும். ஆனால் உண்மை நிலவரமோ பெரும்பாலும் நேர்முரனாகத் தான் இருக்கும்.

சுனாமி நிதியில் தனது இயக்கத்தவருக்கு  சீருடை, உணர்வுக்கு ஒரு தொகை, இவ்வாறாக சுனாமித் தொகையில் ஒரு பங்கு பினாமியாக போனதாக பரவலாக குற்றச்சாட்டு அந்த நேரத்தில் எழுந்ததை மறந்திருக்க முடியாது. அதற்கான ஆதாரம்  இங்கே; https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMZPWAfeDkVHeOPA8VCXhbiwCewyDg9ID7D92E9zL_R1OP3RinyYraDvzfHGUkFVZlcf8YmS9UDNKSwsHTUxs5RFsLAZf5lx9N7OIqkRr0-LL2DTGXS6uIVpxOFiJoEBIB9cNQw_o3a9M8/s1600/sunami_unarvu_23-03-2006.JPG

அடுத்து ஃபித்ரா வசூலில்  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மீதமாகி விட்டது. எனவே தலைமையால் நடத்தப்படும்  தாஃவா சென்டருக்கு ஒதுக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும். ஃபித்ரா தொகையை தாஃவா சென்டருக்கு எப்படி ஒதுக்கலாம் என கடந்த காலங்களில் விமர்சனங்கள் எழுந்தவுடன், கடந்த ஆண்டு உஷாராக வேறு வழியை கையாண்டு மீதமானஃபித்ரா தொகையை ஜகாத் நிதியில் 
சேர்த்தது அண்ணன் ஜமாஅத்.

அப்போது நாம், ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கு இவர்கள் ஆதாரத்தை  வைக்க வேண்டும். என்று கேட்டிருந்தோம். அதற்கு அண்ணன், ''நாங்க இப்பிடித்தான் செய்வோம்; விரும்புனா எங்கள்ட்ட குடுங்க; இல்லனா எங்கள ஆளை விடுங்க'ன்னு சொன்னதை தவிர வேறு பதில் சொல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஃபித்ரா கணக்கு வெளியிட்டுள்ள அண்ணன் ஜமாஅத், 82 ,067 ரூபாய்கள் மீதமாகி விட்டதாகவும் அதை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டதாகவும் அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1000௦௦௦ பேருடைய பித்ரா தொகையை  உரியவர்களுக்கு விநியோகிக்காமல் அவர்களின் மார்க்க கடமையோடு விளையாடியுள்ளது. சொல்ல முடியாது; இப்போதும் நாணயமதிப்பு பட்ட்யலிட்டு விஷயத்தை திசைதிருப்ப  
அண்ணன் கால்குலேட்டர் சகிதம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.
 
நன்றி; அப்துல் முஹைமின்

ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே..?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா விநியோகம் தொடர்பாக இந்த ஆண்டு
 82 ,067 ரூபாய்கள் மீதமாகி விட்டதாகவும் அதை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டதாகவும் அறிவித்துள்ளதையும், அதாவது சுமார் 1000௦௦௦ பேருடைய பித்ரா தொகையை  உரியவர்களுக்கு விநியோகிக்காமல் அவர்களின் மார்க்க கடமையோடு விளையாடியுள்ளது என்பதையும் நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம்.
 
இதற்கிடையில் மேற்கண்ட தொகை குறித்து இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது.
 
அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா வரவு மொத்தம் - 57 ,66 ,667 
 
அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600 
 
தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067 
 
இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால், மீதி இருப்பான  82 ,067 பற்றி எழுதி விட்டு,  'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகை' என்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.
 
அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து  82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அப்படியானால் மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 எங்கே?
 
புரியிற மாதிரி சொல்வதாக இருந்தால் செல்வந்தர் ஒருவர், தனது கணக்காளரிடம்  பத்து ரூபாயை தந்து இதை ஏழைகளுக்கு செலவு செய்து விட்டு கணக்கு கொடு என்கிறார். 
 
அதை வாங்கிய கணக்காளர் ஒன்பது ரூபாயை தனது உதவியாளரிடம் கொடுத்து ஏழைகளுக்கு பொருள் வாங்கி கொடு என்று சொல்லி விட்டு, ஒரு ரூபாயை தன் கைவசம் வைத்துக் கொள்கிறார்.
 
ஒன்பது ரூபாய் வாங்கிப்போன அந்த உதவியாளர், எட்டு ரூபாய்க்கான பொருளை ஏழைகளுக்கு வழங்கி விட்டு, ஒரு ரூபாயை கணக்காளரிடம் மீதம் அனுப்புகிறார்.
 
இப்போது செல்வந்தர் கணக்காளரிடம் கணக்கு கேட்க, ஒரு ரூபாயை திருப்பித் தந்து விட்டு, அய்யா! ஒன்பது ரூபாய் என் உதவியாளரிடம் கொடுத்தேன். அவர் எட்டு ரூபாய்க்கு ஏழைகளுக்கு பொருள் வழங்கிவிட்டு, ஒரு ரூபாயை என்னிடம் தந்தார். அந்த ஒரு ரூபாய் தான் இது என்கிறார். 
 
அப்போது செல்வந்தர், சரி! நான் கொடுத்த பத்து ரூபாயையும் அவனிடம் நீ முழுசா தந்திருந்தா நீ சொல்ற கணக்கு சரி. ஆனா ஒரு ரூபாயை நீ புடிச்சு வச்சுக்கிட்டு அவனிடம் ஒன்பது ரூபாய் தான குடுத்தாய். அவன் குடுத்த ஒரு ரூபாய் இங்க இருக்கு; உன்னிடம் மீதமிருந்த அந்த ஒரு ரூபாய் எங்கே எனக் கேட்க, அதுதான்யா இந்த ஒரு ரூபாய் என கணக்காளர் சொன்னாராம். அது போலத் தான் அண்ணன் ஜமாத்தின் கணக்கும் உள்ளது. 
 
எனவே மறுபடியும் கேட்கிறோம்.  மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 எங்கே?
 
நன்றி; அப்துல் முஹைமின்

அது போன வருஷம்; இது இந்த வருஷம்....???

ஒப்பற்ற  ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாத்தின் ஃபித்ரா நிதி தொடர்பாக இன்றைக்கு 
இன்னொரு விஷயத்தை பார்ப்போம். கடந்த ஆண்டு ரமலான் காலகட்டத்தில் அண்ணன் ஜமாஅத் ஒரு அறிவிப்பை செய்திருந்தது. அதாவது, ''ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் கிளைகள் சார்பாக வழங்கப்படும் ஃபித்ரா பொருட்கள் ரூ150 முதல் ரூ.250௦ வரை தான் இருக்க வேண்டும்.
ரூ.250௦க்கு மேல் ஃபித்ரா பொருள்கள் வழங்கும் கிளைகளுக்கு மாநிலத்தலைமை மூலம் ஃபித்ரா தொகை அனுப்பி வைக்கப்படாது''''.என்று அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கான ஃபித்ரா பொருட்களின் உச்சவரம்பாக ரூ.250 ஐ நிர்ணயம் செய்த அண்ணன் ஜமாஅத், இந்த ஆண்டு அந்த உச்சவரம்பை உயர்த்தி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படியானால் பழைய உச்சவரம்பே நீடிக்கிறது என்று தெரிகிறது.

அண்ணன் ஜமாஅத்தின் உச்சவரம்பை மீறி, இந்த ஆண்டு ஒரு குடும்பத்திற்கு  ரூ.300௦௦ முதல் ரூ.750௦ வரை மதிப்புள்ள பொருட்களை 33 கிளைகள் வழங்கியுள்ளன.

ரூ. 251  முதல் ரூ. 300௦௦ வரையிலான பொருட்கள் வழங்கிய கிளைகளை  
கணக்கிட்டால் பட்டியல் நீளும்.  தலைமையின் கட்டளையை மீறி ஏகப்பட்ட ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரே குடும்பத்தாருக்கு வழங்கிய இந்த கிளைகளுக்கு, அண்ணன் ஜமாஅத் மாநிலதலைமை ஃபித்ரா தொகையை அனுப்பாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் எதிலும் சொல் ஒன்று; செயல் ஒன்றாக செயல்படும் அண்ணன் ஜமாஅத், இந்த விஷயத்திலும் சம்மந்தப்பட்ட கிளைகளுக்கு தலைமை மூலம் பணத்தை அனுப்பியுள்ளது.

அண்ணன் ஜமாஅத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது,  அண்ணன் ஜமாஅத்தின் அறிவிப்புகளை 'ஓடுற தண்ணீல தான் ஒலக்கை கொண்டு தான் எழுதணும் போல தெரியுது.

நன்றி; அப்துல் முஹைமின்

சனி, 24 செப்டம்பர், 2011

உள்ளாட்சித் தேர்தல்; உளரும் பீஜே!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
''பத்ஹுல்முயீன்' எனும் மத்ஹப் நூலைப் பற்றி பீஜே பேசும் போது, ''எந்த ஒரு மஸாயில்  பிரச்சினையை இந்த நூலில்  பார்த்தாலும், சரியான சொல்படி கூடும்; மிகச்சரியான சொல்படி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் வெறுக்கத்தக்கது; இதில் நான் என்ன சொல்றேன்னா தவிர்ந்து கொள்வது நல்லது என்று கிதாபுக்காரர் சொல்வது. ஆக மத்ஹபுங்கிற பேருல இப்பிடி பைத்தியம் வெளையாடுராங்கம்மா என்பார்.
இப்போது சற்றேறக் குறைய உள்ளாட்சித் தேர்தலில் இதே பாணியில் பீஜே பதில் சொல்லியுள்ளார்.

* சரியான சொல் பிரகாரம் பைலா படி உறுப்பினர் போட்டியிடுவது கூடும்.

*மிகச் சரியான சொல் பிரகாரம்  உறுப்பினரும் ஈமான் இழக்க  கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு.[அதாவது ஈமானை  இழக்க
நேரிடும் என்பதால் போட்டியிடக் கூடாது]

*தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் பிரகாரம் உறுப்பினர்கள் போட்டியிட தடை விதிக்கும் சட்ட திருத்தம் பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டு வரலாம்.

* இதுல என்னுடைய [கிதாபுக்காரர் பீஜே] கருத்து என்னன்னா தனிப்பட்ட உறுப்பினர்களும் போட்டியிடக் கூடாது என்பதுதான்.

உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?என்ற நமது கட்டுரையையொட்டி, உணர்வு வார இதழில் கேள்வி ஒன்றுக்கு  பதிலளித்துள்ள பீஜே, 

''ததஜ விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படும் அமைப்பாகும். அந்த பைலாவை ஏற்றுக்கொண்டு தான் உறுப்பினர்கள் அதில்  அங்கம் வகிக்கின்றனர்'' என்கிறார்.

நாம் கேட்பது பைலாவின் சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் நிலையில், சில ஷரத்துகள் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று பைலாவில் இருந்து பீஜே காட்டவேண்டும்.

''உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்ற அறிவிப்பு, புதிதாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக அறிவிக்கப்பட்டதல்ல. இத்தனை ஆண்டுகளாக எந்த நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது'' என்கிறார்.

நாம் கேட்பது உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பகிரங்கமாக அனுமதி அளித்து பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டாரே! இது போன்று கடந்த ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளை பீஜே காட்டவேண்டும்.

''மதுஅருந்துதல், வட்டி வாங்கி சாப்பிடுதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், விபச்சாரத்தில் ஈடுபடுதல்,விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்க  வாய்ப்புள்ள   விதத்தில்  அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல், இயக்கத்துக்கோ தனி நபருக்கோ பொருளாதார மோசடி செய்தல், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம், ஆகிய தேர்தலில் போட்டியிட்டுதல், அதுபோன்ற பதவிகளை வகித்தல், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை. மேற்கண்ட காரியங்களில் ஈடுபடுவோர் கிளை மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதியில்லை என்ற வாசகமே அத்தகையவர்கள் உறுப்பினராக இருக்கலாம் என்பதை தெள்வுபடுத்துகிறது எனவே உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்கிறார் பீஜே.

நாம் கேட்பது மேற்கண்ட தீமைகளை செய்தால் இந்த ஜமாஅத்தில் சாதாரண கிளை நிர்வாகியாக கூட உனக்கு அனுமதியில்லை என்று எச்சரிப்பதற்காக மேற்கண்டவைகள் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது நிர்வாகிகள் நீங்கலாக மற்றவர்கள் மேற்கண்ட  தீமைகளை செய்யலாம் என்று அனுமதிக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளதா? சரி பீஜேயின் கூற்றுப்படி, மேற்கண்ட தவறை ஒரு உறுப்பினர் தானாக செய்தாலே அவன் நிர்வாகி ஆகமுடியாது என்ற நிலை இருக்கும் போது, உறுப்பினர் இந்த தவறை செய்யலாம் என்று ஒரு பொதுச்செயலாளர் அறிவிப்பது அந்த செயலை அவனை செய்யத் தூண்டுவிட்டு பின்னர் அவனை நீ பொறுப்புக்கு தகுதியிலாதவன் எண் கூறுவது எந்த வகையில் அறிவுடமை என்று பீஜே சொல்லவேண்டும்.

அடுத்து உள்ளாட்சியில் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவித்தவர்கள் மேற்கண்ட பாரவை மேற்கோள் காட்டி சட்டமன்றம் நாடாளுமன்ற தேர்தலிலும் உறுப்பினர் போட்டியிடலாம் என்று அறிவிப்பார்களா? அதுமட்டுமல்ல,
  • உறுப்பினர் மது அருந்தலாம்; அவ்வாறு அருந்தும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
  • உறுப்பினர் வட்டிவாங்கி சாப்பிடலாம்; அவ்வாறு சாப்பிடும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
  • உறுப்பினர் விபச்சாரம் செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
  • உறுப்பினர் விபசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ள வகையில்  அன்னியப் பெண்ணுடன்    தணித்திருக்கலாம்;                        அவ்வாறு இருக்கும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
  • உறுப்பினர் தனி நபருக்கோ, இயக்கத்துக்கோ பொருளாதார மோசடி செய்யலாம்; அவ்வாறு செய்யும் போது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. என்று அறிவிப்பார்களா?
உள்ளாட்சியில் போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை போன்று, மேற்கண்டவைகள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுப்பினர்களின் சந்தேகத்தை நீக்குவார்களா?

''உறுப்பினர்களாக உள்ளவர்கள் செய்யும் எந்தக் காரியமும் ஜமாஅத்துடன் தொடர்பு படுத்த முடியாது. ஜமாஅத்தின் பெயரை அல்லது கொடியை, அல்லது நிர்வாக பதவியை பயன்படுத்தினால் தான் அது ஜமாஅத் செய்ததாக கருதப்படும். சாதாரண உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது என்ற அடிப்படையில் தான் பல ஆண்டுகளாக இந்த முடிவு கடைபிடிக்கப்படு வருகிறது'' என்கிறார்.

நாம் கேட்பது ஜமாஅத் என்பது நிர்வாகிகள் மட்டும் தானா? உறுப்பினர்கள் உங்கள் ஜமாஅத்தின் அங்கத்தினர் இல்லையா? உறுப்பினர் மேற்கண்ட தீமைகளை செய்தால் அது ஜமாஅத்தை ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கையை பாதிக்காது என்றால், உங்களால் பாலியல்-ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பாக்கரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடியாதே? ஏனென்றால் ஒருவர் விபசாரம் செய்தால் கூட உறுப்பினராக இருக்கலாம் என்று நீங்கள் சொல்லும் விளக்கம் பிரகாரம் வெறும் விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை நீக்கியது எப்படி? ஜமாத்திற்கோ, தனி நபருக்கோ பொருளாதார  மோசடி    செய்தாலும் உறுப்பினராக இருக்கலாம் என்ற உங்களின் விளக்கபடி, உறுப்பினரான சைபுல்லாஹ் மோசடியே செய்திருந்தாலும் அவரை நீக்க முடியாதே! நீக்கியது எப்படி?

''கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நம்முடைய உறுப்பினர்கள் பலர் சொந்த ஊரில் சுயேட்சையாக நின்றனர். அது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது பைலாவில் உள்ள விதிப்படி இதை தடுக்க முடியாது என்பதால் அதை   ஏற்றுக்கொண்டோம்'' என்கிறார்.

பீஜேயின் மேற்கண்ட வாக்குமூலப்படி உறுப்பினர் போட்டியிடலாம் என்ற பைலா அனுமதி கடந்த கடந்த உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை  வரை பீஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கே தெரியவில்லையாம். அதனால்தான் போட்டியிட்டவரை விசாரித்துள்ளார்கள். அதன் பின்புதான் பைலா அனுமதி, பைலா வடிவமைப்பாளரான பீஜெவுக்கே தெரிந்ததாம். இதன் மூலம் தெரிவது என்ன? தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்பது பல்லாண்டுகளாக உள்ள நிலை என்றால், கடந்த முறை போட்டியிட்ட உறுப்பினரை ஏன் விசாரணை நடத்த வேண்டும்? இதன் மூலம் கடந்த தேர்தல் வரை தேர்தலில் போட்டியிடும் சிந்தனை மாநில நிர்வாகத்திற்கு இருக்கவில்லை. இந்த ஆண்டு தான் புதியதாக உதயமாகியுள்ளது என்பது தெரிகிறதல்லவா?  

''உள்ளாட்சித் தேர்தலில் தனது தெருவில் மட்டும் தான் ஒருவர் ஓட்டுக் கேட்பார். அவர் ஈமானை இழக்கும் செயலில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது'' என்ற அற்புதமான விளக்கமளிக்கிறார் பீஜே.

நாம் கேட்கிறோம். தேர்தலில் போட்டியிடாமல் களப்பணி ஆற்றினாலே ஈமான் போய்விடும் என்ற கொள்கையுடைய நீங்கள், ஒரு தெருவில் ஓட்டுக் கேட்டால் ஈமான் போகாது என்பதற்கு வைக்கும் அளவுகோல் என்ன? மேலும் உள்ளாட்சியின் எல்லை கூட பேரறிவாளர் என்று கருதப்படும் இவருக்கு தெரியாதது ஆச்சர்யமே! ஒரு வார்டு எல்லை கூட ஒரு தெருவோடு முடிவதில்லை. வார்டை தாண்டி ஊராட்சி மன்றத் தலைவரும் உள்ளாட்சியில் உள்ளதுதான். ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டால் ஒரு தெரு அல்ல; ஒரு ஊரைக் கூட தாண்டி ஓட்டுக் கேட்டாக வேண்டும். அப்படியானால் ஊரளவில் ஓட்டுக் கேட்பவர் ஈமான் நிலை என்ன? அடுத்து, நகராட்சி எல்லை இதையும் தாண்டியது. பேரூராட்சி எல்லை அதையும் தாண்டியது. மாநகராட்சி மேயர் எல்லை பல தொகுதிகளை உள்ளடக்கியது. இவையெல்லாம் உள்ளாட்சியின் அங்கம் தான். பீஜேயின் உறுப்பினர் மேயருக்கு போட்டியிட்டால் பல சட்டமன்றத் தொகுதிகளில் ஓட்டுக் கேட்கும் நிலை வருமே? அப்போது ஈமான் போகுமா? போகாதா?

''ஈமானை இழக்கும் காரியத்தில் ஈடுபட்டால் அவர் அதற்காகவே அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்படுவார்'' என்கிறார்.

கையெடுத்து கும்பிடுவது  மட்டும் தான் ஈமானை இழக்கும் காரியமா? ஊராட்சி அலுவலகம்- நகராட்சி- பேரூராட்சி- மாநகராட்சி அலுவலகங்களின் நடைமுறை அனைத்தும் ஈமானை பலப்படுத்தும் காரியம் என்று பீஜே சொல்வாரா? சட்டமன்றத்தில் நடக்கும் கூத்துக்களுக்கு கடுகளவும் குறைவில்லாமல் இங்கும் நடக்குமே? அப்படிப்பட்ட பதவிக்கு தனது உறுப்பினர் போட்டியிடலாம் என்று அனுமதி அளித்து விட்டு, பின்னர் அவர்களை வேறு வழியின்றி சிலகாரியங்களை  செய்யும் நிலைக்கு தள்ளி, பிறகு அதற்காக நடவடிக்கை என்றால், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதையாகாதா?

''ஒரு தெருவில் ஓட்டுக் கேட்பது ஈமானை பாதிக்காது' என்பது உங்களின் நிலையானால், உறுப்பினர்களும் ஈமானை இழக்க கூடாது என்ற பேச்சுக்கு இங்கு வேலை இல்லையே? என்னுடைய கருத்து என்னன்னா...? என்று சொந்த கருத்தை கொண்டு வர வேண்டியதில்லையே? பொதுக்குழுவில் திருத்தம் என்றெல்லாம் புலம்ப வேண்டியதில்லையே?

ஆக, சகோதரர்களே! உள்ளாட்சியில் போட்டியிடுவது பைலா படி சரியென்றால், சட்டமன்றம்- நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்கள், மேலே பட்டியலிட்டுள்ள தீமைகள் அனைத்தும் உறுப்பினர்கள் செய்யலாம் என்று பீஜே அறிவிக்கத் தயாரா? என்பதுதான் நமது சவாலாகும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நபி[ஸல்] அவர்களின் திருமணங்கள்; பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்] அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளதை நாம் அறிவோம். இத்தனை திருமணங்கள் என்ன காரணத்திற்காக நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள் என்று அல்லாஹ் தனது வேதத்தில் கூறியிருக்க வேண்டும். [ஒரு திருமணம் நீங்கலாக] நபி[ஸல்] அவர்களின் வேறு திருமணங்களுக்கான காரணம் அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்படவில்லை. அடுத்து  சம்மந்தப்பட்ட நபி[ஸல்] அவர்களும் இத்தனை திருமணம் செய்ததற்கான காரணத்தை சொல்லவில்லை. ஆக குர்'ஆனிலும்-ஹதீஸிலும் இல்லாத சுய விளக்கம் தரமுயன்றால் அங்கே முரண்பாடு வரும் என்பதற்கு அறிஞர் பீஜே ஒரு அற்புத சான்றாக திகழ்கிறார். இவரது சுய விளக்கம் குர்'ஆன்- ஹதீஸோடு முரண்படுவது மட்டுமன்றி, இவருக்கு இவரே முரண்படுவதையும் நீங்கள் இப்போது படியுங்கள்;

நபி[ஸல்] அவர்கள் பல திருமணம் செய்தது ஏன் என்று தனது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் எழுதிய விளக்கத்தை அவரது தளத்தில் வெளியிட்டுள்ளார்  மவ்லவி பீஜே. பார்க்க;
அதில் நபி[ஸல்] அவர்கள்  ஒவ்வொரு மனைவியை திருமணம் செய்ததற்கும் இதுதான் காரணம் என்று சொல்கிறார். அவரது சுய வியாக்கியானம் எந்த அளவுக்கு குர்'ஆன்- ஹதீஸோடு மோதுகிறது என்பதை முதலில் இங்கே முன்வைக்கிறோம்.
  • அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ததற்கு பீஜே கூறியுள்ள  காரணம்;
அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் உயிர் நண்பராக இருந்ததால் ,தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுஅபூபக்கர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதன் பேரில்தான் ஆயிஷா[ரலி] அவர்களை நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் மணந்தார்கள்.

ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.[புஹாரி எண்; எண் 5081 ]

அபூபக்கர்[ரலி] அவர்கள் வற்ப்புறுத்தியதின் பேரில்தான் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்தார்கள் என்ற பீஜேயின் விளக்கத்திற்கு மாற்றமாக, நபி [ஸல்] அவர்கள்தான் அபூபக்கர்[ரலி] அவர்களை சந்தித்து பெண் கேட்கிறார்கள். அபூபக்கர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களை சந்தித்து என் மகளை மணந்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் கேட்கவில்லை. மேலும், நபி[ஸல்] அவர்கள், அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை பெண் கேட்டவுடன் அப்போது கூட அபூபக்கர்[ரலி] அவர்கள் உடனே சம்மதிக்கவில்லை. நான் உங்கள் சகோதரன் அல்லவா என்று கேட்கிறார்கள். பின்பு நபியவர்கள் விளக்கமளித்தபின் தான் ஒப்புக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க நபியவர்களை வற்புறுத்தி அன்னை ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்துவைத்தார் அபூபக்கர்[ரலி] என்று பீஜே கூறுவது ஹதீஸுக்கு முரணில்லையா..?
  • அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் மணந்து கொண்டதற்கு பீஜே கூறும் காரணம்;
 நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் தமது 56 வது வயதில் ஹஃப்ஸா[ரலி] அவர்கள் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர்[ரலி] அவர்களின் புதல்வியாவார். தமது விதவை மகளை  நபிகள் நாயகம்[ஸல்] மணந்துகொண்டால், நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர்[ரலி] அவர்கள் வற்புறுத்தியதுதான் இத்திருமணத்திற்கும்  காரணம் என்கிறார் பீஜே.

ஹதீஸில் பீஜே கூறும் விளக்கத்திற்கு மாற்றமாக உள்ளதை கவனியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)-குனைஸ் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்:எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன். அதற்கு உஸ்மான்(ரலி), '(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மான்(ரலி) என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றியது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூ பக்ர்(ரலி) அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான்(ரலி) அவர்களை விட அபூ பக்ர்(ரலி) மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு(ஒருநாள்) அபூ பக்ர்(ரலி) என்னைச் சந்தித்து, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். (அதற்கு) அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலோதும் கூறவில்லை). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருப்பேன்..[புஹாரி எண் 5122 ]

அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை, பீஜே  கூறியது போல் நபியவர்களை வற்புறுத்தி உமர்[ரலி] அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நபியவர்களுக்குத்தான் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை திருமனம் செய்துவைக்கவேண்டும் என்று உமர்[ரலி] அவர்கள் எண்ணியதுமில்லை. தமது விதவை மகளுக்கு எல்லா தந்தையும் செய்வதுபோல் மணம்  செய்துவைக்க உமர்[ரலி] அவர்கள் எண்ணினார்கள். அதற்காக உஸ்மான்[ரலி] அவர்களையும், பின்பு அபூபக்கர்[ரலி] அவர்களையும் சந்தித்து விருப்பமா என்கிறார்கள். இதற்கிடையில் நபியவர்கள் அன்னை ஹப்ஸா[ரலி] அவர்களை பெண் கேட்டதால் அன்னையை நபியவர்களுக்கு உமர்[ரலி] திருமணம் செய்துவைத்தார்கள். மேலும் நபியவர்களை சந்தித்து என்மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொல்லவேயில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. உண்மை இவ்வாறிருக்க நட்பு பலப்படும் என்பதற்காக நபியவர்களை வற்புறுத்தி அன்னையை திருமணம் செய்துவைத்தார் உமர்[ரலி] என்று பீஜே கூறுவது  ஹதீஸுக்கு முரணில்லையா..?
மேலும், மேற்கண்ட இரு திருமணங்களும்  நட்புக்காக நடந்தது என்று கூறி ஹதீஸுக்கு முரண்பட்ட பீஜே,  நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற தனது நூலில்,  ''நட்புக்காக அந்த திருமணங்கள் நடந்ததாக கூறுவது பொருந்தாத காரணம்'' என்று கூறி தனக்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
 நட்பைப்  பலப்படுத்துவதற்கா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே  இஸ்லாத்தை  ஏற்றுகொண்ட  உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த  உறவை   பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களை  செய்ய வேண்டிய  நிலைக்கு  ஆளானார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை  நபியவர்கள் திருமணம் செய்ததை  இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.
இந்தக் காரணமும் பொருந்தாக்  காரணேமயாகும். 
மேலும்,  திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே  இடைவெளி  எதுவுமிருக்கவில்லை.. இந்தத் திருமணங்கள்  நடந்திருந்தாலும் , நடக்காதிருந்தாலும்  அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை  எதிர்பார்க்காது தங்கள் தலைவராக  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை  நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.
இந்தக் காரணம் சரியென  வைத்துக் கொண்டாலும்  ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி  வருமேயன்றி அனைத்து  திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும்  ஏற்க இயலாது
.
                                ***************************************

அன்பானவர்களே! விளக்கம் என்ற பெயரில் குர்'ஆனுக்கும்-ஹதீஸுக்கும் முரண்படுவது மட்டுமன்றி, தனக்குத் தானே முரண்படும் இவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நபி[ஸல்] அவர்களின் ஏனைய திருமணங்கள் பற்றிய இவரது வியாக்கியானங்களும்- முரண்பாடுகளும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

புதன், 21 செப்டம்பர், 2011

நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? பீஜே அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு அந்நஜாத் செப்டம்பர் 1986 இதழில் அறிஞர் பீஜே அவர்கள் அளித்த பதில்;
 
கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா?
M. சேகு இஸ்மாயில் , தொண்டி.
 
பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், "அங்கே சூனியம் நீக்கப்படும்" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.
 
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மைதான் என்று அன்று சொன்ன அறிஞர் பீஜே, இன்று நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்று மறுக்கிறார். பார்க்க; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/
 
நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதற்கு ஆதாரமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட புகாரி உள்ளிட்ட ஹதீஸ்கள் இன்று பலவீனமாகி விட்டதால் மறுக்கிறாரா என்றால் இல்லை. அந்த  ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமனவைதான் என்று இன்றும் சொல்கிறார். பிறகு மறுப்பதற்கான முகாந்திரம் என்ன? இந்த ஹதீஸ்கள்  எல்லாம் குர்'ஆனோடு மோதுகிறது என்கிறார். 1986 ல் குர்'ஆனோடு மோதாத ஹதீஸ்கள், 2002 ல் 'பிரேக்' பிடிக்காமல் குர்'ஆனோடு மோதி விட்டதா?  மேலும் குர்'ஆனோடு நபிமொழி ஒரு காலத்திலும் மோதாது என்று இவரே வழங்கியுள்ள ஃபத்வாவை படிக்க;http://mugavai-abbas.blogspot.com/2011/08/blog-post_14.html
 
இப்படி மார்க்கத்தை இஷ்டத்திற்கு வளைக்கும் இவரது செயலுக்கு ஒரே ஆதாரம் வழக்கம் போல மனோஇச்சை தானே. சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

திருக்குர்ஆனோடு நபியின் கூற்று முரண்படுமா? பீஜே; அன்றும்-இன்றும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
 
திருக்குர்'ஆனோடு ஹதீஸ் ஒரு காலத்திலும் முரண்படாது என்று அறிஞர் பீஜே அன்று சொன்னது;
 
கேள்வி: குர்ஆன் வசனங்கள் ஸஹீஹான ஹதீஸ்களோடு சில நேரங்களில் முரண்படுகிறதே! உதாரணத்திற்கு "இறந்தவர்களை நீங்கள் செவியேற்கச் செய்ய முடியாது", "கப்ரில் உள்ளவர்களை கேட்க வைப்பவராக நீர் இல்லை" என்ற குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் எதிரிகளின் சடலங்களைப் பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு அவர்களை நோக்கி "உங்களிறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா?", என்று கூறிய போது உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இறந்தவர்களுடன் பேசுகிறீர்களே" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அவர்கள் இப்போது கேட்கிறார்கள்" என்று கூறினர். இங்கே ஆயத்தும் ஹதீதும் முரண்படுகிறதல்லவா?
O.P. அப்துல் மஜீது, சென்னை .

பதில்: அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று ஒரு காலத்திலும் முரண்படாது. மேலோட்டமாகப் பார்த்தால் சிலருக்கு அப்படித் தோன்றலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால், குர்ஆன் வசனத்தை விளக்கம் செய்யக் கூடியதாகவே ஹதீஸ் அமைந்திருக்கும். முதலில் நீங்கள் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம். "அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கேட்கச் செய்பவராக இல்லை" (அல்குர்ஆன்)
 
இதுதான் அந்தக் குர்ஆன் வசனம். இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் நாடியவர்களுக்குக் கேட்க செய்கிறான்" என்று குறிப்பிடுவதன் மூலம் இயற்கையாக அவர்களால் செவியுற முடியாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நாடினால் செவியேற்கச் செய்வான் என்பதை உணர முடிகின்றது. அதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய சொல் அமைந்துள்ளது. "அவர்கள் இப்போது நான் சொல்வதைச் செவியேற்கிறார்கள" என்ற சொல்லை, நீங்கள் உற்று நோக்குங்கள்! 'இப்போது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் எப்போதும் அவர்களால் செவியுற முடியாது, என்பதை விளங்கலாம். அந்தக் காபிர்கள் கப்ரில் வேதனையை மேலும் அதிகமாக்குவது இறைவனின் விருப்பமாக இருக்கலாம். இதை நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். நீங்கள் அணிந்துள்ள செருப்பு உங்கள் பேச்சைக் கேட்காது. ஆனால், அல்லாஹ் நாடினால் அதையும் செவியுறச் செய்ய முடியும் அல்லவா? ஒரு சந்தர்ப்பத்தில் "அல்லாஹ் தன் நாட்டப்படி செருப்பைச் செவியுறச் செய்கிறான்" என்று வைத்துக் கொள்வோம். அதிலிருந்து அந்த செருப்பு எப்போதும் நீங்கள் சொல்வதை செவியேற்றுக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த பத்ரு நிகழ்ச்சி அது போன்ற ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அல்லாஹ் நாடினால், எது, எதையும் கேட்க இயலாமல் இருக்கின்றதோ அதனையும் சில நேரங்களில் கேட்கச் செய்து தனது ஆற்றலை வெளிப்படுத்துகின்றான். இங்கே முரண்பாடு எதுவுமில்லை. விளக்கமாகத்தான் அமைந்துள்ளது
[மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்அந்நஜாத் செப்டம்பர்,1986 செப்டம்பர்,ஐயமும்! தெளிவும்!!]
 
அல்லாஹ்வின் கூற்றோடு அவனது தூதரின் கூற்று இன்று மட்டுமல்ல ஒரு காலத்திலும் முரண்படாது என்று அன்று ஆணித்தரமாக முழங்கிய அறிஞர், குர்'ஆனோடு நேரடியாக மோதுவது போன்ற ஹதீஸுக்கு விளக்கமளித்து குர்'ஆணுடன் நபிமொழி ஒரு காலத்திலும் முரண்படாது என்று நிலைநாட்டியவர்,  இன்று என்ன சொல்கிறார்?
 
''மிகச்சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்'ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி[ஸல்] அவர்கள் இதை கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறார்.
 
ஏனிந்த மாற்றம்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம்? 'குர்'ஆணுடன்  மோதுவது போன்ற கருத்துடைய ஹதீஸ் வந்தால் அது நான் சொல்லியதல்ல அதை புறக்கணியுங்கள் என்று நபியவர்கள் சொன்ன ஹதீஸை கண்டதால் வந்த மாற்றமா? இல்லை சகோதரர்களே! மனோ இச்சையால் வந்த மாற்றம் மார்க்கத்தை வளைக்குமாறு இந்த அறிஞரை தூண்டியுள்ளது. சிந்திப்பவர்கள் இவரின் முரண்பாட்டை விளங்கிக் கொள்வார்கள்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

தொடை மறைக்க வேண்டிய பகுதியா..? பீஜே அன்றும் இன்றும்!



இந்த மாதிரி டிரெஸ் போட்டு காத்தோட்டமா தொழுகைப் போங்க...
-என்கிறார்பீஜே  
 
 
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
2005 ஆம் ஆண்டு 'தொடை தெரிய டவுசர் போட்டு தொழலாம்' என்ற ஃபத்வாவை வழங்கி புரட்சி செய்த மவ்லவி பீஜே அவர்கள், தொடையை மறைப்பது குறித்து 1987 ஜூன் மாதம் அந்நஜாத் இதழில் அபூ  முஹம்மத் என்ற பெயரில் இஸ்லாத்தில் புறத்தோற்றம் -6  என்ற தொடரில் எழுதியவை உங்கள் பார்வைக்கு;
 
மறைக்கப்பட வேண்டியவை
"ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்" என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.
"உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது

தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.
குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் "அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா

"மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்

இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.

இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

"அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் "உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!" என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)
நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா

இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும்.
 
தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும் மறைக்கப்பட்ட வேண்டியவையே என்று அன்று ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக சொன்ன அறிஞர் பீஜே,  அன்று அவர் சொன்னதற்கு மாற்றமாக இன்று அந்தர் பல்டியடித்து தொடை தெரிய தொழலாம் என்று ஃபத்வா வழங்குகிறார். முன்பு எழுதியவை எல்லாம் மாயமாய் மறைந்து விடும் என்று எண்ணி விட்டாரா? இப்படி நாம் கேட்டவுடன் அன்று சரியென தெரிந்த பல விஷயங்களை இன்று நாம் ஆதாரம் கிடைத்தவுடன் மாற்றியுள்ளோம். அது போலத்தான் இதுவும் என்று பீஜெயோ அவரது அபிமானிகளோ சொல்ல முன்வருவார்களானால், இன்று தொடை தெரிய தொழலாம் என்பதற்கு எந்த ஹதீஸ்களை ஆதாரமாக பீஜே காட்டுகிறாரோ அதே ஹதீஸ்களை அன்றே அவர் ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு இப்படி கூறுகிறார்;  
''தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், தொடை தெரிந்ததாக வரும்  ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும். என்கிறார்.

இன்று தொடை மறைக்கப் படவேண்டிய பகுதியல்ல என்பதற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களை பற்றி மேற்கண்ட அதே  தொடரில் பீஜே எழுதியுள்ளதை படியுங்கள்;

ஒரு சில அறிஞர்கள் "இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது" என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.

1) "கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்"
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

2) "நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்"
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.

3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் "உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்" என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்
(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)

இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் "தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை" என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.
தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.

அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது 'கைபர்' போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.

இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.

நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.

நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். "நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்" என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.

ஃபத்வா விசயத்தில் மனோஇச்சைப்படி அவ்வப்போது மாற்றி மார்க்கத்தை வளைப்பவர் இந்த பீஜே என்பதற்கு இந்த 'தொடை' விஷயம் தெளிவான விடையாக உள்ளது. சிந்திப்பவர்கள் தெளிவு பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

சனி, 17 செப்டம்பர், 2011

வாழ்க என்று சொல்லலாமா? பீஜே அன்றும்-இன்றும்!


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தேர்தல் நேரத்தில் கலைஞர் டிவி நிகழ்ச்சி ஒன்றில், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் 'வணக்கம் சார்' என்று சொல்ல, பீஜே சொன்ன பதில் என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவின. ஒரு சாரார் பீஜே பதிலுக்கு வணக்கம் சொன்னார் என்றனர். ஆனால் பீஜேயும் அவரது தரப்பும் 'வாழ்க சார்' என்று தான் சொன்னோம் என்று அடித்துச் சொனார்கள். உங்களால் முடியுமென்றால் இந்த வீடியோவை பார்த்து பீஜே என்ன சொன்னார் என்று கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்;


இப்ப நாம் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட பீஜேயின்  வாக்குமூலத்தின் அடிப்படையில் 'வாழ்க சார்' என்றே சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் பீஜே சொன்ன 'வாழ்க சார்' என்ற வார்த்தையை சொல்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று பீஜே காட்டுகிறார். இந்த வாழ்க சார் என்ற வார்த்தைக்கு, '' நன்றாக வாழுங்கள்' என்று ஆசி வழங்குவது என்பதுதான் இதன் பொருள். இந்த வார்த்தையை சொல்லலாம் என்பது பீஜேயின் நிலை அன்று.

இன்று என்ன நிலை? இதோ பீஜேயின் வார்த்தையில் படியுங்கள்;

''வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்கள் கொள்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீங்கள் நன்றாக வாழுங்கள் என்று ஆசி வழங்குவது ஒரு அர்த்தம். நீங்கள் நன்றாக வாழ இறைவனை வேண்டுகிறேன் என்பது இன்னொரு அர்த்தம்.

நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற பொருளில் இதைக் கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆ செய்யும் பொது அனுமதியில் இது அடங்கும்.

ஆசி வழங்குதல் என்ற பொருள் கொள்பவர்கள் வாழ்த்துகிறேன் என்ற சொல்லை கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று ஒருவர் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று கருதுவதை ஏற்க முடியாது. அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது'' என்கிறார் பீஜே.
படிக்க;http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/eid_mubarak/

பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தின் படி, சண்முக சுந்தரத்தின் நலம்-மகிழ்வுக்காகவும், கவலைகள் நீங்கவும்  அல்லாஹ்விடம் துஆ செய்யும் அடிப்படையில் 'வாழ்க சார்' என்று பீஜே கூறியிருக்க முடியாது. ஏனெனில் அது முஸ்லிம் சகோதரர்களுக்கானது என்று அவரே சொல்லி விட்டார்.

பீஜேயின் மற்றொரு விளக்கபடி ஆசி வழங்கும் வகையில் தான் 'வாழ்க சார்' என்று பீஜே சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் வாழ்க என்று ஒருவரை வாழ்த்தினால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்பக் கூடாது என்று சொல்லும் பீஜே, அப்படி ஒரு ஆசியை ஏன் சண்முக சுந்தரத்திற்கு வழங்க வேண்டும்? பெருநாள் அன்று வாழ்த்துக்கள் சொல்வது ஃபித்அத் என்றால் இவர் சண்முக சுந்தரத்திற்கு 'வாழ்க சார்' என்று கூறி ஏன் அந்த ஃபித்அத்தை செய்தார்?

இப்ப பீஜே இப்படி பல்டியடிக்கலாம். அதாவது முஸ்லிம்கள் பெருநாள் அன்று வாழ்த்து சொல்வதை நன்மையான  காரியம் என்று கருதி செய்கிறார்கள். அதனால் அது ஃபித்அத். அனால் நான் 'வாழ்க சார்' என்று சொன்னது சம்பிரதாயத்திற்காக. எனவே இது பித்அத்தில் சேராது என கூற கூடும். முஸ்லிம்கள் யாரும் பெருநாள் வாழ்த்து சொன்னால் இத்தனை நன்மை கிடைக்கும்; அதனால் சொல்கிறோம் என்று இவரிடம் சொன்னார்களா? இவர் எப்படி சம்பிரதாயத்திற்காக வாழ்க சார் போட்டாரோ அதே மாதிரித்தான் முஸ்லிம்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த பெருநாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறார்கள். இவருக்கு மட்டும் கூடுமான ஒன்று ஏனைய முஸ்லிம்களுக்கு மட்டும் ஃபித்அத்ஆக மாறிவிடுகிறது.

இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றது; கூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
த்திய சஹாபாக்களை சகட்டுமேனிக்கு தனது நாராச நாவால் பீஜே அர்ஜிப்பதை இந்த வீடியோவில் பாருங்கள்;
நன்றி; மவ்லவி ஹாமித்பக்ரி மன்பஈ.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பொய்யர் பீ ஜே வுக்கு இரண்டு கேள்விகள்.

அல்லாஹ்வின் அழகிய திருநாமத்தால் .....

கடந்த சில வாரங்களாக சகோ:முகவை அப்பாஸ் அவர்கள், பொய்யர் பீ ஜே வின் மனோ இச்சைகளால் மார்க்க சட்டங்கள் முன்பும்  பின்பும் எப்படியெல்லாம்  மாற்றப்பட்டன என்பதை தக்க சான்றுகளுடன் "அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் சமூதாயத்தின் பார்வைக்கு எடுத்துரைக்கப்பட்டு அவருடைய மார்க்க தடுமாற்றத்தை அடையாளப்படுத்தி வருகிறார்.

"தான்" தடுமாறவில்லை நிதானமாகத் தான் இருக்கிறேன்! என்பதை உரிய சான்றுகளுடன் உரிய முறையில் விளக்கமளிப்பதிளிருந்து விலகி வெருண்டோடி வருகிறார் பொய்யர் பீ ஜே .இவரது ஓட்டமே இவரது தடுமாற்றத்தை உறுதி செய்ய போதுமானதாகும்.

சமுதாயத்தின் முன்னிலையில் சரிந்து கிடக்கும் தனது செல்வாக்கு மென்மேலும் சரிந்து விடாமலிருக்க "அப்பாசின் லீலைகள் "என்ற தலைப்பில் ஒரு உண்மையுடன்  பல பொய்களை புனைந்து  ஒரு ஆபாச தொடரை எழுதி வருகிறார்.

திரைப்பட இயக்குனரும், ஒரு கவிஞனும் தன்னிடம் தோற்று விடும் அளவுக்கு தொடரின் இடை இடையே  காம கவிதைகளை படைத்தும் கச்சிதமாக கதைகளை அமைத்தும் தனது கற்பனை காவியத்தின் கதாநாயகனாக அப்பாஸை அமைத்தும் அதை  நீல தளத்தில் பதிந்தும்  தனது அபிமானிகளை திருப்பதிப் படுத்தி வருகிறார்.சுருக்கமாக சொல்வதானால் பொய்யன்தளத்தை இயக்கி வருகிறார்.

சிறிதும் இறையச்சம் இல்லாத ஒரு மனிதராகவே  இவர் இருக்கவேண்டும். என்பதை தான்  இவரது  இந்த நடவடிக்கைகள் நமக்கு காட்டுகிறது.உண்மையிலேயே இறையச்சம் உள்ளவராக இவர் இருந்திருந்தால் எதற்கு விளக்கமளிக்க வேண்டுமோ அதற்க்கு மட்டும்  விளக்கமளித்திருப்பார் . மாறாக இவர் ஒரு "கோழை" என்பதால் தான்  தன்னை தற்காத்துக்  கொள்ள குறுக்கு வழியில் பயணம் செய்கிறார்.
குறுக்கு வழியில் பயணம் செய்வதென்பது இவருக்கு ஒன்றும் புதிதும் அல்ல!

இலங்கையை சேர்ந்த முஜாஹித் என்ற அறிஞர்,இந்த பொய்யரின் மார்க்க முரண்பாடுகளை சுட்டிக்காட்டி இவரது தோலை உரிப்பதற்கு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்த போது அவரிடமிருந்து தப்பி ஓடி ஒளிய இவர் கையில் எடுத்த ஆயுதமும் ஆபாசம் தான்.

அபூசுமையா என்ற சகோதரர் இவரது முரண்பாடுகளை சான்றுகளோடு சுட்டி காட்டிய பொழுது அவரிடமிருந்தும் தப்பி ஓடி புகழிடம் தேட  கையில் எடுத்த ஆயுதமும் ஆபாசம் தான்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பாக்கர் அவர்கள் ததஜ விலிருந்து விலகியதற்கு முழுக்க முழுக்கமுதல் காரணம் பொய்யர் பீஜே தான் என்று சான்றுகளுடன் சமுதாயப் பார்வைக்கு சமர்ப்பித்த பொழுது அதிலிருந்து தப்பி ஓடி புகழிடம் தேட கையில் எடுத்த ஆயுதமும் ஆபாசம் தான்.இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த வரிசையில் தான், தற்பொழுது  அப்பாஸ் தொடங்கி இருக்கும் "பீ ஜே அன்றும் இன்றும்"என்ற தொடரிலிருந்து ஓடி ஒளிந்து தன்னை தற்காத்துக்கொள்ள கையில் எடுத்த ஆயுதமும் ஆபாசம் தான்.
இனி இந்த பொய்யரை நோக்கி இரு கேள்வியை கேட்க்கின்றோம் .
1 ஆதமுடைய மகன் தவறு செய்பவன் என்பது அடிப்படை .தான் செய்த சிறிய பெரிய தவறை எண்ணி இறைவனிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடி அதிலிருந்து ஒரு மனிதன் விலகி விடுவானேயானால் அந்த தவறை சமுதாயத்தில் பரப்பி சுய ஆதாயம் அடைய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

2 சிறு தவறையும் யூகத்தின் அடிப்படையில்,தனது வார்த்தை வித்தைகளால் மிகைப்படுத்தி கூறுவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்கும் குர் ஆண் மற்றும் நபி ஸல் அவர்களின் வாழ்வியல் முறையிலிருந்தும் உறுதியாக நிருபித்து விட்டு தனது பணியை தொடரட்டும்.இல்லையேல் இவரது பேச்சும்,இவரது எழுத்தும் இவருக்கு எதிராக சாட்சி சொல்லும்  அந்த நாளை குறித்த இறைவசனத்துக்கு அஞ்சி அடங்கட்டும்.
“மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)
நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான். 78:40

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை. 6:51
அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். 7:8

நன்றி;- முபாரக்.

உள்ளாட்சியின் மூலம் அரசியல் வெள்ளோட்டம் விடும் ததஜ..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மார்க்கத்தில் நாளுக்கொரு பரிமானம் காணும் அறிஞர் பீஜேயும், அவரை தலைவராக கொண்டுள்ளவர்களும் அரசியல் விசயத்திலும் எடுத்த அவதாரங்கள் ஏராளம்; தாராளம். அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விட்டு அதை மறந்து வாரியத்தை வாங்கி வீரியம் இழந்து விட்டார்கள். நேரடியான அரசியலில் குதித்து விட்டார்கள் என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர் அணியினரை எகிறிக்குதித்து விமர்சித்த பீஜேயும் அவரை தலைவராக கொண்டவர்களும் இதோ அரசியல் எனும் சாக்கடையில்[அவர்கள் பாஷையில்] நீந்த இந்த உள்ளாட்சித் தேர்தலை வெள்ளோட்டம் பார்க்க தீர்மானித்துள்ளார்கள். ததஜவின் இந்த திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பார்ப்பதற்கு  முன்னால், அரசியல் குறித்த இவர்களின் கடந்த கால நிலைப்பாடுகளை கொஞ்சம் அசைபோடுவது இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.

கடந்த 1989 ஜனவரி  அல்ஜன்னத் இதழில் தேர்தல் குறித்து அறிஞர் பீஜே எழுதிய தலையங்கம்;

உங்கள் பொன்னான வாக்குகள்!
இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!

யாரைத் தேர்ந்தெடுத்தாலும்   லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85)

நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)
வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.

நன்றி:அல் ஜன்னத், நுழைவாயில், ஜனவரி 1989,

தேர்தலில் போட்டியிடும் யாரை தேர்ந்தெடுத்தாலும் அது தீமைக்கு துணை போனதாக அமையும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் அறிஞர் பீஜே. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து தமுமுக தொடங்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும்  அரசியல் இல்லை. ஆனால் யாரை ஆதரிப்பது என்பதை நாங்கள் தீர்மானிப்போம் என்று அறிவித்து அரசியலுக்கு புது அர்த்தம் கண்டார். ஜெயலலிதா கருணாநிதி என தான் ஆதரித்த அணிக்கு பிரச்சாரமும் மேற்கொண்டார்.

திடீரென தமுமுகவிலிருந்து விலகுவதற்கு அல்லது விலக்கப்படுவதற்கு முன்பாக, 'தேர்தல் களப்பணி ஆற்றினால் ஈமான் போய் விடும்' என்று ஏகத்துவத்தில் எதுகைமோனையோடு 2004  ல் எழுத்தோவியம் கண்டார்.

தமுமுகவிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்ட பின் தனக்கென ததஜவை உருவாக்கியபின், இது கொடி பிடிக்கும் கூட்டமல்ல; இது கொள்கை  கூட்டம் என்று கர்ஜித்தார். பின்னர் கொடி கண்டார்; கோஷமும் கொண்டார். அரசியலில் ஆதரவு நிலைப்பாடு கண்டார். அந்த கட்சிகளின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி, கருணாநிதிக்காக ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவுக்காக கருணாநிதியும் பழுக்க காய்ச்சி பழுத்த அரசியல்வாதியாக கரை சேர்ந்தார்.

இந்நிலையில், இவரின் பரமஎதிரியான தமுமுக அரசியல் களம் கண்டவுடன் 'மண்ணைக் கவ்வ வைப்பேன்' என்று மனுநீதி சிந்தனையில் முழங்கினார். முதல் தேர்தலில் முன்னுரை எழுதிய மமக, அடுத்த தேர்தலில்  இவரை மண்ணைக் கவ்வ வைத்து வெற்றியுரை எழுதியது. சட்டமன்றத்தில் தடம் பதித்தது. இது இவரை ரெம்பவே பாதித்து விட்டது  என்பதற்கு  சான்றுதான் இந்த நேரடி அரசியல் பிரவேச அறிவிப்பு.


"நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எந்த நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். உறுப்பினர்கள் கட்சி சாராமல் தனித்து போடியிடலாம். ஆனால் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் பிரச்சாரம் செய்யாது.

எனவே தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெயரையோ, கொடிகளையே எந்த வேட்பாளர்களும் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாவட்ட, கிளை நிர்வாகிகள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரச்சாரம், மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாநில தலைமை கேட்டுகொள்கின்றது."
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிக்கையில், ''ததஜ என்பது நேரடியாகவோ-மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடாது. நாங்கள் சீட்டுக்காக-நோட்டுக்காக சமுதாயத்தை அடகு வைக்கமாட்டோம்; எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று உங்களிடம் வரமாட்டோம் என்று இதுவரை சொன்னதற்கு  மாற்றமாக, தனது அமைப்பின் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று பீஜே தலைமையிலான ஜமாஅத் சொல்கிறது. நாங்கள் பைலா வைத்திருக்கிறோம். அந்த பைலாப் படிதான் எல்லாம் செய்வோம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்கும் பீஜேயும், அவரை தலைவராக கொண்டவர்களும் 'உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஒரு வரியை ததஜ பைலாவிலிருந்து காட்டுவார்களா?

இப்படி நாம் கேட்டவுடன் உறுப்பினர்கள் போட்டியிட பைலாவில் தடையிருக்கிறதா என்று வார்த்தை விளையாட்டு விளையாடுவார்கள். பைலாவில் அமைப்பின் செயல் திட்டங்கள் என்ற பகுதியில், 'உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. என்று உள்ளதே! பைலாவின் இந்த சட்டம் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாதா? உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்று காட்டமுடியுமா?

அடுத்து, இதே உள்ளாட்சித் தேர்தல் குறித்து பைலாவில் செயல்திட்டத்தில்  கூறும்போது, உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும்  ஆதரவாக கருத்துக் கூறுவதோ, அல்லது அமைப்பின் கொடியையோ, அமைப்பின் பெயரையோ பயன்படுத்துவது கூடாது. மேலும் அனைத்து மட்ட நிர்வாகிகளும், அனைத்து மட்ட செயற்குழு-ப்துக்குழு உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தலில்  பிரசாரம் செய்யக் கூடாது'  என்று விதி இருக்கிறது. ஆனால் இதே
உள்ளாட்சி தேர்தலில்  உறுப்பினர்கள் மட்டும் போட்டியிடலாம் என்ற விதி இல்லையே? 

மேலும், ''உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்'' என்று உள்ளதே! எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்பது அமைப்பின் கொள்கையல்லவா? அதற்கு மாற்றமாக தேர்தலில் போட்டியிடுபவர் எப்படி இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்க முடியும்?
மேலும் சில தவறுகளை செய்தவர்கள் மாநில-மாவட்ட-கிளை நிர்வாகத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறும் பைலா விதி, அந்த தவறுகள் பட்டியலில் 'உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுவதையும்' குறிப்பிடுகிறதே?

அப்படியானால் பைலா எதை  தவறென்று சொல்கிறதோ எந்த தவறை செய்தால் சாதாரண கிளை நிர்வாகி பதவியை கூட பெற தகுதி இல்லை என்று சொல்கிறதோ, அந்த தவறை அதாவது தேர்தலில் போட்டியிடக்கூடிய அந்த தவறை  மாநில நிர்வாகமே செய்யத் தூண்டுவது அமைப்பு விதியை மாநில நிர்வாகமே மீறுவது ஆகுமே?

 ததஜவின் இந்த புதிய அறிவிப்பு பிரகாராம் இன்றைக்கு உறுப்பினர் போட்டியிட அனுமதி; உள்ளாட்சியில் போட்டியிட அனுமதி. நாளை நிர்வாகிகள் போட்டியிட அனுமதி; சட்டமன்றம்-நாடாளுமன்றத்திற்கு போட்டியிட அனுமதி. [மறைவான ஞானமா? என்று கேட்க வேண்டாம். ததஜவின் வெளிப்படையான நடவடிக்கையை  வைத்து செய்யும் கணிப்பு இது]

இதையெல்லாம் விட, பீஜே தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உள்ளாட்சியில் போட்டியிட்டு மேயரானாலும் தடுக்க முடியாதே? ஒரு வேளை அதற்கான முன்னோட்டம்தான் இந்த வெள்ளோட்டமோ? அல்லாஹ்வே அறிந்தவன்.

உங்கள் ஒட்டு ததஜ'வுக்கே!

நபி[ஸல்] அவர்களை, பீஜே மனநோயாளியாக கருதினாரா?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
நபி[ஸல்]அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதை நம்பினால் நபி[ஸல்] அவர்களை மனநோயாளி ஆக்கப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம் என்று இந்த வீடியோவில் அறிஞர் பீஜே சொல்கிறார். அப்படியானால்,
நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மைதான்  என்று அழுத்தம் திருத்தமாக 
அன்று பீஜே சொல்லிக் கொண்டிருந்தாரே! அப்போது நபியவர்களை பீஜே மனநோயாளியாக கருதினாரா?
 
நபி[ஸல்] அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட காலகட்டத்தில், இரு விசயங்களை மாற்றிச் சொன்னார்கள் என்று ஹதீஸில் வருவதை வைத்து,  அப்படியானால் நபி மென்டலா? மனநோயாளியா? என்றெல்லாம்[நவூதுபில்லாஹ்] இவர் வர்ணிக்கிறாரே! நமது உயிரும் மேலான நபியை பற்றி இவ்வாறு சிந்திப்பதும், 
அதை வார்த்தையால் 
வெளிப்படுத்துவதும் மாபாவம் என்பதை பற்றி எல்லாம் இவருக்கு கவலையில்லை. நபி[ஸல்] அவர்கள் இரு விசயங்களில் மாற்றிச் சொன்னார்கள் அதுவும் உலகம் சார்ந்த இரு விசயங்களில் மாற்றிச் சொன்னார்கள் என்பதால், சராசரி மனிதனோடு ஒப்பிட்டு மென்டலா என்ற தோற்றத்தை சைகையில் காட்டும் இந்த பீஜே, அல்லாஹ்வின் மார்க்கத்தில் அடுக்கடுக்காக முரண்பட்டுள்ளாரே! அப்படியானால் இவரை முத்திய மெண்டல் எனக்கூறலாமா?
 
எல்லாம் வல்ல அல்லாஹ் பீஜேயின் சூன்யப்  பேச்சிலிருந்து  முஸ்லிம்களை பாதுகாப்பானாக!
 
பார்க்க வீடியோ;http://www.youtube.com/watch?v=GQlZ4-lghEQ&feature=related